இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவர்!
பவள சங்கரி
தலையங்கம்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் இந்திய நாட்டின் முதல் குடிமகன் என்ற சிறப்பை உடைய குடியரசுத்தலைவர் நம் இந்திய அரசின் தலைமை நிர்வாகியாகவும், பிரித்தானிய அரசருக்கு நிகராகவும், நம் முப்படைகளின் தலைவராகவும் இருக்கக்கூடியவர். இன்றுவரை பிரித்தானிய அரசியல் சாசனத்தின் பல முக்கிய அமசங்களையே நம் இந்திய அரசியல் சாசனமும் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சர்கள் முதல் பிரதம மந்திரி வரை அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கக்கூடியவர் நம் குடியரசுத் தலைவர். மத்திய அரசின் அனைத்து முக்கிய பதவிகளும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகே மாற்றம் செய்ய வேண்டியது. ஆயினும், தனியாக முடிவெடுக்கும் அதிகாரம் குடியசுத் தலைவருக்கு இல்லை. நாடாளுமன்றம் இயற்றும் எந்த ஒரு சட்டமும், அரசு சம்பந்தப்பட்ட முக்கிய ஒப்பந்தங்களும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மட்டுமே அரங்கேற்றப்படுகிறது. மத்திய அரசிற்கு பெரும்பான்மை இல்லாத நேரங்களில் குடியரசுத்தலைவரின் முடிவுகள் இன்றியமையாதது. தூக்கு தண்டனை பெற்ற கைதிகளின் தண்டனையை அவர்களின் கருணை மனுவின் அடிப்படையில் ரத்து செய்யவோ அல்லது குற்றவாளிகளின் தண்டனைகளை குறைக்கவோ குடியசுத் தலவருக்கு அதிகாரம் உண்டு. அரசு அமைக்கக் கோருபவர்களின் பெருபான்மையை அங்கீகரிப்பதில் குடியரசுத் தலைவரின் பங்கு இன்றியமையாதது.
நம் நாட்டின் 14வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கக்கூடிய தேர்தல் நேற்று முடிவடைந்தது. தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் நம் பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் குடியரசுத் த்லைவர் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி மற்றும் அனைத்து மத்திய அமைச்சர்களும் வாக்களித்தனர். காலை பத்து மணிக்குத் துவங்கி மாலை 5 மணிக்கு முடிவுற்ற இந்த தேர்தலில் எம்.பிக்கள் நாடாளுமன்றத்திலும், எம்.எல்.ஏக்கள் அந்தந்த மாநில சட்டசபைகளிலும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதிலும் மொத்தம் 776 நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களும், 4120 எம்.எல்.ஏக்களும் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இவர்களின் மொத்த வாக்கு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரம். 77 எம்.பி.க்களுக்கு சொந்த மாநிலங்களில் வாக்களிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது, 7 மாநிலங்களைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களுக்கும் நாடாளுமன்ற வாக்குச்சாவடியில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தமிழக சட்டசபை உறுப்பினர்கள், சென்னை கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து முடித்துள்ளார்கள். 34 மாநில சட்டசபை உறுப்பினர்களும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்றும் 5 மாநிலங்களவை உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். இந்தத் தேர்தலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும், தேமுதிகவினரும் புறக்கணித்துள்ளனர்.
தற்போது குடியரசுத் தலைவராக இருக்கும் பிரதீபா பாட்டிலின் பதவிக்காலம் ஜூலை 25ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திரு பிரணாப் முகர்ஜியும், எதிர் கட்சியான பாஜக, அதிமுக, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் பி.ஏ. சங்மாவும் போட்டியிட்டுள்ளனர். இத்தேர்தல் முடிவுகள் வருகிற 22ம் தேதி (ஜீலை 22, 2012) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். மாநிலங்களவை பொதுச் செயலாளர் வி.கே.அக்னிஹோத்ரி குடியரசுத் தலைவர் தேர்தல் அதிகாரியாக உள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் வேட்பாளராகவும், முலாயம் சிங்கின் சமாஜ்வாடி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம் மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல கட்சிகள் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன், பிரணாப் முகர்ஜியை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா போட்டியிட்டுள்ளார். தற்போது மேகாலயாவின் முதல் அமைச்சராக பதவி வகிப்பவர். இவர் மகன் எதிர்கட்சியிலும், மகள் அக்தர் சங்மா மாநில அமைச்சராகவும் இருக்கிறார்கள். அணு ஆயுதங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய இவர் சட்டம் படித்தவர்.
தற்போதைய துணைப் பிரதமர் கல்கத்தாவைத் சேர்ந்த ஹமீத் அன்சாரி. நேஷனல் கமிஷன் ஆஃப் மைனாரிட்டீஸின் சேர்மனாகப் பதவி வகித்தவர். அதுமட்டுமன்றி, இவர் அலிகார் முஸ்லீம் யூனிவர்சிட்டியின் துணைவேந்தராகவும் இந்திய வெளியுறவுத் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.
பதினோராவது குடியரசுத் தலைவராக பணியாற்றிய அப்துல் கலாம் கூடங்குளம் அணுமின் நிலைய ஆதரவாளராக இருப்பவர். அணு ஆயுதத் தயாரிப்பின் மூலம் 2020இல் இந்தியா வல்லரசாகும் என்று ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கும் அணு விஞ்ஞானி. ”what can I give movement” என்ற அமைப்பின் மூலம், இளைஞர்களுக்கு ஊழலை ஒழிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளவர். ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலிலிருந்து விலகிவிட்டார்.
நிதியமைச்சராக இரண்டு முறைகளும் வெளியுறவுத் துறை அமைச்சராக இரண்டு முறைகளும் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், மற்றும் திட்டக் குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தவர், தற்போதைய நிதியமைச்சராக உள்ள பிரணாப் முகர்ஜி அவர்கள் பிற்காலத்தில் காங்கிரசுடன் இணைந்த ராஷ்ட்ரீய சமாஜ்வாதி காங்கிரசைத் தோற்றுவித்தவரும் இவரே. . சார்க் மாநாட்டில கலந்து கொண்டவர். பிரணாப் முகர்ஜி அப்துல் கலாம் போன்றே பாரத் விபூஷண் விருது பெற்றவர்.
முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர், பாராளுமன்றத்தின் உறுப்பினராக 9 முறை தேர்ந்தெடுக்கப்படவர், சட்டம் படித்த சோம்நாத் சட்டர்ஜி, வங்காளத்தைச் சார்ந்தவர். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்.
தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கௌகாத்தியைச் சேர்ந்தவர். வெளியுறவுத்துறை, நிதித்துறை மற்றும் ரயில்வேத் துறை ஆகியவற்றின் அமைச்சராகச் செயல்பட்டவர். உலகமயமாக்கல் கொளகையை ஆதரித்துவரும் இவர் ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வ்கித்தார். திட்டக்குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தவர்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவராகப் பதவியேற்பதற்கு கிட்டத்தட்ட 5 1/2 இலட்சம் வாக்குகள் தேவை. முன்னாள் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்திருப்பவர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு பார்த்தால் 7 இலட்சம் வாக்குகளுக்கும் மேல் கிடைககலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக வெகு விரைவில் நம் நாடு அடுத்த குடியரசுத் தலைவரை சந்திக்கப் போகிறது. இனிவரும் காலங்கள் நம் இந்திய நாட்டின் பொற்காலமாக அமையும் என்று நம்புவோம்!
தேர்தல் 14 வது முறையாக நடந்தாலும், தேர்ந்தெடுக்கப்படுபவர் 13 வது குடியரசுத்தலைவர்தான்.
14 yappadi 13 aagum..?
முதல் குடியரசுத்தலைவர் தொடர்ந்து இரண்டு தேர்தலில் வென்றதால்..
//sankaranarayanan balasubramanian wrote on 20 July, 2012, 23:06
14 yappadi 13 aagum..?//