Author Archive

Page 1 of 5912345...102030...Last »

சங்கப்பெண் கவிஞர்களின் புறப்பாடல்களில் காணலாகும் உலக வழக்கைத் தழுவிய மெய்ப்பாடுகள்

சங்கப்பெண் கவிஞர்களின் புறப்பாடல்களில் காணலாகும் உலக வழக்கைத் தழுவிய மெய்ப்பாடுகள்
-ப. சூர்யலெக்ஷ்மி முன்னுரை:- தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் பொது மெய்ப்பாடு என்பது எண்வகை மெய்ப்பாடு அவை நாடக வழக்கினைச் சார்ந்து வரும். அதில் நானான்கு வகையினைக் கூறி 32 என்பார். அவை அல்லாத அதில் அடங்காத 32 மெய்ப்பாடும் உலக வழக்கினைப் பெரிதும் தழுவிய மெய்ப்பாடு ஆகும். உரையாசிரியரான இளம்பூரணரும் பேராசிரியரும் இந்த 32 மெய்ப்பாடுகளும் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாக நிகழும் என்கிறார். “ச.சோமசுந்தர பாரதியார் இவை மூப்பத்திரண்டும்  எவ்வெட்டாய் முறையே இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கொடு தழாஅல், தோழியிற்புணர்வு என்ற ... Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
180618 Yashoda -lr 10x14   ’’திருவடி தீக்‌ஷையை தாயார்க்(கு) அளித்தார், பெருவிரல் சூப்பிய பாலர் -பெருவடிவில்(திருவிக்கிரமனாய்) மாவலி உச்சியில் மூன்றென வைத்தவர் ’ மா’(தாய்)மாது(யசோதை) சொல்தட்டா மாது(மாதவர்)’’....கிரேசி மோகன்....! Full story

வாழ்க்கை!

-டாக்டர். திரிவேணி சுப்ரமணியம் காலத்தின் பேரழைப்பில் கட்டுண்டு நிற்கிறேன் நான் சுயநம்பிக்கையின் சுவடுகள் கூட இல்லாமல் எல்லாம் முடிந்தும் ஏதோ ஒரு மாய ஈர்ப்பு தொக்கி நிற்கிறது வாழ்க்கை குறித்த ஆர்வத்தையும் நோக்கத்தையும் இடைவிடாமல் தந்துகொண்டிருக்கும் இந்த வாழ்க்கை எதைத்தான் எதிர்பார்க்கிறது என்னிடம்?     Full story

டி.கே.வி.தேசிகாச்சாரியார்

டி.கே.வி.தேசிகாச்சாரியார்
த்யாகச் செம்மலே ,தேசிகாச்சார் தெய்வமே, யோகப் பிதா(க்ருஷ்ணமாச்சார்)அன்று யோஜித்த -சாகஸத்தை, லோகஷேம லவ்(LOVE)சிவமே,(அன்பே சிவம்) லீலா தரங்கரே, சாகா வரம்பெற்ற சாது(மகான் -பிதாமகர் அல்ல பிதாமகான்) Full story

பழங்குடியினரும் பாறை ஓவியங்களும்

-ரா. பிரசன்னாதேவி முன்னுரை பண்டைய தமிழக வரலாறு, பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், நாகரிகம், வாழ்வியல் நெறிகள் ஆகியவற்றை அறிய தொல்வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்ளத் தேவையான ஆதாரங்களில் பாறை ஓவியங்கள் முக்கியமானவை. ஓவியம், சிற்பம், இலக்கியம் முதலியவற்றின் செய்திகளும், பயன்பாடுகளும் அறிய பாறை ஓவியங்கள் பெரிதும் பயன்படுகின்றன. இவை வாழ்வியல் நெறிகளை வழிநடத்திச் செல்லும் சட்டங்களாகவும், சான்றுகளாகவும் உள்ளன. (தமிழ்ப்பொழில் கல்வெட்டுகளில் இலக்கியச் சான்றுகள்.ப.321) கலைகளைப் பற்றி அறிந்துகொள்ள உதவுகின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து இன்றுவரை உலகின் எல்லாப் பகுதிகளிலும் பாறை ஒதுக்குகள் மற்றும் கற்குகைகள் ஆகியவற்றில் கற்செதுக்குகளாகவோ வண்ண எழுத்தோவியங்களாகவோ காணப்படுகின்றன. இந்த ... Full story

எங்கள் பயணம்

சு.திரிவேணி உலக சகோதரத்துவம் நோக்கிய பயணத்தில் சக மனிதனை நேசிக்க இயலாதவர்கள் நாங்கள் வசதிகளுக்காக வாழும் உரிமை பறிப்பது எம்மியல்பு நித்தம் செத்துப் பிழைக்கும் நித்திய நரகம் கடந்தால் காத்திருக்கிறதாம் சொர்க்கம்! அவ்வின்ப வாழ்வு குறித்தான கற்பனையிலேயே முடிகிறது எங்கள் வாழ்வு கண்முன்னே பல கொடுமைகள் கடந்து வருகிறோம் சகித்துக் கொள்கிறோம் ... Full story

சுற்றுச் சூழல் சுத்தமாவது என்று!

    அ.ஸ்ரீதேவி       நீரோடும் ஆறுதான்  அன்று சாயநீரோடும் ஆறானதே இன்று சகலமாய் இருத்த நீரோடை அன்று சாக்கடை நீர் செல்லும் நீரோடை என்று?   ஏக்கரில் தோப்புகள் அன்று எல்லாம் குப்பைகளே இன்று வளர்ந்து செழித்த மரங்கள் அன்று வானுயிர் கட்டிடமே இன்று   இயற்கை அன்னை எழில் முகம் காட்டுவது என்று?   தூயக் காற்றாம் அன்று நச்சுப் புகைக்காற்றாம் இன்று மரம் நச்சைப் புகை சுவாசித்தது அன்று... Full story

சங்க இலக்கியத்தில் நிகழ்த்துக்கலைகள்

-கி. ரேவதி தமிழர்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தவை கிராமியக் கலைகள். கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையில் இருக்கும் இன்ப துன்பங்களில் முதன்மையானவையாக இருப்பது கிராமியக் கலைகள். இதனை நாட்டுப்புறக்கலைகள் என்றும் அழைக்கின்றோம். வழிபாட்டுச் சடங்குகளின் ஒரு பகுதியாகவோ, பொழுதுபோக்கிற்காகவோ மக்களால் உருவாக்கப்படும் அல்லது நிகழ்த்தப்படும் மரபுவழிக் கலைகள் நாட்டுப்புறக் கலைகள் எனலாம். நாட்டுப்புற கலைகள் பழந்தமிழகத்தில் கிராமங்களே மிகுதியாக இருந்தன. கிராம மக்களின் உயிரோடும் உணர்வோடும் ஓங்கி வளர்ந்தவை கிராமியக் கலைகளாகும். நாட்டுப்புறக்கலை என்பது வளர்ந்து கொண்டேயிருப்பது. மனித உள்ளத்தில் சிந்தனை வளம் இருக்கும் வரை கலைகள் இருந்துக்கொண்டேயிருக்கும். நாட்டுப்புறக்கலைகள் தொடந்து ... Full story

பாணப்பாட்டும் பண்பாட்டு மரபுகளும்

-முனைவர். ஹெப்சி ரோஸ் மேரி. அ ’பாணப்பாட்டு’ என்பது பாணர் இன மக்கள் பாடும் பாட்டாகும். இதனைத் துயிலுணர்த்துப்பாட்டு, பாணர்பாட்டு என்றெல்லாம் அழைப்பர்.  பாணரினமக்கள் பல தலைமுறைகளாக இப்பாடலைப் பாடிவருகின்றனர்.  கால மாற்றத்திற்கேற்ப இப்பாடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இக்கட்டுரை மலையாளத்திலுள்ள பாணப்பாட்டை அறிமுகம் செய்து அதன்வாயிலாக அறியலாகும் தமிழர் பண்பாட்டு மரபுகளை எடுத்துரைக்க முயல்கிறது. பாணர்களின் தோற்றம் பாணர்களின் தோற்றம் பற்றிய பலகதைகள் மலையாள நாட்டுப்புறப் பாடல்கள்களில் நிலவுகின்றன. கணிதசாஸ்திரத்தில் பண்டிதனாக விளங்கியவர் வரருசி. இவர் பறையர் இனத்தைச் சார்ந்த பெண்மணியைக் காதலித்துத்  திருமணம் செய்தார்.  இவர்கள் ஜோதிடத்தையும் ... Full story

கருவாகி உருவாகி கவினுலகைக் காணும் வரை…

கருவாகி உருவாகி கவினுலகைக் காணும் வரை…
-ஆ. செந்தில் குமார். தந்தையின் உயிரணு ஆற்றலைப் பெற்று… தாயின் கருமுட்டை சுவற்றைத் துளைத்து… உட்புகுந் ததனுள் ஒன்று கலந்து… உயிரின் கருவாய் மாற்றம் பெற்றது…! மாற்றம் பெற்ற அச்சிறு கருவும்… மெல்ல நகர்ந்து கருப்பையை அடைந்து… கருப்பை சுவற்றில் ஒட்டிக்கொண்டு… குழந்தை உருவாய் மாறத் துடித்தது…! செல்களின் பகுப்பு வேகமாய் ... Full story

 கருவூரார் திருவுள்ளம்

முனைவர் இரா. மதன் குமார் முன்னுரை ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்களுள் ஒருவராகிய கருவூரார் அருளிச்செய்த திருப்பதிகங்கள், பத்து. ‘கருவூர் சித்தர்’ என்ற பெயரால், மக்களால் நன்கறியப்படுகின்ற அவர்தம் திருப்பதிகங்கள், மெய்யியல் அனுபவப் பதிவுகளாகவும், இறைவனால் அவர் ஆட்கொள்ளப்பெற்ற அருளியல் பதிவுகளாகவும் விளங்குகின்றன. சீரிய உவமைநயங்களால் பாடுபொருளை எடுத்துரைக்கின்ற பாங்கினையும், சைவநெறிகளைத் தத்துவநோக்கில் எடுத்தாளுகின்ற போக்கினையும் அவர்தம் திருப்பாடல்களில் காணலாம். தமது திருப்பதிகங்கள் வழியே,  அவர் பக்திநெறி காட்டுகின்ற திறமானது இக்கட்டுரையில் ஆய்ந்துரைக்கப்பெறுகிறது. கருவூரார் திருப்பதிகப் பொருள்நிலை தில்லைத் திருத்தலத்தில், இறைவன் கோயில் கொண்டுள்ள நிலையினை, அதன் இயற்கைச் சூழலுடன் கோயில் திருப்பதிகமாகப் பாடியுள்ளார். இறைவனின் திருஅழகினை உருக்காட்சியாகக் ... Full story

அகநானூறும் பாலையின் முப்பொருளும்

முனைவர் ம. தமிழ்வாணன் உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகளில் முதன்மையானது தமிழ். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம், சீனம், ஹீப்ரு போன்ற பிற செம்மொழிகளும் போற்றத்தக்கன. இருப்பினும் தமிழ்மொழியே தனித்துவம் மிக்கது. மிக நீண்ட காலத்திற்கு முன்பே தரப்படுத்தப்பட்டது. எந்தமொழியிலிருந்தும் கடன் வாங்காத வேர்ச்சொற்களின் வளமுடையது. எக்காலத்தும் உயிர்த்துடிப்புடைய இளமைக்குன்றாத இலக்கிய வளம் கொண்டது. தமிழ்மொழி உலகிற்கு அளித்தக் கொடைகள் ஏராளம் எனலாம். அந்த வகையில் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் பேறுபெற்றுத் திகழ்கின்றன. பண்டைத் தமிழர் வாழ்க்கையை திணையின் அடிப்படையில் பிரித்துக் கொண்டனர். இவர்களிம் வாழ்வு அகம், புறம் சார்ந்த வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு ... Full story

கொழிஞ்சாம்பாறை வட்டாரத்தில் நிழ்த்தப்படும் புனித அலேசியார் நாடகம்

முனைவர் பா. உமாராணி சமூக வாழ்வியலையும், இனம் சார்ந்த வழக்காறுகளையும், அதனோடு தொடா்புடைய பண்பாட்டுக் கூறுகளையும் படம்பிடித்துக் காண்பிப்பன நாட்டுப்புற கலைகள் ஆகும். நாட்டுப்புறக் கலைகள் என்பது பொழுதைக் கழிக்கும் ஒரு செயலாக அல்லாமல் அது அம்மக்களுடைய உணா்வுகளோடு தொடா்புடைய ஒரு கூறாகவுமே இயங்கி வருகின்றது. அப்பொழுதுதான் காலம் கடந்தும் அக்கலைகளை மக்கள் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இல்லையெனில் அக்கலைகள் தோன்றிய சமூகச் சூழல் மாற்றம் அடைந்ததும் அழிந்தொழிந்துவிடும். எனின் அக்கலைகள் நிலைத்தத் தன்மையுடையதாய் அமைய வேண்டுமெனில் அது அப்பாண்பாட்டோடு நெருங்கிய தொடா்புடையதாயும், அம்மக்களின் நம்பிக்கைகளோடு ஒன்றிணைந்து செல்வதாயும் அமைந்திருக்க வேண்டும். நாட்டுப்புறக் கலைகளில் ... Full story

அணைக்கட்டும் ஆத்தங்கரை ஓர மக்கள் வாழ்வும்

முனைவர் வீ. மீனாட்சி   வளரும் நாடுகளில் நாட்டின் வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தால் பல ஐந்தாண்டு திட்டங்கள் பிற வளர்ச்சி திட்டங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. அதனடிப்படையில் பல அணைகள், தொழிற்சாலைகள் கட்டும் திட்டங்கள் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டும் வருகின்றன. இத்தகைய வகையில் அணைகள்,          தொழிற்சாலைகள் அமைக்கும் பகுதியானது கிராமப்பகுதியாக இருப்பதால் அப்பகுதியில் வாழும் பாமரமக்களை அரசாங்கம் இழப்பீட்டுத் தொகையும், மாற்று இடமும் கொடுத்து வேறு பகுதிகளுக்கு குடிபெயர்த்துகிறது. இத்தகைய குடியமர்வுகள் இன்றைய சூழலில் தவிர்க்க முடியாத நிகழ்வாக உள்ளது. இதனடிப்படையில் வெ.இறையன்புவின் ஆத்தங்கரை ஓரம் புதினத்தில் அரசின் வளர்ச்சி திட்டமான அணைக்கட்டுவதால் ஏற்படும் மக்கள் குடிபெயர்ப்பு ... Full story

சிறுவர் பாடல்களில் மருத்துவச் செய்திகள்

-ஜே.அனிற்றா ஜெபராணி நாட்டுப்புற மருத்துவம்:-  இயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம் எனப்படுகிறது. இம்மருத்துவ முறையில் “உணவே மருந்து, மருந்தே உணவு” என்கிற கோட்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் எவ்வாறு உயிரினங்களின் தேவைக்காக உணவு படைக்கப்பட்டதோ அதேபோல அவைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்களுக்கு மருந்துகளும் படைக்கப்பட்டுள்ளன என்பது எல்லாப் பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடிப்படைக் கருத்தாகும். நல்ல பழங்களைத் தினமும் சாப்பிட்டால், நினைவாற்றல் அபாரமாக இருக்கும். சித்தர்களும் காய் கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், ... Full story
Page 1 of 5912345...102030...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.