நடிகை சிநேகா கண்தானம் செய்ய ஒப்புதல்

Sneha_eye_donation

பிரபல நடிகை சிநேகா, தனது கண்களைத் தானம் செய்ய, 2011 பிப்.15 அன்று ஒப்புதல் வழங்கினார். இதற்கான படிவத்தில் கையொப்பமிட்டு ராஜன் ஐ கேர் மருத்துவமனைக்கு அவர் வழங்கினார்.

தமிழ் சினிமாவின் புன்னகை இளவரசி என அழைக்கப்படும் நடிகை சிநேகா, பல்வேறு சமூக நலப் பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

சமீபத்தில் கூட போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கும் ரோட்டரி கிளப் முயற்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில் தன்னை அந்த அமைப்பில் இணைத்துக்கொண்டு நிதியுதவியும் அளித்தது நினைவிருக்கலாம்.

இப்போது தனது வாழ்நாளுக்குப் பிறகு, தன் கண்களைத் தானம் செய்ய சிநேகா சம்மதித்துள்ளார். இதற்கான விழா,  2011 பிப்.15 அன்று காலை சென்னை ராஜன் ஐ கேர் மருத்துவமனையில் நடந்தது.

கண்தானப் பத்திரத்தில் கையொப்பமிட்டு, மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கிய சிநேகா, “கண்தானம் செய்வதன் மூலம், வாழ்க்கையைத் தொடர்ந்து வாழும் வாய்ப்பு கிடைக்கிறது” என்றார்.

============================
தகவல்: மக்கள் தொடர்பாளர் அ.ஜான்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நடிகை சிநேகா கண்தானம் செய்ய ஒப்புதல்

  1. When many people are donating their eyes, I do not understand the special publicity for Actress sneha. If a general article had been written about the donation, It would have been good.

  2. திரைத் துறையினரைப் பற்றிய நல்ல செய்திகளையும் வெளியிடலாம் என்பது நம் கருத்து. அவர்களைப் பலரும் பின்பற்றுகிறார்கள், அவர்களுக்குச் சமூகத்தில் நல்ல செல்வாக்கு இருக்கிறது என்பது உண்மை.

    எனவேதான் தொலைக்காட்சி விளம்பரங்களில் சிநேகா அதிகமாகத் தோன்றுகிறார். அவர் வாயிலாக மேலும் சிலர், உறுப்புக் கொடை பற்றிய விழிப்புணர்வைப் பெற வாய்ப்பு உண்டு.

    உறுப்புக் கொடை அளிக்கும் யாரைப் பற்றியும் தமிழில் தட்டச்சு செய்து, மின்னஞ்சலில் இப்படியான செய்திகளை அனுப்பினால் வல்லமையில் மகிழ்ச்சியுடன் வெளியிடுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *