2010இலும் வதையுறும் 1983 அகதித் தாய்
கூரையற்ற குடில்,
வானம் பார்க்கும் உலை,
வாடும் சிறார்
இந்தத் தாய்க்கும் மகவுகளுக்கும் வாழ்வளிக்க ஒப்பி,
நன்கொடையாளரிடம் தொகைகள் பெற்ற நிறுவனமோ,
நன்கொடைகளைத் திசை திருப்பி,
எவர் வதையுற்றால் எமக்கென்ன?
என்ற மனப் பாங்குடன்..
பல்துறை வித்தகர். பதிப்புத் துறையிலும் சைவத் திருமுறைகளிலும் ஆழ்ந்து தோய்ந்தவர். அதே நேரம், கடலியல் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த வல்லுநர்.
கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வு அலுவலராக 11 ஆண்டுகள் பணியாற்றியவர்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 2 ஆண்டுகள் பேராசிரியர் பணியாற்றியவர்.
23 நாடுகளில் ஐ.நா. உணவு வேளாண் நிறுவன ஆலோசகராகச் சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். கருவாடுகளைக் காயவைத்தல் தொடர்பாகப் புதிய முறைகளை உருவாக்கியவர். சேதுக் கால்வாய்த் திட்டம் தொடர்பான புரிதலைப் பல நிலைகளில் உருவாக்க முனைந்தவர்.
கூர்மையான நோக்கும் அறிவியல்பூர்வமான அணுகுமுறையும் கொண்டவர்.