பிரபல சோதிடர் காயத்ரி பாலசுப்பிரமணியன்

மேஷம்: குரு 1-ல். குல தெய்வ கோவிலுக்குச் சென்று வரும் வாய்ப்பு கிட்டும் கேது 2-ல். உடல் ரீதியாக சில சங்கடங்கள் ஏற்பட்டாலும், பணியில் இருப்பவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்,ஏற்றுக் கொண்ட பணியினை செய்ய வேண்டி வரும். செவ்வாய் 5-ல். மாணவர்கள், பயணங்களின் போது எச்சரிக்கையாய் இருக்கவும் சனி 7-ல். வியாபாரிகளுக்கு, வியாபாரத்திற்குத் தேவையான உபகரணங்களை சலுகையில் வாங்குவது என்பதில் ,சற்று இழுபறி இருக்கும். 8-ல் ராகு.பொது வாழ்வில் உள்ளவர்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்குப் பின் வண்டி ஓட்டாமலிருக்கவும். சுய தொழில் புரிபவர்கள், சில மறைமுக எதிர்ப்புகளைச் சந்தித்து, தன்னை நிலைநிறுத்திக் கொள்வர் . சூரியனுடன் சுக்ரன் 10-ல். கலைஞர்கள், சக கலைஞர்களின் நிறைகுறைகளை பொது இடங்களில் விவாதிப்பதைத் தவிர்க்கவும்.

இ(ந)ல்லறம்: பெண்கள், முதியோர்களின் உடல்நலக் குறைவை அலட்சியப் படுத்தாமல் இருந்தால், மருத்துவச் செலவுகள் குறையும். அலுவலக அளவில் நல்லது செய்வது போல் நடிக்கும் தீய சகவாசத்தை அறவே தள்ளி வைத்து விடுங்கள். நன்மைகள் உங்களை நாடி வரும். .

ரிஷபம்: 6-ல் சனி. மாணவர்கள், நம்பிக்கையுடன் செயல்படுவார்கள். அத்துடன் நண்பர்களிடம் பட்ட சில்லறைக் கடனும் அடைபடும். 12-ல் குரு. பொது வாழ்வில் இருப்பவர்கள், பிறருக்கு உதவி செய்வதில் பாரபட்சமின்றி நடத்தல் அவசியம். கேது 1-ல். பொறுப்பான பதவி வகிப்பவர்களுக்கு, எதிரிகள் தொல்லை சற்று அதிகரிக்கும். 7 -ல் ராகு. பணியில் உள்ளவர்களின் செலவுப்பட்டியல் சற்றே நீளமாய் மாறி, மனக்கிலேசத்தை உண்டாக்கும். 4-ல் செவ்வாய். வியாபாரிகள் ஆழம் தெரியாமல் புதிய தொழிலில் காலை விடவேண்டாம். 8-ல் புதன். தாறுமாறாக இருந்த கணக்குகளை சீர்படுத்த ஏற்ற தருணம் இது! சுக்ரன், சூரியன் 9-ல். கலைஞர்கள் திறமை என்பதுடன் பொறுமை யும் உடனிருக்குமாறு பார்த்துக் கொண்டால், எளிதில் பணிகள் முடியும். வெளியூர்ப் பயணங்கள் செல்பவர்கள், சுகாதாரம் குறைவான இடங்களில் உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது.

இ(ந)ல்லறம் : பெண்கள், தங்கள் சொந்த விஷயத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். பிரச்சனைகள் சுமூகமாக முடிவதோடு, குடும்ப மகிழ்ச்சியும் சிதறாமலிருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள், உடற்பயிற்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து வர, ஆரோக்கியம் உங்களின் பணிக்கு ஆதரவாக அமையும்.

மிதுனம்: செவ்வாய் 3-ல். பணியில் உள்ளவர்களின் உங்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கக் கூடிய காலகட்டம் இது. 11-ல் குரு. சுப காரியங்களுக்காக சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள்.6-ல் ராகு. சிலர் தடைப்பட்ட தொழிலை மீண்டும் தொடங்கி லாபம் காணுவார்கள். 8-ல் சுக்ரன். படைப்பாளிகள் பாராட்டும், பரிசும் பெற்று மகிழ்வார்கள். 5-ல் சனி. மாணவர்கள், ஏக்கமும், தாக்கமும் உங்களை பாதிக்காத அளவு மனதை ஒருமுகப்படுத்துங்கள். பாடங்களைப் பயில்வது கடினமாய்த் தோன்றாது. சூரியன், சுக்ரன், 8-ல். வெளி வட்டார தொடர்பு விரும்பியவாறு அமைய வியாபாரிகளும், பொது வாழ்வில் இருப்பவர்களும், புத்திசாலித்தனமாக செயல்படவும். சுய தொழில் புரிபவர்கள், மறைமுக எதிரிகளின் செயல்பாட்டிற்குத் தகுந்த பதிலடி கொடுத்தால், வரும் லாபம், தொய்வடையாமலிருக்கும்.

இ(ந)ல்லறம் : குடும்பத்தில், தவிர்க்க இயலாத மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும், நினைத்த காரியத்தை முடிப்பதற்கு பெண்களின் சேமிப்பு, தகுந்த சமயத்தில், கை கொடுக்கும். அலுவலக அளவில், எதிர்பாராத அறிமுகங்கள் மன சந்தோஷத்தை அதிகரிக்கும்.

கடகம்: 11-ல் கேது. உங்கள் நலனில் அக்கறை உள்ளவர்களின் ஆதரவால், புதிய திட்டங்களில் வெற்றி கிடைக்கும். 2-ல் செவ்வாய்.பழைய கடன் மூலம் சில சிக்கல் தோன்றி மறையும், வாய்ப்பிருப்பதால், பணியில் இருப்பவர்கள், வீண் செலவுகளை அறவே தவிர்த்து விடவும். . 4-ல் சனி. சுய தொழில் புரிபவர்கள் 5-ல் ராகு. பெறும் சலுகை என்பது பெயரளவிலேயே இருக்கும். 5-ல் ராகு. சிக்கலான நேரங்களில், சூழலுக்கேற்றவாறு சிந்தித்து செயலாற்றினால்,பொது வாழ்வில் இருப்பவர்களின் நற்பெயருக்கு களங்கம் உண்டாகாது. பொறுப்பான பதவியில் இருப்பவர்களை, வருத்திக் கொண்டிருந்த பிணிகள் விலகி, உடல், மனம் இரண்டும் உறுதியாகி புதிய தெம்பு பிறக்க 6-ல் இருக்கும், புதன் உதவுவார். வியாபார வட்டத்தில் வியாபாரிகளின் சொல்லுக்கு தனி மதிப்பிருக்கும். 7-ல் சூரியன். சுக்ரன். பழைய பிரச்னைகளை கிளப்பி குளிர் காய்பவர்களிடமிருந்து, கலைஞர்கள், தள்ளி இருப்பது அவசியம்.

இ(ந)ல்லறம்: விரும்பிய பலன் கிடைப்பதற்காக பெண்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அலுவலக அளவில், தயவு காட்ட வேண்டிய இடங்களில், பாரபட்சமின்றி நடுநிலைமையோடு செயல்படுங்கள். உங்களுக்கு உரிய மதிப்புபும், நல்ல பெயரும் குறையாமலிருக்கும்.

சிம்மம்: 9-ல் குரு.பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு, உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் தக்க சமயத்தில் கிட்டும். 3-ல் சனி. மாணவர்கள், கல்வியில் இது வரை சாதிக்க முடியாததை சாதனையாக்கிக் காட்டுவார்கள் . 6-ல் சூரியன், சுக்ரன்,. . வியாபாரிகள், தடபுடவென்று செயலில் இறங்காமல், நிதானித்து செயல்பட்டால், வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். செவ்வாய் 1-ல். பணிவும், பண்பும் உங்களை விட்டு அகலாமல் இருந்தால், பணியில் இருப்பவர்களுக்கு, எந்தத் தொல்லையும் பெரிதாகாது. 4-ல் ராகு. வீடு, மனை நிலம் வாங்குகையில், பத்திரத்தை சரிபார்த்த பின் பணத்தைக் கட்டுவது நல்லது.. புதன் 5-ல். வியாபார விஷயங்களில், நண்பர்களே உங்களை எதிரியாய் கருதும் நிலை உருவாகும். எனவே எதிலும், கவனமாய் இருக்கவும். கலைஞர்களுக்கு, வாய்ப்புகளுக்கேற்ற வரவு வந்தாலும், போட்டிகளை சமாளிக்கும் சூழலில் மன அமைதி குறையும்.

இ(ந)ல்லறம்: பெண்கள், மூத்தோரின் இயல்பறிந்து நடந்து கொண்டால் எவர் மனதிலும் குறைகள் இராது வரவை மிஞ்சிய செலவுகள் சில சமயங்களில், உங்களை பயமுறுத் தும் வாய்ப்பிருப்பதால்,வீண் செலவுகளைத் தவிர்ப்பதோடு, சிக்கனமாகவும் இருப்பது அவசியம்.

கன்னி: 3-ம் இட ராகு, வியாபார விஸ்தரிப்பில் வேண்டிய மாற்றங்களைச் செய்ய பங்குதாரர்களின் உதவி கிட்டும். சனி 2-ல். பொது வாழ்வில் இருப்பவர்கள், நினைத்த காரியம் முடியும் வரை, கவனமாகச் செயல்பட வேண்டும். 4-ல் புதன். பொது வாழ்வில் இருப்பவர்கள், தங்கள் வாக்கு சாதுர்யத்தால் கௌரவமான பதவியில் அமர்வார்கள். 5-ல் சூரியன், சுக்ரன். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு, தொழிலில் சில இழப்புகளும், சில லாபங்களும் உண்டாகும். 8-ல் குரு. மாணவர்கள், செயலில் உள்ள பணிவு பேச்சிலும் இருக்குமாறு பார்த்துக் கொண்டால், கேட்ட உதவி கிடைப்பதில் சிரமம் இராது. அத்துடன், பிறர் கூறும் குற்றம், குறைகளுக்காக அவர்களிடம் வாக்கு வாதத்தில் இறங்காதீர்கள். உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. 9-ல் கேது. கலைஞர்கள், வெளியிடங்களுக்குச் செல்லும் போது சபலங்களுக்கு இடம் கொடுக்காமலிருந்தால், புதிதாய் பிரச்சனைகள் உருவாகாது.

இ(ந)ல்லறம்: பிள்ளைகள் கல்வி செல்வத்தை தடையின்றி பெறுவார்கள். துணைவரின் உடல் நலத்தில் அக்கறை காட்டினால், மருத்துவ செலவுகள் கணிசமாகக் குறையும். .அலுவலக ரகசியங்களை பிறரிடம் கொட்ட வேண்டாம். உங்கள் மனதிலேயே பூட்டி வைப்பது புத்திசாலித்தனம்.

துலாம்: 7-ம் இட குரு, ஸ்திரச் சொத்துக்களின் சேர்க்கையைக் கொண்டு வருவார். 11-ல் செவ்வாய். மனதில் இருந்த கலக்கம், அச்சம் இரண்டும் நீங்குவதால், பணியில் இருப்பவர்களின் திறமை தக்க சமயத்தில், பளிச்சிடும். 1-ல் சனி. மாணவர்களுக்கு, சுற்றியிருப்பவர்களால் வீண் செலவுகளும் வேண்டாத தலைவலிகளும் வந்து போகும். 2-ல் ராகு. வாகனப் பழுதுக்காக, மாணவர்கள் அவ்வப்போது பணம் செலவு செய்யும் நிலை உருவாகும் . 3-ல் புதன். தொழிலாளர்கள் பிரச்சனை சுமூகமான முறையில் முடிவதில் சிறிது தேக்க நிலை உண்டாகும். எனவே வியாபாரிகள் பக்குவமாக செயல் படவும். 4-ல் சூரியன், சுக்ரன். கலைஞர்கள் தகுதிக்கு மீறிய செலவுகளையும், ஆசைகளையும் குறைப்பது அவசியம். அப்போதுதான், தொழிலில் கவனம் செலுத்த முடியும். 8-ல் கேது. வழக்கு விவகாரங்களில் சமரசத் தீர்வு கிடைக்கும் .வரை பொறுமை தேவை.

இ(ந)ல்லறம்: எந்த ஒரு செயலையும், திறம்பட செய்யும் குணத்தினால், நினைத்த காரி யத்தை முடிப்பதுடன், பெண்கள் பாராட்டுக்களையும் பெறும் காலமிது உறவினர்களின் ஒத்துழைப்பால், மங்கல காரியங்கள் தடையின்றி நடந்தேறும். உழைப்பிற்கு இடையே ஓய்வும் இருக்குமாறு பார்த்துக் கொண்டால், ஆரோக்கியம் சீராக இருக்கும்

 விருச்சிகம்: 3-ல் சூரியன், சுக்ரன். கலைஞர்கள், தங்கள் திறமைக்கு ஏற்ற வகையில் சிறப்புப் பட்டங்களும், பரிசுகளும் பெற்று மகிழ்வர். கடன் தொல்லைகள் குறைந்து வியாபாரத்தின் விறுவிறுப்பும், கணிசமான லாபமும் கூடும். 12-ல் சனி. பொது வாழ்வில் இருப்பவர்கள், பொறுமை என்னும் தாரக மந்திரத்தை கடை பிடித்தால், சிறப்பான பலன்களைப் பெறலாம் ராகு 1-லும், கேது 7-லும். பணியில் இருப்பவர்கள், சூழ்நிலையை ஆராய்ந்தபின் செயலில் இறங்கினால், முன் வைத்த காலை பின் வைக்க வேண்டியிராது . அடிக்கடி பயணம் செய்பவர்கள், உணவுக் கட்டுப்பாட்டை கடை ப்பிடித்தால், உடல்நலம் நன்றாகத் திகழும். 2-ல் புதன். தேவையற்ற விஷயங்களால், உங்கள் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுய தொழில் புரிபவர்கள், இலக்கை அடைவது என்பதில் தொய்வு ஏதும் தலை காட்டாது. குரு 6-ல். . பொது வாழ்வில் உள்ளவர்கள், பொதுப்பிரச்சனைகளில் சமரசமும், பொறுமையுமே உதவும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது .

இ(ந)ல்லறம்: பெண்கள் பொருளாதார நிலையில் சற்றே ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். உடனிருப்பவர்களே உங்களை சிக்கலில் மாட்ட முயற்சிக்கும் சூழலிருப்பதால், எந்த விஷயத்திலும் கவனமாக இருப்பதோடு, கண் மூடித்தனமாக யாரையும் நம்ப வேண்டாம்.

தனுசு: 5-ல் குரு. சுய தொழில் புரிபவர்கள் . தொழிலில் இருந்த பின்னடைவு, நெருக்கடி ஆகியவை நீங்கி, புதுத் தெம்புடன் செயல் படுவார்கள். 6-ல் கேது. பணியில் இருப்பவர்கள் உயரதிகாரிகளின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வது சுலபமாகும். 11-ல் சனி. மாணவர்கள் இனிய அனுபவங்களைப் பெற்று மகிழ்வதோடு நெருக்கமானவர்கள் காட்டும் பாசமும் உங்களை உற்சாகப்படுத்தும். 1-ல் புதன். பொது வாழ்வில் இருப்பவர்கள் சமயோசிதமாகச் செயல்பட்டால், எதிரிகளின் கரம் மேலோங்காதிருக்கும். 2-ல் சூரியன், சுக்ரன். வியாபாரிகள் பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருந்தால், புதிய ஒப்பந்தங்கள் கை நழுவாமலிருக்கும். 9-ல் செவ்வாய். வேலைக்குச் செல்பவர்கள் சக ஊழியர்களினால் உருவாகும் பிரச்சனைகளைச் சமாளிக்க நேரிடும். 12-ல் ராகு. இந்த வாரம் கடன் தொல்லையால், கலைஞர்களின் சில நிகழ்ச்சிகள், தேக்க நிலை காண்லாம்.

இ(ந)ல்லறம்: பெண்கள் இல்லத்திலும், அலுவலகத்திலும் வீண் பேச்சுக்களைக் குறைத்தால், அமைதிக்கு பங்கம் வராமலிருக்கும். கவனக் குறைவாகச் செயல்படும் பிள்ளைகளை , இதமாகக் கண்டிப்பதே நல்லது. இல்லையெனில், வீண் கோபம், சின்ன விஷயங்களை பெரிதாக்கும்.

மகரம்: 11-ல் ராகு. வெளி நாடு செல்ல வேண்டும் என்று விரும்பியவர்களின் எண்ணம் பலிக்கும் .1-ல் சூரியன், சுக்ரன். வியாபாரிகள் எதிலும், நிதானம் மற்றும் தீர்க்காலோசனைனயைப் பின்பற்ற, அதிக நன்மைகளைப் பெறலாம். புதன் 12-ல். மாணவர்கள், கல்விக்கான செய் முறைப் பயிற்சிகளில் தகுந்த விதிகளைக் கடைப்பிடிப்பது அவசியம். 4-ல் குரு. வெளிடங்களில் வேலைக்காகவும் படிப்பிற்காகவும் தங்கியிருப்பவர்கள் அதிகமாக ஆசைப்படுதலையும், வீண் செலவுகளையும் சுருக்கிக் கொண்டால், பற்றாக் குறையை ஓரளவு சமாளித்துவிட முடியும். 5-ல் கேது. முதியவர்கள் எலும்பு சம்பந்தமான உபாதைகளை உடனுக்குடன் கவனித்து விடுவது நலம். 8-ல் செவ்வாய். பணியில் உள்ளவர்கள், சொல்லும் வார்த்தை, செலவழிக்கும் பணம் இரண்டிலும் நிதானமாக இருப்பது புத்திசாலித்தனம். 10-ல் சனி. கலைஞர்கள் தன்னுடைய பணியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், புதிய கதைகளைத் திரிப்பவர்களின் வாயைக் கட்டி விடலாம்.

இ(ந)ல்லறம்: பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகிச் செல்லும் நிலை நிலவினாலும், பெண்கள் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு,பிரச்சனைகளைத் தீர்த்தால் உறவுகள் இதமாகத் திகழும். . பொறுப்பில் இருப்பவர்கள் முக்கியமான ஆவணங்கள் , சாவிகள் ஆகியவற்றை பத்திரமாக வைப்பது அவசியம்.

கும்பம்: 3-ல் குரு. வியாபாரிகள் புதியவர்களை நம்பிப் பணம் கொடுக்கும் சூழல் ஏற்பட்டால், தகுந்த விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது. 4-ல் கேது. பொது வாழ்வில் உள்ளவர்கள், பொறுமையுடனும், திறமையுடனும் செயல்பட்டு வந்தால், உங்கள் திறமைக்குரிய பாராட்டு கிடைக்கும். 7-ல் செவ்வாய். வேண்டாத தொல்லைகளால் சுறுசுறுப்பாக நடந்த வீடு கட்டும், பணிகளில் தேக்க நிலை உருவாகும். 9ல் சனி. பொது வாழ்வில் இருப்பவர்கள், உடல்நலம் பாதிப்பு ஏற்படாதவாறு, பணியில் தகுந்த மாற்றங்களை மேற்கொள்ளுங்கள். 10.-ல் ராகு. இந்த வாரம் கவனத் தடுமாற்றம், மறதி ஆகியவை கலைஞர்களின் , பணிக்குச் சற்று முட்டுக் கட்டை போட லாம் 11-ல் புதன். மாணவர்கள் திறமையோடு பொறுமையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நினைத்த காரியத்தோடு, வெற்றி மாலையும் வந்து சேரும்! 12- ல் சூரியன், சுக்ரன். பங்குத்துறையில் உள்ளவர்கள் அளவான முதலீடு என்பதில் உறுதியாக இருப்பது நலம்

இ(ந)ல்லறம்: இந்த வாரம் குடும்ப உறவுகள் இடையே வீண் சர்ச்சை, வேண்டாத சந்தேகம் ஆகியவை நுழைந்து மன அமைதியைக் கெடுக்கலாம். எனவே பெண்கள், கவனத்தை சிதறடிக்கும் விஷயங்களுக்கு தலையசைக்காமலிருப்பது அவசியம் . பிள்ளைகளின் நிறைகுறைகளை பக்குவமாக சுட்டிக் காட்டவும் .

மீனம்: பொது சேவை ஆற்றுபவர்கள் வெற்றிப் படியில் எளிதாக ஏறும் வாய்ப்புகளை 2-ல் இருக்கும் குரு தருவார். 3-ல் கேது.பணியில் இருப்பவர்கள், கடினமான காரியங்களைத் தங்கள் அனுபவ அறிவால் திறமையாக முடிப்பார்கள். 6-ல் செவ்வாய். கலைநயம் மிகுந்த பொருட்களின் விற்பனை மூலம் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். 11-ல் சூரியன், சுக்ரன். பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்த பின்னடைவுகள் நீங்கும் 8-ல் சனி. அவ்வப்போது, வெறுப்பும், சலிப்பும் வந்து வந்து நீங்கும் வாய்ப்பிருப்பதால், மாணவர்கள் தங்கள் வேலைகளைத் தள்ளிப் போடாமல் இருப்பது புத்திசாலித்தனம். 9-ல் ராகு. கலைஞர்கள் தவறான கண்ணோட்டம் உடையவரிடமிருந்து விலகி இருந்தால், எந்த சிக்கலிலும் சிக்க வேண்டி இராது. 10-ல் ராகு. . முதியவர்கள் காரசாரமான உணவுகளை ஒதுக்கிவிட்டால், ஜீரணக் கோளாறு ஏதும் தலை காட்டாது. 10-ல் புதன். சுய தொழிலில் இருப்பவர்கள் உழைப்பிற்குத் தகுந்த பாராட்டைப் பெற்று மகிழ்வர்.

இ(ந)ல்லறம்: பெண்களின் ஆசைப்படியே புதிய பொருட்களின் சேர்க்கை இல்லத்தில் கூடும் . பொறுப்பில் இருக்கும் பெண்கள், நிர்ப்பந்தத்தின் பேரில் சிலர் சலுகைகளை பெற முயற்சிப்பவர்களிடம் கவனமாக இருப்பது அவசியம். சத்தான உணவும், சீரான தூக்கமும் குறையாமல் பார்த்துக் கொள்ளவும்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *