டோர்ஜி காண்டு மரணம் – மன்மோகன், சோனியா நேரில் அஞ்சலி

0

Dorjee Khandu

அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு, 2011 ஏப்ரல் 30 அன்று , தவாங் பகுதியில் இருந்து இடாநகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அவருடன் கேப்டன்கள் ஜே.எஸ்.பாபர், டி.எஸ்.மாமிக், பாதுகாப்பு அதிகாரி யெஷி சோடக், தவாங் தொகுதி எம்எல்ஏவின் சகோதரி யெஷி லாமு ஆகியோரும் சென்றனர். இந்த ஹெலிகாப்டர், விபத்தில் சிக்கி நொறுங்கியது.

அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விபத்து நடந்ததால் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. 5 நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு தவாங் மாவட்டத்தின் லுகுதாங் காட்டுப் பகுதியில் ஹெலிகாப்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 4 ஆயிரத்து 500 மீட்டர் உயரமுள்ள கெய்லாவில் டோர்ஜி காண்டு மற்றும் 4 பேரின் உடல்கள் கிடப்பது தெரியவந்தது. கடும் பனிப் பொழிவு இருந்ததால் மீட்புப் பணிகள் மெதுவாகவே நடந்தன.

பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், தேசிய ஆலோசனைக் குழு தலைவர் திருமதி சோனியா காந்தி ஆகியோர், அருணாச்சல பிரதேசத்திற்கு 06.05.2011 அன்று நேரில் சென்றனர். டோர்ஜி காண்டு குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.

===========================================

நன்றி: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *