இலக்கியம்கவிதைகள்

காதல் செய்ய முடியவில்லை என்றால்

வையவன்

இதோ நீங்கள் காணும் இந்தப் பக்கத்தில்
அச்சிட்டுள்ள எழுத்துக்களோடு உங்களால்
காதல் செய்ய முடியவில்லை என்றால்,
நெஞ்சின் ஊற்றில் ஊறி வந்த
அந்தச் சொற்களோடு காதல் செய்ய
முடியவில்லை என்றால்,
அந்தச் சொற்களின் மனப்பூர்வத்தோடு
காதல் செய்ய முடியவில்லை என்றால்,
அந்த மனத்தைத் திறந்து விட்ட கண்களோடு
காதல் செய்ய முடியவில்லை என்றால்,
அந்தக் கண்கள் தரிசித்த ஆத்மாவோடு
காதல் செய்ய முடியவில்லை என்றால்,
விட்டு விடுங்கள் பரவாயில்லை..
உறங்கிக்கொண்டிருந்த எது எதையோ நீங்கள்
விழிக்கச் செய்து விட்டீர்கள். அது போதும்.

 

படத்திற்கு நன்றி:http://aizamiaboojaejoong.blogspot.in/2011/05/love.html

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    வருக வையவன், தருக இன்னும்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க