“ஜெய் பீம் காம்ரேட்” ஆனந்த் பட்வர்தனின் புதிய படம்
வெள்ளிக்கிழமை, 20.01.2012 சரியாக மாலை 5.00 மணிக்கு தியாகராஜ நகர், ஜெர்மன் அரங்கம், பிரகாசம் சாலை, நடிகர் சங்கம் அருகில் ஜி.என்.செட்டி சாலை – அபிபுல்லா சாலை சந்திப்பு.
2000 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் தீண்டாமையின் பெயரால் தலித்துகள் கல்வி மறுக்கப்பட்டு, கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வருகின்றனர்.
1923ல் இக்கொடுமையைத் தகர்த்த அண்ணல் அம்பேத்கர் கொலம்பிய பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று இந்தியா திரும்பி தனது மக்கள் மேம்பாட்டிற்காகப் போராடத் துவங்கினார். இந்திய அரசியல் சாசனத்தை வரைந்தார். இந்து மதத்தைப் புறக்கணித்து பெளத்ததைத் தழுவ தனது மக்களுக்கு வழிகாட்டினார். காலத்தை வென்று நிற்கும் அவரது போராட்டங்கள் மக்களிடையே பாடல்களாகவும், கவிதைகளாகவும் இன்றும் இசைக்கப்படுகின்றன.
1997இல் மும்பையில் ஒரு தலித் காலனியில் டாக்டர். அம்பேத்கரின் சிலை அவமதிக்கப்பட்டபோது, மக்கள் திரண்டெழுந்தனர். காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக பத்து பேர் இறந்தனர். “விலாஸ் கோக்ரே” என்னும் இடது சாரிக் கவிஞர் போராட்டத்தில் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார்.
“ஜெய் பீம் காம்ரேட்” 14 வருடங்களுக்கும் மேலாக படம்பிடிக்கப்பட்டுள்ளது.
தலித் மக்களின் போரட்டத்தில் முன் நின்ற கவிஞர் விலாஸ் கோக்ரேயின் இசையைப் பின் தொடர்ந்து அவரின் தியாகத்தையும், அறநெறியின் நீண்டதொரு மரபையும் நமக்கு வலியுறுத்துகிறது.