பாகம்பிரியாள்
நான் வளர, வளர என் நினவுகளும்
நெடுநெடுவென்று வளர்ந்தன.
என்னோடு போட்டிப்போட்டுக்கொண்டு

வளரும் வேகத்திலோ அவை
வேண்டாத இடத்தில் எட்டிப்பார்த்ததால்,
வந்து விழுந்த வம்பு சண்டைகள் ஏராளம்.

அதைத் தீர்ப்பதற்கே நேரம் போதவில்லை
என்ற அங்கலாய்ப்பும், எரிச்சலும் குடும்பத்தை
அவ்வப்போது  பிரட்டிப்போட்டது.

சற்றே வலித்தது என்றாலும்
தொல்லை தரும் நினவுகளை
குட்டையாய் வெட்டிக் கொண்டேன்.

வீண் தொல்லைகள் ஏதுமில்லை.
விழும் சருகுகள் என் தொட்டியிலேயே
வேருக்கான உரமாகிப்போனது.

வேலை வட்டாரத்தில், பழகப்பழக
புரிந்தது, என்னைப்போல் பலரும்
போன்சாய் வைத்திருக்கிறார்கள் என்று!

அதைப்பற்றி நல விசாரிப்புகளும்,
அவசியமான குறிப்புக்களும்
அவ்வப்போது வந்து சேருகின்ற போதில்,

மரமெங்கும் பூக்குவியல் கொத்துக்கொத்தாய்,
மணம் வீசியதால், மகிழ்ந்தவர் சிலரே, பலருக்கோ
மனனதைப் பிராண்டும் கேள்விகள் பல.

ஆனால் அவர்களிடம் எப்படி சொல்வேன்?
மரமாய்  நின்ற  என் மீது காதலி(யி)ன்
அழகிய பாதம்  பட்டதால் நிகழ்ந்த விந்தை இதுவென்று!

 

படத்துக்கு நன்றி

http://www.masterfile.com/stock-photography/image/400-05878811/Pink-Azalea-Bonsai-Tree-of-Satzuki-type.

2 thoughts on “என்னுடைய போன்சாய்!

  1. அருமை……இன்றைய அவசர உலகில் உறவுகளின் உண்மை நிலையை உணர்த்துகிறது போன்சாய்….

  2. கவிதைக்கு யாதார்த்தமான பாராட்டுத் தந்த திரு பி. தமிழ்முகுல் நீலமேகம் அவர்களுக்கு நன்றி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க