Tag Archives: சக்திசக்திதாசன்

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (278)

சக்திசக்திதாசன்   அன்பினியவர்களே !   அன்பான வணக்கங்கள். அதற்குள் ஒருவாரம் பறந்தோடி விட்டதா? காலம் எனும் இந்தக் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது போலிருக்கிறதே ! எது எப்படியாயினும் இதோ இந்த வாரத்தில் இங்கிலாந்தின் செய்திகளோடு உங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். வாரம் வந்து போன வேகம் போல எம்மிடையே ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் ஜனாதிபதி திரு டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் எம்மிடையே வந்து விட்டு சென்று விட்டார். அவர் அமெரிக்க ஜனாதிபதி ஆனதும் முதல் வெளிநாட்டுத் தலைவர் அவரைச் சந்திக்கச் ...

Read More »

கவியரசர் படைப்புகள் – ஆன்மீகக் கோணம் …. 2

ஆகாயம், வெண்ணிலவு, கடலலைகள், ஆதவன் இவையனைத்தும் தத்தம் கடமைகளைச் சரியான நேரத்தில் சரியான வகையில் புரிகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தி ஒழுங்கமைத்த சக்தி எது? எனும் கேள்வி பல சமயங்களில் எமது உள்ளங்களில் எழுவது சகஜம். இவற்றை நடைமுறைப்படுத்த ஒரு சக்தி தேவையில்லையே! இவைகள் இயற்கையின் நிகழ்வுகளே என ஒரு சாரார் வாதிடக் கூடும். அவ்வியற்கையையே நமக்கு அப்பாற்பட்ட சக்தி என்று எண்ணிக் கொள்வோமானால் அச்சக்தியை வழிபடுவதும் ஒரு இயற்கை நிகழ்வே ! . இத்தகைய விளக்கங்களைக் கவியரசர் மிக எளிமையான தனது பாடல்களில் புகுத்தி ...

Read More »

காலத்தால் அழியாக் கவிஞன்

சக்திசக்திதாசன் ஜூன் 24 எப்படி தன்னைப் பெருமையாக்கிக் கொண்டது ? இந்த தினத்தில் எத்தனையோ நிகழ்வுகள் நடந்தேறியிருக்கலாம். . எத்தனையோ கோடி மக்கள் பிறந்திருக்கலாம் அன்றி இறந்திருக்கலாம். ஆனால் இத்திகதி தமிழர்கள் அனைவரையும் தன்பால் இழுக்க வைக்கும் ஒரு மாபெரும் நிகழ்வுக்கு வித்திட்டது. ஆம் தாய்த்தமிழகம் என நாம் போற்றும் தமிழ்நாட்டில் சிறுகூடல் பட்டியில், மலையரசித் தாயின்மடியில் முத்தாக ஒரு முத்தையாவை தமிழன்னை விசாலாட்சி எனும் சிப்பியினுள் விளைய வைத்தது.. விளைவு ! உலகத்தமிழர்களுக்கெல்லாம் காலத்தால் அழியாத கவிஞனை ஈந்து ஜூன் 24 தன்னை ...

Read More »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (240)

சக்திசக்திதாசன் அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்களுடன் இவ்வாரம் உங்களை இம்மடல் மூலம் வந்தடைவதில் மகிழ்கிறேன்.. இங்கிலாந்து நாட்டினை வெப்பாலை கடந்த சில நாட்களாக தகிக்கப் பண்ணிக் கொண்டிருக்கிறது. என்னடா இது ? இங்கே சுட்டுப் பொசுக்கும் வெப்பத்தில் தவித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு இங்கிலாந்தின் வெப்பத்தைப் பற்றி இதென்ன புதுக்கதை ! என்று அங்கலாய்ப்பது புரிகிறது. ஆனால் இங்கிலாந்து நாட்டின் சாதாரண காலநிலைகளையும், வெப்பச்சூழலையும் பொறுத்த அளவில் இது அசாதாரணமானதுவே. .நேற்றைய வெப்பநிலை வெப்பமானியில் அதியுச்சமாக 34 பாகைகளை எட்டிப்பிடித்தது./ இது இங்கிலாந்தின் ஜூன் மாத ...

Read More »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (138)

சக்திசக்திதாசன் அன்பினியவர்களே ! இனிய வணக்கங்கள். 2015ம் ஆண்டில் இரண்டாவது மடல் உங்களுக்கு வரைந்து கொண்டிருக்கிறேன். காலத்தின் வேகத்திற்கு எம்மால் ஈடு கொடுத்து ஓட முடிகிறதா ? கோடை, வசந்தம், மாரி என வருடங்கள் தமது விலாசங்களுக்கூடாக பறந்தோடிக் கொண்டிருக்கின்றன. வருடங்கள் பறந்தோடினால் என்ன? என்று வாளாவிருக்க முடியாமலிருக்கிறதே ! வருடங்களோடு சேர்ந்து உனது வயதும் உருண்டோடிக் கொண்டிருக்கிறது என்று எமக்கும் மேலே இருக்கும் ஒருவன் நரை முடிகள் மூலம் எமக்கு ஞாபகமூட்டிக் கொண்டிருக்கிறான்.. 1975ம் ஆண்டு ஜனவரி மாதம் 6ம் திகதி எனது ...

Read More »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (137)

சக்திசக்திதாசன் அன்பினியவர்களே இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். அவசரமாக ஓடி மறையும் 2014 இலிருந்து பொலிவுடன் புலரும் 2015க்குள் நுழையும் வேளையில் இவ்வருடத்திற்கான முதலாவது மடலுடன் உங்களுடன் உறவாட விளைகிறேன். எத்தனையோ நிகழ்வுகள் சில மகிழ்ச்சியானவை சில துயரமானவை, சில வியப்பானவை, சில விசித்திரமானவை ஆனால் அனைத்தும் நடந்து முடிந்தவையே. முடிந்தவைகளுக்குள் எம் மனதைப் புதைத்து அழுந்திக் கிடப்பதை விடுத்து நடந்தவைகளை நல் அனுபவங்களாக்கி அதன் அடிப்படையில் புதிய வருடத்தினுள் புது உணர்ச்சியுடன் , புது வேகத்துடன் செயற்பட எனது அன்பு மிகுந்த வாழ்த்துக்கள். ...

Read More »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(73)

 சக்திசக்திதாசன் அன்பினியவர்களே ! அன்புடை வாசக உள்ளங்களுடன் அடுத்தொரு மடலில் இணைவதில் மகிழ்கிறேன். இங்கிலாந்து பல்வேறு இனத்தவர் , பல்வேறு சமூகங்கள் இணைந்து வாழும் ஒரு பல்லினக் கலாச்சாரம் கொண்ட நாடு. எதனது பல்லினக் காலாச்சார வாழ்வில் இனக்களுக்கிடையே உள்ல இணக்கப்பாடு எத்தனை முன்னில்லை கொண்டதாக இருந்தாலும் காலத்துக்குக் காலம் பொருளாதார ச் சீர்கேடு கொடுக்கும் நெருக்கடியாலும், அடிமனதில் ஊறி நிற்கும் நிறவெறி, இனவெறி ஆகியவற்றின் தாக்கங்களையுடையவர்களின் பிரச்சாரத்தாலும் இங்களுக்கிடையெலேயான முறுகல் நிலை பல்வேறு நாடுகளிலும் ஏற்படுவதுண்டு. இங்கிலாந்து இதற்கொன்றும் விதிவிலக்கான நாடு அல்;ல. ...

Read More »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(48)

சக்தி சக்திதாசன்           அன்பினியவர்களே ! இங்கிலாந்திலிருந்து இனிய வணக்கங்கள் . “அரசனுக்கொரு காலம் வந்தால் புருஷனுக்கொரு காலம் வரும் ” என்றொரு முதுமொழி உண்டு. அதே போல ஆங்கிலத்தில் உள்ள முதுமொழி ஒன்று “If the mountain will not come to Muhammad, then Muhammad will go to the mountain” அதாவது மலை முகமதுவிடம் வராவிட்டால், முகமது மலையிடம் போக வேண்டும். ஆமாம் காரியம் ஆக வேண்டுமானால் யார் பெரியவர் என்று பார்த்துக் ...

Read More »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (34)

  சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! ஆணும், பெண்ணும் உலகில் சமநிலை கொண்டவர்கள் எனும் கருத்தை நிலைநாட்டுவதற்காக சிவன் அர்த்தநாரீசுவரராக தன்னைக் காட்டியதாகப் புராணங்களில் அறிகிறோம். வாழ்வும் சமயமும் பிணைந்து இருப்பது உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. கடவுள் என்றொரு சக்தி இருக்கிறதா? இல்லையா என்னும் விவாதம் பல்வேறு நாட்டவர்களிடமும், பல்வேறு வகைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே சமயம் விடை தெரியா வினாக்கள் , விளக்கமில்லா நிகழ்வுகள் இப்பிரபஞ்சத்தில் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன. உள்ளத்தூய்மை, உள்ள ஒழுக்கம் என்பனவற்றின் முக்கியம் ...

Read More »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் … (33)

  சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! காலவேகத்தின் பரிணாம மாற்றம் நாகரீகம் எனும் போர்வையில் உச்சத்தை எட்டிப்பிடிக்கின்ற ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாகரீகம் எனும் சொல்லின் அர்த்தத்தை ஒவ்வொரு சமுதாயமும் தனக்குப் பிடித்த  வகையில் மாற்றியமைத்து தமது கண்மூடித்தனமான நடத்தைகளை நாகரீக வளர்ச்சி என்று நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு காலம் இது. ஒரு காலத்தின் நடைமுறை மற்றொரு காலத்திற்கு ஒவ்வாத நிலமை ஏற்படுவது சகஜம். காலத்திற்கேற்ப சில சில விடயங்களில் மனிதர்கள் தமது வாழ்க்கைமுறையை மாற்றியமைத்துக் கொள்ள‌ வேண்டிய தேவை இல்லாமல் இல்லை. ...

Read More »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …….. (2)

  சக்திசக்திதாசன் சனிக்கிழமை (07.04.2012) காலை எழுந்து காப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ” இந்த ஈஸ்டர் விடுமுறைக்கு என்ன வித்தியாசமாகப் பண்ணலாம்?” என என் மனைவி வினவ இருவருமே மண்டையைப் போட்டுத் துருவினோம். விளைவு …… காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு அண்மித்த ரயில்வே ஸ்டேசனுக்கு அருகில் சென்று காரை நிறுத்தி விட்டு பேருந்துப் பயணத்திற்கான டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு பேருந்தில் ஏறி உட்கார்ந்தோம். பேருந்துப் பயணத்தில் நாங்களிருவருமே சிறு குழந்தைகள் போன்றே மகிழ்வுடன் இரட்டை தட்டுப் பேருந்தில் மேல்தட்டில் அமர்ந்து கொண்டே ...

Read More »