பொது

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் நாற்பத்து மூன்றாம் கருத்தரங்கம் – அறிவிப்பு

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் நாற்பத்து மூன்றாம் கருத்தரங்கம் பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் 2012 மே மாதம் 19,20 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.  இந்தக் கருத்தரங்கில் பல்கலைக்கழகம் /கல்லூரி / நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகளை வழங்கலாம்.

பதிவுக்கட்டணம் ரூ. 500.  உடன் வரும் விருந்தினர் கட்டணம் ரூ. 150.  கட்டணங்களை ALL INDIA UNIVERSITY TAMIL TEACHER’S ASSOCIATION, MADURAI – 625 021 என்ற முகவரியில் மாற்றும் வகையில் வரைவோலையாக அனுப்ப வேண்டும்.

கட்டுரைகள் 5 பக்க அளவில்(டெம்மி அளவில்) அச்சில்வரும்படி இருக்க வேண்டும்.

கருத்தரங்கு நிகழிடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், 59,அண்ணாசாமி முதலியார் சாலை, பெங்களூர்- 560 042.

நாள்: திருவள்ளுவர் ஆண்டு 2043, (2012 மே 19-20)

ஆய்வுக்கட்டுரை, பேராளர் கட்டணம் அனுப்ப இறுதிநாள் 31.12.2011.

தொடர்பு முகவரி:

முனைவர் மு.மணிவேல் அவர்கள்,

செயலர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்,

தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,

மதுரை –  625 021

தொடர்பு எண்கள்; +98655 34622 / +94886 16100

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க