லிப் டு லிப் முத்தக்காட்சியில் பதினான்கு கட்…

கிபிஷேக் பிலிம்ஸ் டினு வர்மா இயக்கத்தில் காட்டுப் புலி

அர்ஜுன் நடிப்பில் பாலிவுட்டில் புகழ்பெற்ற சண்டைக்காட்சி இயக்குனர் டினு வர்மா இயக்கத்தில் காட்டுப்புலி மும்பை மற்றும் அதனைச்சுற்றிய காட்டுப்பகுதிகளைக் கதைக்களமாகக் கொண்டு திகில் நிறைந்த காட்சிகளாக உருவாக்கியுள்ளது.

சமூகத்தைப் பாதுகாக்கும் முக்கியமான மூன்று துறைகளான அரசியல், காவல் மருத்துவம் ஆகியவற்றில் புனிதமான துறையாகக் கருதப்படும் மருத்துவத்துறையில் நுழையும் புல்லுருவிகளால் சமூகத்திற்கு எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்படுகிறது என்று அலசியிருக்கிறார் இயக்குனர்.

முழுக்கமுழுக்க நரமாமிசம் உண்பவர்கள் (Cannibals) மனிதர்களை வேட்டையாடும் காட்சிகள் திரைப்பட ரசிகர்களுக்கு திகிலுடன் கூடிய புது அனுபவமாக இருக்கும். தனது மனைவி குழந்தையுடன் காட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் டாக்டர் அர்ஜுனுக்கு உதவி செய்ய வரும் மூன்று ஜோடிகள் அதனைத் தொடர்ந்து ஏற்படும் பரபரப்பான சம்பவங்கள் கொலைகள் அதிலிருந்து எப்படி அனைவரையும் அர்ஜுன் காப்பாற்றுகிறார் என்பதே காட்டுப் புலியின் கதை. அர்ஜுனுக்கு ஜோடியாக பியங்கா தேசாயும் அவர்களது மகளாக தான்யாவும் நடித்திருக்கிறார்கள்.


இதில் மூன்று ஜோடிகளாக ராஜ் நீஸ் – சாயாலி பகத், அமீத்- ஹனயா, ஜாஹன் – ஜெனிபர் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

மூன்றாவது ஜோடியாக வரும் காதலர்களுக்கிடையே வரும் லிப் டு லிப் முத்தக்காட்சியில் பதினான்கு கட் சென்சார் கொடுத்துள்ளது. . …அந்த கிறங்கடிக்கும் காட்சியை சில நொடிகளுக்கே வருமாறு குறைக்கப்பட்டதில் இயக்குனருக்கு வருத்தம் எனினும் அனைத்து தரப்பினரும் படத்தைப் பார்த்து ரசிக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.

டினு வர்மா தனது கிபிஷேக் பிலிம்ஸ் சார்பாக தயாரித்து இருக்கும் காட்டு புலிக்கு இசை விஜய் வர்மா. காட்டு புலி வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளிவருகிறது.

டினு வர்மா தனது சிறந்த சண்டைக் காட்சிகளுக்காக 7 முறை பிலிம் ஃபேர் விருது வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

1 thought on “லிப் டு லிப் முத்தக்காட்சியில் பதினான்கு கட்…

  1. மூன்றாவது ஜோடியாக வரும் காதலர்களுக்கிடையே வரும் லிப் டு லிப் முத்தக்காட்சியில் பதினான்கை பலமுறை பார்த்துவிட்டு, கட் செய்த சென்ஸார் பாக்கியசாலிகள்!

Leave a Reply

Your email address will not be published.