‘பாளை சிறைச்சாலை’ படத்தின் கதை
கே.பாலசந்திரன் தயாரிப்பில், தனலெட்சுமி பிலிம்ஸ் இன்டெர்நேஷ்னல் எனும் புதிய நிறுவனம், தனது முதல் படைப்பாக, பாளை சிறைச்சாலை என்ற புதிய திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் நாயகர்களாக ஜெயன், சுஜி, வெற்றிவேல், ராஜன் மற்றும் இரண்டு புதுமுக நாயகிகள் லஷ்மி, ஜுலு பங்கேற்கிறார்கள்.
வில்லன் வேடத்தில் கிருஷ்ணகிரி குமார் மற்றும் குணச்சித்திர நடிகர், நடிகைகள் பங்கேற்கின்றனர். இதன் படப்பிடிப்பு மதுரை, சென்னை ஆகியவற்றின் சுற்றுப் புறங்களில் நிகழவுள்ளது.
கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான்னு பழமொழி ஒன்னு இருக்கும். கத்தி எடுத்து, ஜெயிலுக்குப் போன மூணு பேரு, செஞ்ச தப்ப உணர்ந்து, இனி மேல் குடும்பத்த காப்பத்தணும்னு முடிவு எடுத்தப்ப, இந்தச் சமுதாயம் இவர்களை வாழவிட்டதா? மீண்டும் ஜெயிலுக்கு அனுப்பியதா? என்பதை அடிப்படையாகக் கொண்டு கதை – திரைக்கதை – வசனம் அமைத்து, புதுமுக இயக்குநர் சரவணா.சி இயக்குகிறார்.
இதில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெறுகின்றன.
===============================
தகவல் – மக்கள் தொடர்பாளர் செல்வரகு