அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (03.05.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

10 thoughts on “படக்கவிதைப் போட்டி – 256

 1. வீட்டிலிருப்போம்…

  பூட்டும் போனதே பணியின்றி
  புதிதாய் வந்தநோய்ப் பகையாலே,
  வீட்டைப் பூட்டத் தேவையில்லை
  வெளியே செல்ல வேண்டாமே,
  வாட்டும் நோயது தொற்றிடாமல்
  வருந்திடா திருப்போம் வீட்டினுள்ளே,
  ஓட்டி யதனை விரட்டும்வரை
  ஒன்றா யிருப்போம் ஒட்டாமலே…!

  செண்பக ஜெகதீசன்…

 2. ஒருநாள். தேவைப்படுவாய் என்றுதான் பூட்டே உன்னை வேலியினில் பத்திரமாக்கி இருக்கிறேன்…

  வேண்டாத பொருளென எதுவும் இல்லாத உலகில்
  வேண்டும் பொருளாகிய உன்னை பார்வை படும்படி பத்திரப்படுத்தி இருக்கிறேன்

  அறிவைத் திறப்பது நூல் என்றால் உன்னை திறப்பது சாவி

  அன்பைத் திறப்பது மனிதநேயம் என்றால் உன்னைத் திறப்பதும் சாமி

  மவுனம் கடைபிடிக்க வாய்க்கு வார்த்தை பூட்டு என்றால் தேவைப்படும் நேரத்தில் பூட்டே நீ பூட்ட தேவைப்படுவதால் இப்போது கண்முனணே பூட்டப்பட்டு இருக்கிறாய்

  தனிமைச்சிறையில் நீ மட்டுமில்லை என் பூட்டே

  உலக மாந்தர்கள் பலர் ஊரடங்கு தனிமைச் சிறையில்

  நீயாவது வெளி உலகைக் காண்கிறாய்

  உன்னை தொங்கவிட்டு வீட்டிற்குள் யானோ ஒரு மண்டலம் நோக்கி..

  S.Kanthimathinathan
  59B upstairs
  M:R.S Compound
  Vakkil street
  Konjam 628 501
  Mob 94435 54012

 3. உபயோகமில்லை என நினைக்காதே…உபயோகப்படுவாய் என நினைத்தே பாதுகாப்பான இடத்தில்.. பாதுகாக்க இடமா இல்லையென கேட்கலாம்.. பத்திரமாக உன்னை வைத்து இருப்பதே யான் கொரானாவில் இருந்து தப்பிக்கவே…காலை மதியம் இரவு மூன்று வேளையும் உணவு உண்ண வருவார்கள் வீடற்றோர்..வீடிருந்தும் கையில் காசு அற்றோர்..வெளி மாநில என் இந்திய சொந்தங்கள்…காலை ஆறு மணிக்கு உன்னைத் திறந்து இரவு பத்து மணி வரையில் தான் பாதுகாப்பாக இங்கே தொடங்குகிறாய்.

  எந்தக் கைரேகையும் உன்மீது பட்டு நான் தொட்டுவிட்டால் எனது தொண்டு தடைபடுமே என்பதாலே

  எவர் கண்ணிலும் படாமல் என் கண்களுக்கு படும்படி

  S.Kanthimathinathan
  59b upstairs
  M.R.S.compound
  Vakkil Street
  KOVILPATTI
  Mob 94435 54012

 4. கவிதைப் போட்டி 256

  பூட்டு

  எங்கெங்கோ தேடுகிறேன்
  இங்கேயா நீயிருந்தாய் ?
  வேலியின் மீதுன்னை
  வேண்டாமென தொங்கவிட்டோம்

  வண்ணக் கதவுகளை உன்னை
  வைத்துப் பூட்டிடலாம் – எங்கள்
  எண்ணக் கதவுகளை – எதைவைத்து
  பூட்டுவது ?

  என்னுள்ளே எண்ணங்கள் வந்து
  ஏதேதோ பந்தலிடும் – ஒன்றிரண்டு
  உன்னிடத்தில் நான் இங்கு
  உரைத்திட வந்துள்ளேன்

  எப்படிக் கேட்பதன்று பூட்டே உனக்கு
  ஏன் இத் தயக்கம் ? உனக்குத்தான்
  இரு செவிக்கு பதில் ஓர் துளை
  இருக்கிறதே ! கேள்.

  இயற்கையை மறந்து விட்டு
  இயந்திரமாகிவிட்டோம்…
  விழிகளை விற்று விட்டு
  வீண் ஓவியங்கள் வாங்கிவிட்டோம்

  உல்லாச வாழ்வதனில்
  உயர் மூதோர் சொல் மறந்தோம்
  கொரோனாவின் கரங்களால்
  கோரமாகிப் போய் விட்டோம்.

  ஊரடங்கு வந்து எங்கள் காதுகளில்
  உரைத்தது, அது எங்களுக்கும் உறைத்தது
  விண்ணகத்து மூதோர் உரை
  விரைவாக புரிந்து கொண்டோம்

  சுத்தமும் , விலகலுமே
  சுகமென்று அறிந்து கொண்டோம்
  திறவுகோலைக் கண்டுகொண்டு
  திறந்து விட்டோம் மனப் பூட்டை

  சீர் காவலரும், மருத்துவரும் ,
  செவிலியரும், துப்புரவுத் தோழர்களும்
  பாங்காக உழைத்தார்கள் பாரினிலே
  பூட்டே எங்களுக்கு புரிந்தது தெளிவாக.

  வேட்கைகளை விட்டொழித்தோம்
  விடியல் வரக் காத்திருந்தோம்
  அன்பு சூழ் உலகு என்று
  அனைவருமே அறிந்து கொண்டோம்.

  ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன்

  .

 5. சாவி இல்லையேல் பூட்டே நீயில்லை..யாரிடம் சாவி இருக்கிறதோ அவருக்கே நீ சொந்தம்..திருடனிடம் செல்லாது உனது வைராக்கியம்.. குறுக்கு வழியில் செல்வதற்குத்தான் நீயும் வழி விடுகிறாய்..பலப்பல பூட்டுகள் உடைக்கப்பட்டு தான் கொலை கொள்ளைகள்…உடைபட வேண்டாமே என்பதற்காக பாதுகாப்பு தேடிக் கொண்டாயோ..

 6. படக்கவிதை எண் ; 256

  பசுமைச் செடிக்குக் காவல்போடப் பூட்டு
  சரியே
  இல்லையெனில்
  வரைப்படம் வரைந்து வானுயரடுக்கு மாடி ஆகிடுமோ?
  விலைக்கு வாங்கக் கூட்டம் ஏராளமிருக்க
  பசுமைச் செடிக்குப் பூட்டு
  சரியே

  சுதா மாதவன்

  **************

 7. பசுமைச் செடிகளைப் பார்க்கும் போது
  பரவசம் மனதில் தோன்றுதே
  செழுமையின் பிரதிபலிப்பேயென சிந்தனைக் கொள்ளத் தோன்றுதே

  பூட்டினைப் போட்டு பசுமையைக் காக்க
  இன்றைய காலம் உருவானதே
  வளமிகு ஆற்றின் மணலை அள்ளி
  பணம் தினம் பார்க்கத் தோணுதே

  பாய்ந்தோடும் நதிக்கரையினிலே
  பலமிகு வீடுகள் உருவானதே
  ஏரினை உழுது சோறினைப் புடைக்கும்
  விவசாயிக் கண்ணில் ஏக்கம்தான் தெரியுதே

  இவைகளைத் தவிர்த்து எங்கும் பசுமையைக் கொணர்ந்து
  வளமிகு வாழ்வை உருவாக்குவோம்
  நோயினாலான சிவப்பு மண்டலம்
  பசுமையாய் மாற்றி
  பாரதம் செழிக்க உதவுவோம்
  நாம் இந்தியரென்றே உணர்த்துவோம்

  சுதா மாதவன்

 8. கத்தியின்றி ரத்தமின்றி
  யுத்தமொன்று நடக்குது
  இருட்டுக்குள் எதிரியைத்தேடி
  என்னென்னவோ நடக்குது

  வெறிச்சோடிய வீதிகளில்
  விலங்குகளதான் அலையுது
  வீட்டிற்குள் முடங்கி கிடந்து
  விரக்தியிலே மனம் தவிக்குது

  மூக்குமூடி வாய்பொத்தியே
  திருமணங்கள் நடக்குது
  எடுத்து செல்ல ஆடகளின்றி
  இறுதி யாத்திரைகள் நகருது

  பாதிக்கப்பட்டோர்
  பலியானோர்
  மீண்டோர்
  பட்டியலை பார்த்து பார்த்து
  பார்வை கூட மங்குது

  மூன்று திங்களாய்
  கொரானா என்னும்
  ஒற்றை சொல்லில்தான்
  உலகம் முழுமையும் சுழலுது

  எங்கிருந்தோ எதிலோ வந்து
  எங்கிருப்போர் உயிரையெல்லாம்
  ஏலம் விட்டு சிரிக்குது
  உலகாண்ட தேசமெல்லாம்
  செயல் மறந்து நிற்கிறது

  வேலியில் இட்ட பூட்டு அது
  வழி அடைத்தது எவ்வாறு
  விபரம் சொல்ல எவருமில்லை
  நாளை இந்த நிலை் மாறுமென
  நம்பிக்கைத் தரவும் யாருமில்லை

  ஆனாலும்
  பூட்டை த் திறக்க
  புதிய சாவியொன்று
  நிச்சயமாய் கிடைக்கும்
  பூமி பந்து அன்று
  புதிதாய் சுற்றும்!

 9. புது வேலி

  புதுமைகள் புகும் நல்வேலையிலே
  கலாச்சாரக் காவலன் நாமென்றுக் கூவிப்
  பழமை என்னும் பூட்டுக்குப்
  புது வேலி செய்துக் காவலிட்டோம்..

  கண்ணியமான அன்பதனைக்
  கடிவாளம் போட்டு ஒதுக்கி வைத்தோம்
  காமக்களிக் கூத்தினையே – உண்மைக்
  காதல் என்றேக் காட்சி செய்தோம்..

  அமைதி சாந்தி அகிம்சையெலாம்
  அடிமைத்தனம் என்றொதுக்கி
  வன்மமும் வன்முறையம் வீரமென்று
  வருந்தலைமுறைக்குப் பாடம் சொன்னோம்..

  உண்மை நேர்மை என்பதெல்லாம்
  வெற்றிக்குதவா வீண்செயலாக்கி
  பொய்யும் புரட்டும் திறமையென -புது
  தத்துவம் செல்லி வாழுகின்றோம்…

Leave a Reply

Your email address will not be published.