Tag Archives: தமிழ்முகில் நீலமேகம்..

நன்றி

பி.தமிழ்முகில் நீலமேகம் பார்கவி  அந்த அடுக்குமாடிக்   குடியிருப்பிற்கு  வந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது. அவர்களது அடுக்குமாடித் தொகுதியில் மூன்று தளங்கள் இருந்தன. இவர்களது  வீடு முதல் மாடியில் இருந்தது. தரை தளத்தைத் தாண்டி முதல் தளத்துக்கு வருமுன் உயிரை கையில் பிடித்துக் கொண்டே தான் வருவாள் பார்கவி. அவளது மகள் மகி குட்டிக்கோ, அதைவிட பெரும் பயம். எப்போதும் அந்த தரை தளத்தினைத் தாண்டும் வரை அம்மாவை ஒண்டிக் கொண்டே தான் செல்வாள். இவர்களது பயத்திற்கான காரணம், தரைதளத்தில் இருக்கும் மூன்றாம் எண்  ...

Read More »

நினைவுகள் !!!

பி.தமிழ்முகில் நீலமேகம்   ஏடெடுத்து எழுதி வைக்க எத்துனையோ நினைவுகளுண்டு !!! நினைவுகளை எல்லாம் வண்ண மலர்ச்சரமாக்கி அம்மலர்களின் சுகந்த நறுமணத்தில் இலயித்திருக்க பொழுதேது ???     காற்றினில் கலந்து வந்து நாசியில் படிந்திடும் – மலரின் நறுமணம் போல் நினைவலைகளில் கலந்து வந்து நெஞ்சமதில் இனித்திடும் இனிய  இன்ப நினைவுகள் !!!     கதிரவனின் ஒளி பட்டு மெல்ல விலகி   ஓடும் பனித்திரை என – உள்ளமதில் படிந்த  துன்பச் சுவடுகளை துடைத்தெறியும் பேரலையென மகிழ்வான தருணங்களின் நினைவலைகள் !!! ...

Read More »

ஆசான்

பி.தமிழ்முகில் நீலமேகம்   அன்னையும் பிதாவும் கொடுத்த அறிவினை சுடர் விட்டெரிய செய்யும் தூண்டுகோல் !!!   கண்டிக்கும் வேளையில் சற்று கரடு முரடு தான் கற்றுத் தரும் ஆசான்கள் எப்போதும் !!!   அவர்தம் உள்ளந்தனில் மாணாக்கரின் நினைவுகள் என்றென்றும் – நினைத்தாலே இனிக்கும் கற்கண்டுகள் !!!   கற்ற கல்வியையும் -பெற்ற அனுபவத்தையும் நாளும் போதனை மூலம் உலகிற்கு பரப்பிடும் ஒளி விளக்குகள் !!!   அன்றாடம் கற்பித்தலின் மூலம் தானும் கற்றுக் கொண்டே இருக்கும் வளர்ந்து விட்ட பிள்ளைகள் -ஆசான்கள்!! ...

Read More »

பெண்மை !!!

  பி.தமிழ்முகில் நீலமேகம்   மகளிர் தினம் அன்னையர் தினம் என்று சொற்ப நாட்கள் மட்டும் கொண்டாடப் படவேண்டியதல்ல பெண்மை !!! என்றென்றும் மனதில் மரியாதைக்குரிய ஒன்றாய் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே பெண்மை !!! அன்னையாய் சகோதரியாய் மனைவியாய் தோழியாய் எத்துனையோ பரிணாமங்களில் பெண்மை !!! நாம் வாழும் வாழ்வு பெண்மையன்றி முழுமையடைந்திடுமோ ?? நம்மை உலகிற்கு அறிமுகப் படுத்தியவள் பெண்ணன்றோ ?? பெண்மையை போற்றி வணங்க வேண்டாம் …… அவர்தம் உள்ளம் தனை புரிந்து கொண்டாலே போதும் !!! அதிகாரம் செலுத்துவதாய் எண்ண ...

Read More »

ஒரு மரத்தின் நாட்குறிப்பேட்டிலிருந்து ….

  பி. தமிழ்முகில் நீலமேகம்     ஒரு மரத்தின் நாட்குறிப்பேட்டிலிருந்து :   நிலத்துடன் உறவாடி காற்றுடன் கதை பேசி மேகத்துடன் நட்பு பாராட்டி எத்தனையோ புள்ளினங்களை எம் கரங்களில் தாங்கி தஞ்சம் கொடுத்து மனித குலத்திற்கு எம்மையே அர்ப்பணித்து தியாகச் சுடராய் உயிருடன் இருக்கும் போதும் மரித்து விட்ட பின்பும் ஏதேனுமொரு வகையில் பயனுளதாய் – எடுத்த பிறவியின் நோக்கம் தனை நிறைவேற்றிடும் நாங்கள் – மண்ணின் மைந்தர்களன்றோ ?? எங்களைக் காத்தல் உங்களின் கடமையன்றோ மனிதர்களே ?? இன்று உங்கள் ...

Read More »

பெண்களென்ன நாய்க் குட்டிகளா ???

பி.தமிழ் முகில் நீலமேகம் வினோதினி… வித்யா…. இன்னும் எத்தனை வனிதையர்  ஆசிட்டின் அகோரப் பசிக்கு இரையாகி – துடித்து பலியாயினரோ ???   காதல் வந்துவிட்டது – உன்மேல் எனக்கு !!! ஒற்றை வார்த்தையைக் கேட்டதும் – உங்கள் பின்னால் ஓடிவர பெண்களென்ன நாய்க் குட்டிகளா ???   விரும்பியதாகவும் காதலித்ததாகவும் கூறுகிறீர் – நீங்கள் விரும்பும் ஒன்றை கண்ணெனக் காக்க மாட்டீரோ ?? விரும்பிய ஒன்றை உருத் தெரியாமல் சிதைக்கவும் மனம் ஒப்பிடுமோ ???   உங்கள் சகோதரிகளை கண்ணென காத்திட துடிக்கிறீரே – ...

Read More »

ஆசான்

பி .தமிழ்முகில் நீலமேகம் அன்று  கல்லூரியின் கடைசி  வேலை நாள். பரீட்சைகள் அனைத்தும் முடிவடைந்து, அன்று  விடைத்தாட்கள் விநியோகிக்கப் பட்டு, மாணவர்களால் சரிபார்க்கப் படும். அதன் பின்னே, பரீட்சை முடிவுகள் அனைத்தும் வெளியிடப்படும். இது அந்தக் கல்லூரியின் வழக்கமாய் இருந்தது. நகரின் அந்த புகழ்பெற்ற மகளிர் கல்லூரியில் விரிவுரையாளராய் பணியாற்றி வந்தாள்  சசிகலா. திருத்திய விடைத்தாட்களை எடுத்துக் கொண்டு அந்த முதுகலை இறுதியாண்டு வகுப்பிற்குள் நுழைந்தாள்.மாணவிகளுக்கு விடைத்தாட்களை கொடுத்துவிட்டு, எவருக்கேனும் மதிப்பெண் வழங்கியதில் ஏதேனும் ஐயமிருப்பின் தன்னை அணுகுமாறு கூறிவிட்டு அமர்ந்தாள். சற்று நேரத்தில், ...

Read More »

இயற்கை

    பி.தமிழ்முகில் நீலமேகம்   இறைவனின் திறமையில் உருவான கற்பனை  ஓவியம் …….. உலகம்…. இறைவன் தன் எண்ணற்ற திறமைகளை தனது உலக ஓவியத்தில் தீட்டி வைத்துள்ளான்………. நீரோடையென……..கடலென …… மலையென…… நிலமென …….. நீரென…..காற்றென….. அந்த வண்ண ஓவியத்தில் நாமும் நடமாடும் கதாபாத்திரங்கள்…… நாம் இருக்கும் அழகான ஓவியத்தை/ புகைப்படத்தை பொக்கிஷமாய் காப்போம் அன்றோ??? காத்திடுவோம் – இறைவன் நமக்களித்த இயற்கையை……. நம் பொக்கிஷமென…… விட்டுச் செல்வோம் – நம் சந்ததிக்கு   வளமான இயற்கையை வரமாய்…….. படத்திற்கு நன்றி: http://www.prelovac.com/vladimir/beautiful-nature-pictures

Read More »

முரண்

    பி.தமிழ்முகில் நீலமேகம்   ஆதவன் கூட தூக்கக் கலக்கத்தினின்று விடுபடாத இந்த கருக்கலில் எங்கோ அவசரமாய் எதையோ தேடி ஓடுகிறீர்களே….. எனதருமை மானிடர்களே… சற்று நில்லுங்கள்!!! எங்கே செல்கிறீர்கள்? உங்களது இல்லத்திற்கா? அல்லது… அலுவலகத்திற்கா?? இரவெல்லாம் கண்விழித்து பகலெல்லாம் கண்ணயரும் அதிசயம் உங்களிடம் மட்டும் தான் காண்கிறேன்… அதுவும்…. சில காலமாய்த்தான்… சுறுசுறுப்பாய் செயல்பட  பகலையும்…. இளைப்பாறித் துயிலுற இரவையும் இறைவன் காரணமின்றிப் படைத்திருக்க மாட்டான்!!! ஆனால் …..  இன்றோ….. அனைத்தும் தலைகீழாய்…. ஏனிந்த முரணான மாற்றம்???? படத்திற்கு நன்றி: http://www.prelovac.com/vladimir/beautiful-nature-pictures

Read More »

மின்வெட்டு !!!

  பி.தமிழ்முகில் நீலமேகம்   ஏர் கண்டிஷனும்  ஃபேனும்  தான் உதவாமல் போய்விட கைகொடுப்பது பனையும் தென்னையும்  தான் – விசிறிகளாய் !!!   கிரைண்டரும் மிக்சியும் ஓரமாய் படுத்துறங்க -மீண்டும் துள்ளியோடி வந்து வாசலை அலங்கரிக்குது – அம்மியும் ஆட்டுரலும் !!!   குளிர்ந்த நீருக்காக ஃப்ரிட்ஜ் அருகே காத்திருந்த காலம் மாறி கண்ணுக்கு அழகாய் கைக்கடக்கமாய் ஆரோக்கியத்துடன் – மண்பானைகள் !!!   டிவியில் லயித்து – உலகை மறந்திருந்தோர் இப்போது சுற்றியிருப்போரின் முகங்களில் சிரிப்பினைப் பார்க்கவும் பழகியிருக்கிறார்கள் !!!!   ...

Read More »

தொலைதூரக் காதல்

    பி.தமிழ் முகில் நீலமேகம்   உன் நினைவுகளில் நானும் என் நினைவுகளில் நீயும் நீங்காது நிலைத்திருக்க தூரமும் தொலைவும் தான் காதலை பிரித்திடுமா என்ன ???   அருகாமையும் அரவணைப்பும் உணர்த்தாத காதலை பிரிவும் தொலைவும் தெள்ளத் தெளிவாய் படம் பிடித்துக் காட்டிடாதோ ???   அனுதினமும் வளர்ந்திடுமே அளவிலா   காதலும் …. பிரிவதுவும் ஏற்படுத்துமே ஆழமான வலுவான அன்பின்  அஸ்திவாரம் !!!   உந்தன் அன்பின் அருமையை எனக்கும் ……எந்தன் – காதலின் வலிமையை உனக்கும் ……உணர்த்திடாதோ ??? இந்த தொலைதூரக் ...

Read More »

இனி ஒரு பிறவி வேண்டாம்…!

    பி.தமிழ் முகில் நீலமேகம்   செய்நன்றி தனை மறந்து முகத்துக்கு முன் துதியும் முதுகுக்குப் பின் மிதியடியும் மலிந்து விட்ட சமூகத்தில் – இனியும் வேண்டாம் ஒரு பிறவி !!!   பெயரளவில் பெண்ணுரிமை என்றுரைத்து விட்டு வழக்கமான கடிவாளங்களை பொன்னால் பூட்டும் உலகில் இனியும் ஒரு பிறவி – வேண்டவே வேண்டாம் !!!   உழைப்பவன் செவ்வனே உழைக்க எவனோ ஒருவன் – அட்டையென உழைப்பை உறியும் கேடு கெட்டோர் மத்தியில் இனியும் வேண்டாம் – ஐம்புலன் மூடி வாழும் ...

Read More »

ப்ரைவசி

பி.தமிழ்முகில் நீலமேகம்               ஶ்ரீலஷ்மி, அந்த அப்பார்ட்மென்ட்ற்கு புதிதாய் தன் பிள்ளை மற்றும் கணவர் சுகந்தனுடன் வந்து குடியேறியிருந்தாள். அவளது கணவரது பணி மாற்றல் காரணமாய் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரத்திலிருந்து, பென்சில்வேனியாவிலிருந்த ஃபோர்ட் வாஷிங்டன் நகரத்திற்கு புதிதாய் வந்திருந்தார்கள். சில நாட்கள் ஹோட்டலில் தங்கி இருந்து அருகிலிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் ஏதேனும் காலி மனைகள் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுகந்தனின் அலுவலகம் இருக்கும் சாலையிலேயே அவர்களுக்கு அப்பார்ட்மென்ட் கிடைத்தது. அந்த வார இறுதியில் குடியேற முடிவு செய்து அப்பார்ட்மென்டில் ஏதேனும் ...

Read More »

கரைசேரா ஓடங்கள்

  தமிழ்முகில்                     கண்ணின் இமையென பாதுகாத்து நின்ற தாயும் நினைவிற்கு வரவில்லை !!! உந்தன் உயர்வே எந்தன் மனக்கனவு என்றிருந்த தந்தையும் மனக்கண் முன் தோன்றவில்லை !!! உனக்கு விட்டுக் கொடுக்கவே எனது இந்த  அவதாரம் என்றுரைத்த உடன் பிறப்பும் மறந்து போய்விட்டது !!! ஏனோ ??   காதல் – கண்ணை மறைத்து விட்டது !!! வாழ்க்கை சமுத்திரம் கடக்க காதல் ஓடம்  ஒன்றே போதுமென்றெண்ணி விட…. ஓடமும் தான் ...

Read More »