நிலவொளியில் ஒரு குளியல் – 16

10

ஸ்ரீஜா வெங்கடேஷ்

Srija_venkateshஇம்முறை என்னுடைய பள்ளிப் பருவ நாட்களையோ , இல்லை மற்ற இனிமையான நினைவுகளையோ உங்களோடு பகிர்ந்துகொள்ளப் போவதில்லை. பதிலாக நம் நாடு குறித்த , நம் உண்மையான தலைவர்கள் குறித்த சில இனிய நினைவுகளே இந்தப் பத்தியில் இடம் பெறப் போகின்றன. ஊழலென்னும் பெரும் பூதம் நம் நட்டில் இப்போது தலை விரித்தாடி வருகிறது. நாமும் அதைக் கண்டும் காணாதது போல், ஏன் சில சமயம் நாமே அதை வளர்த்தும் விடுகின்றோம். அதனால் விளையும் சீர்கேடுகள் குறித்தும் இந்தப் பத்தியில் பேசப் போகிறேன். அப்படிப்பட்ட பூதத்துக்கும் அடிமையாகாத தலைவர்கள் நம் நாட்டில் இருந்திருக்கவே செய்கிறார்கள்.

காந்தீய வழியிலேயே தன் வாழ் நாள் முழுவதும் வாழ்ந்து , மறைந்த நம் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியையே எடுத்துக்கொள்ளுங்களேன். நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத அளவு நெருப்பைப் போல நேர்மையானவராக இருந்திருக்கிறார்.

அவர் மகன் சுனில் சாஸ்திரி, தன் தந்தையைப் பற்றிய நினைவுகளை எழுதும் போது “எங்கள் தந்தை பிரதமர் ஆனவுடன் எங்கள் வாழ்வில் மகத்தான ஒரு மாற்றம் நிகழும் , பெரிய பெரிய வீடுகள் , கார்கள் வேலைக்கரர்களென எங்கள் வாழ்வு அமையும் என நினைத்தோம் . ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. ஒரு நாள் நான் என் தந்தையிடம் ‘உங்களுக்கு அலுவலகத்தில் கார் கொடுத்திருக்கிறார்கள் அல்லவா?’ என்று கேட்டேன். அவரும் ‘ஆமாம் ஒரு செவர்லே இம்பாலா கார் கொடுத்திருக்கிறார்கள்’ என்றார். நான் என் தந்தைக்குத் தெரியாமல் ஓட்டுனரிடம் காரை வீட்டிற்கு எடுத்து வருபடி செய்து, என் நண்பர்களோடு உல்லாசமாக ஓட்டிச் சென்றேன். ஆனால் என் தகப்பனார் ஓட்டுநரிடம் லாக் புக்கைக் கேட்டு வாங்கி நாங்கள் ஓட்டிச் சென்ற தூரமான 14 கி.மீ க்கு உண்டான காசைக் கணக்கிட்டு அரசாங்கத்தில் கட்டினார்” எனப் பெருமையோடு நினைவு கூர்கிறார்.

இப்போது நம் அரசாங்க அதிகாரிகளின் நாய்களுக்கு உடல் நலமில்லையென்றாலும் அரசாங்க வண்டியில்தான் சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு கீரைக்கட்டு வாங்க வேண்டுமா? அரசு வாகனம் இருக்கவே இருக்கிறது.

Lal_Bahadur_Shastriசுனில் சாஸ்திரி மேலும் தொடர்கிறார். “ஒரு முறை என் தாய் ஹிந்தி எழுதப் படிக்க கற்றுக்கொண்ட போது , வீட்டு வேலைக்காரியை நிறுத்திவிட்டு, அந்தப் பணத்தை மிச்சம் பிடித்துத்தான் படிக்க முடிந்தது அவரால்” என்கிறார்.

இவையெல்லாம் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத நிகழ்வுகள். ஏன் நம் தமிழ்நாட்டிலேயே காமராஜர் இல்லையா? தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர், சாகும் போது அவருக்குச் சொந்தமாக ஒரு வீடு கூடக் கிடையாது. கக்கன் மந்திரியாக இருந்தவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட்டார். இன்றைய காலக்கட்டத்தைப் பொறுத்தவரை இவர்களெல்லாம் பிழைக்கத் தெரியாதவர்கள். ஆனால் இவர்கள் தன்னையே நாட்டின் சொத்தாக நினைத்தவர்கள். இப்போது இருப்பவர்களோ, நாட்டையே தன் சொத்தாக நினைக்கிறார்கள்.

இன்றைய தமிழகத்தின் நிலையைக் கொஞ்சம் பார்ப்போமா? தமிழகத்தில் நதிகள் எதிலும் மணல் என்பதே இல்லை. ஆற்றுப் படுகைகள் எல்லாம் உழுது பயிரிடும் நிலங்கள் போல காட்சியளிக்கின்றன. வெறுமே மணற்கொள்ளை , மணற்கொள்ளை என்று எதிர்க் கட்சிகளும் தேர்தலையொட்டி கூவுகின்றவே ஒழிய, அதனால் உண்டாகும் விளைவுகளை மக்களுக்கு எடுத்துக் கூறத் தவறிவிட்டன.

Kamarajarஆற்று மணல்தான் ஆற்று நீரை வடிகட்டி, தெள்ளிய நீராக ஆக்கும். அதையும் மீறி எஞ்சியிருக்கும் அழுக்குகளை மீன்கள் தங்களுக்கு உணவாகக் கொண்டுவிடும். அதனால் ஆற்று நீரைக் காய்ச்சாமல் அப்படியே குடித்தாலும் ஒன்றும் செய்யாமலிருந்தது அந்தக் காலங்களில். ஆனால் இப்போது நிலைமை தலைகீழ்.

தவிர மற்றொரு முக்கியமான ஆபத்தும் இந்த மணற்கொள்ளையால் உருவாகலாம். பெருமழைக் காலங்களில் ஆற்றில் தண்ணீர் கட்டுக்கடங்காமல் வரும்போது மணல் இல்லையென்றால் ஆறு தன் போக்கை மாற்றிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. இதனால் கரையை ஒட்டி அமைந்த பகுதிகளில் பெரும் பொருட்சேதமும் உயிர்ச்சேதமும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நம் மக்களோ, வீடு கட்ட மனை கிடைத்தால் போதும் என்று லஞ்சம் கொடுத்தாவது கரையை ஒட்டிய பகுதிகளில் அனுமதி வாங்கி வீடு கட்டி விடுகிறார்கள். இதன் பின் விளைவுகளை  மழைக்காலங்களில் செய்த்தாள்களில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அடித்துச் செல்லப்பட்டது குறித்து நாம் படிக்கிறோம்.

மணலை மட்டுமா கொள்ளையடித்தோம்? தமிழ்நாட்டையொட்டிய எந்த வனப் பகுதியிலும் இப்போது மரங்கள் என்பவை நிழலுக்குக் கூடக் கிடையாது. எல்லா மரங்களையும் வெட்டியாகி விட்டது. அதனால் மரங்களை நம்பி வாழும் மான் போன்ற விலங்குகள் இல்லாமல் போய்விடுகின்றன. அதன் விளைவு அவற்றை நம்பி வாழும் சிறுத்தை போன்ற விலங்குகள் உணவு தேடி,  மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருகின்றன . வேறு வழியின்றி  வீணாக சாகடிக்கவும் படுகின்றன.

இதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் , பாவனாசம் பொதிகை மலைக் காடுகளைச் சொல்லாம். இருபது வருடங்கள் முன்பு அந்தக் காட்டில் கன்னிமார் துறை என்றொரு இடம் உண்டு. அதுதான் அந்தக் காட்டின் நுழைவு வாயில் போன்றது. தமிரபரணி நதியின் அழகைக் காண வேண்டுமானால் அங்கே போக வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு அழகான இடம். ஒரு குறிப்பிட்ட இடம் வரை தான் வாகனங்கள் செல்லும். பிறகு நாம் நடந்து தான் போக வேண்டும்.

வாகனம் நிறுத்தும் இடத்திற்கு அருகிலேயே மான்களும் மிளாக்களும் மேய வரும். நானே பார்த்திருக்கிறேன். நடு மதியத்திலும் வெயிலே உட்புகாதவாறு மரங்கள் அடர்ந்திருக்கும். எங்கே திரும்பினாலும் அழகிய பூ மரங்கள், அவற்றின் மீதிருந்து வரும் பறவைகளின் கூவல்கள். இதன் நடுவே தாமிரபரணி நதியின் சீறிப் பாயும் வெள்ளம். இந்தக் காட்சிக்கு இணையான காட்சி, வேறெங்கும் கிடையாது என்று அடித்துச் சொல்லலாம். இயற்கை அன்னையின் பரிபூரண ஆசியைப் பெற்ற இடம், அது.

கன்னிமார் துறை என்பது, நதியின் ஒரு கரை. மறு கரை இன்னும் அடர்த்தியாக இருக்கும். அங்கே போகக் கூடாது. போவதற்கு வழியும் கிடையாது. அது புலிகள் வாழும் இடம். அங்கே பல வருடங்கள் முன்பு , என் அப்பாவின் கல்லூரி நாள்களில் புலிகளைப் பார்த்ததாக அவரே சொல்லியிருக்கிறார்.

அவையெல்லாம் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முந்தைய பழங்கதை. இன்றைய நிலை என்ன தெரியுமா? போய்ப் பார்த்தால் ரத்தக் கண்ணீர் வருகிறது.  மருந்துக்குகூட மரங்கள் இல்லை. நல்ல வெயில் சுட்டெரிக்கிறது. ஆங்காங்கே காய்ந்து போன நிலையில் சிற்சில முட்புதர்கள். சிறு குட்டை போல் ஓடும் (?)  தாமிரபரணி. இதுதான் இன்றைய கன்னிமார் துறை. இந்தச் சூழலில் மான்கள் வாழும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் அல்லவா? அப்படியானால் அங்கே வாழ்ந்திருந்த புலிகள் , வேங்கைகள் மற்றும் யானைகளின் நிலை?  எல்லாம் அழிந்துதான் போயிருக்க வேண்டும். இல்லையில்லை நாம் அழித்துவிட்டோம். தெரிந்த ஒரு இடத்தின் கதி இது. இதுபோல் வெளியில் தெரியாத எத்தனை இடங்கள், தங்கள் பொலிவை இழந்தனவோ? யாருக்குத் தெரியும்?

இந்தச் சீரழிவுகளுக்கு மொத்தக் காரணமும் அரசியல்வாதிகள் மட்டும்தான் என்று என்னால் மனச்சாட்றின்றிக் கூற முடியவில்லை. பொதுமக்களான நம் பங்கும் இதில் கணிசமாக இருக்கிறது. மரங்களை வெட்டக் காரணமான காட்டிலாகா அதிகாரிகள் என்ன அரசியல்வாதிகளா? இல்லை, அப்படி மரங்கள் வெட்டப்படும்போது தேமேயென்று பார்த்துக்கொண்டிருந்த சமூக ஆர்வ, சுற்றுச் சூழல் விழிப்புணர்வு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்தான் அரசியல்வாதிகளா? பொதுவாக நம்மிடம் சுயநலம் மிகுந்துவிட்டது. என்னுடைய தேவைகள் பூர்த்தியானால் போதும். சுற்றுச்சூழல் எப்படிப் போனால் நமக்கென்ன? யார் என்னவானால் எனக்கென்ன? என்ற மனோபாவம் வேரோடி விட்டது தான் இதற்குக் காரணம்.

இந்த மனோபாவம் மாறினாலொழிய நம்மால் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க முடியாது. இதற்கு மாற்று வழியும் நம் கையில்தான் இருக்கிறது. இந்தியாவின் எதிர்காலம் நம் குழந்தைகள் தான். அவர்களுக்குச் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் புரிய வைத்துவிட வேண்டும். சுயநலமில்லத தலைவர்களைப் பற்றி எடுத்துச் சொல்லி , ஊழலை நம் தேசிய குணமாக அங்கீகரிக்கும் நிலையிலிருந்து மாற்ற வேண்டும். இது முழுக்க முழுக்க பெற்றொர்கள் கையில் இருக்கும் ஒரு விஷயம்தான்.

குழந்தை பிறந்த உடனே இவன் டாக்டராக வருவான், இஞ்சினியராக வருவான் என்று கனவு காணும்போது கூடவே சேர்த்து அவன் ஒரு நல்ல குடிமகனாக இருக்க வேண்டும் என்ற கனவையும் சேர்த்துக் காண்பார்களேயானால் நம் நாடு வல்லரசாகும் நாள், சீக்கிரமே வரும். ஏனென்றால் இன்று குழந்தைகளாயிருப்பவர்களே, நாளை மாவட்ட ஆட்சியாளர்களாகவும் , அரசு அதிகாரிகளாகவும் , மந்திரிகளாகவும் கூட பணியாற்றப் போகிறார்கள். அவர்கள் வளரும் போதே நல்ல கோட்பாடுகளுடனும், நேர்மையாகவும் வளர்க்கப் படுவார்களேயானால் நிச்சயமாக ஊழலற்ற சமூகத்தை அவர்களால் கண்டிப்பாகப் படைக்க முடியும்.

கடந்த கால நல்ல அரசியல்வாதி தப்புத் தப்பு , தலைவர்கள் சிலரின் நேர்மையை நினைத்துக்கொண்டு , வருங்கால இந்தியாவில் நிச்சயம் அப்படிப்பட்ட நல்ல தலைவர்கள் தோன்றுவார்கள். அவர்களை உருவாக்குவது நம் கடமை மற்றும் பொறுப்பு. இந்த இனிய நினைவுளை மனத்தில் ஏந்திக்கொண்டு, நம்பிக்கையோடு நிலவொளியில் ஒரு குளியல்.

(மேலும் நனைவோம்….

==========================

படங்களுக்கு நன்றி: விக்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

10 thoughts on “நிலவொளியில் ஒரு குளியல் – 16

 1. Thank you for choosing such a different topic. The things you have said are absolutely true. Nowadays, it is all because of our selfishness that many of our forests are being destroyed. It is really hard to believe that there was a dense forest in podhigai mountain .What a great loss to our environment.Good work.

 2. லால் பகதூர் சாஸ்திரி அவர்களை நினைக்கையில் மிகவும் பெருமையாக இருக்கிறது. அதைப் போலவேதான் கக்கனும் காமராஜரும். நாட்டுக்காகவே வாழ்ந்தவர்கள். இப்பொழுதுள்ள அரசியல்வாதிகளிடம் இதை எதிர்பார்க்க முடியாது.

 3. I still cant believe that inspite of having these legendary clean leaders in congress, how these dravidian parties clinched to power in Tamilnadu. If at all anyone has to be blamed, it has to be the public who voted third rated politicians to power and pushed the country to deep shit.

 4. Of course, you had narrated the real thing and It has to be realised by every one. From next generation, they does’t know about paddy or any agricultural products. They will ask how paddy is manufactured. That day is not for away. Every body has to think and react.

  Special thanks to mami for selecting this topic and simply one kalakkal

  K. Ramesh

 5. This topic is really fantastic. Now-a-days we can not expect such a TRUTH and FAITH either from Politician or from Public. Every politician is money minded and they are earning and spending money from public . From school to college and from Assembly to Parliament everything is commercial. People should think and follow the good principles like above referred MAHATMAS.

 6. This is really SUPERB! This topic advises the people to lead a truthful life and to nurture the nature.

  My best wishes to Srija Venkatesh

 7. All the best Sreeja Venkatesh…please write about these kind of current affairs which are going unnoticed in most of the media coverages…

 8. The topic chosen by the madam is really important at this moment. We should also teach our children to fight against corruption which is being done by politician and government officials. It is not sure that all our children become government official or politicians but we can grow our children as good as citizen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *