முகில் தினகரன்

உன்
செயல்பாடுகளைச்
சோதிக்கும்
உரைகல்தான் தோல்வி!

உன்
வெற்றிகளைத்
தடுக்கும்
தடைக்கல் அல்ல தோல்வி!

உன்
முயற்சிகளை
முடுக்கும்
முன்னுரைதான் தோல்வி!

உன்
முன்னேற்றத்தை
முடக்கும்
முடிவுரை அல்ல தோல்வி!

உன்
சோம்பல்களைச்
செப்பனிடும்
செவ்விடியல் தோல்வி!

உன்
உயர்வுகளை
வழி மறிக்கும்
அஸ்தமனம் அல்ல தோல்வி!

உன்
நம்பிக்கையை
நிமிர வைக்கும்
நங்கூரமே தோல்வி!

உன்
சுயவுறுதியைக்
குலைத்து விடும்
சூறாவளி அல்ல தோல்வி!

உன்
தொடக்கம்தான் தோல்வி!
நீ
தொடர்ந்தால்தான் வெற்றி!!

 படத்திற்கு நன்றி :

http://www.truewhisper.com/get/downloads/wallpapers/inspirational-wallpapers/im-close-to-success.htm

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க