கரிகாலன்: விக்ரம் நடிக்கும் புதிய படம்

vikramசீயான் விக்ரம் நாயகனாக நடிக்கும் படம், கரிகாலன். எல்.ஐ. கண்ணன் இயக்கும் இந்தப் படத்தில் பாலிவுட் நாயகி ஜரைன் நாயகியாக நடிக்கிறார்.

கரிகாலன் என்கிற ராஜாவின் வாழ்க்கையைப் புனைவுக் கதையாகப் பதிவு செய்யும் திரைப்படம், கரிகாலன். இந்தப் பிரமாண்டமான திரைப்படம், Animatronics, Miniature, Computer Graphics போன்ற முதல் தர தொழில்நுட்பங்களால் உருவாகிறது.

பல நாட்டு நவீன தொழில்நுட்ப வல்லுனர்கள் இணைந்து படைக்கும் பெரும் பொருட்செலவு நிறைந்த கரிகாலன் படத்தை SilverLine Film Factory  தயாரிக்கிறது. ஜீவா நடித்து வெளியான “சிங்கம்புலி” வெற்றிப் படத்தின் தயாரிப்பாளர்கள் எஸ். பார்த்தி, எஸ்.எஸ். வாசன் இணைந்து தயாரிக்கும் பிரமாண்ட படைப்பு இது.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு, தலைக்கோணம் காட்டுப் பகுதியில் அரங்கமைத்து நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கான ஆயத்த வேலைகளில் படக் குழு தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது.

கதாநாயகன்: “சீயான்”  விக்ரம்
கதாநாயகி:  ஜரைன் (Zarine )
பாலிவுட்டின்  வெற்றிப் படமான “VEER”இல் சல்மான் கானுடன் நடித்த முன்னணி கதாநாயகி ஜரைன் இப்படத்தின் நாயகியாகிறார்.

இயக்குநர்: எல்.ஐ. கண்ணன்

எந்திரன், அந்நியன், ஈரம், கஜினி, சிவகாசி, அருந்ததி போன்ற பல வெற்றிப் படங்களில் முன்னணி இயக்குநர்களோடு Visual Effects துறையில் பணியாற்றிய எல்.ஐ. கண்ணன் கரிகாலன் படத்தை இயக்குகிறார். திரை உலகில் 12  வருட ஆழமான அனுபவம் கொண்ட எல்.ஐ. கண்ணன் “Hollywood Camera Works” இன்ஸ்டியுட்டில் இயக்குநருக்கான பயிற்சி பெற்றவர் என்பது இவரின் சிறப்புத் தகுதி.

இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்

ஒளிப்பதிவாளர்: என். கார்த்திக்

எந்திரன், புகைப்படம், யாரடி நீ மோகினி, மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய என். கார்த்திக் இப்பிரமாண்ட திரைப்படத்தின் ஒளிப்பதிவினை மேற்கொள்கிறார்.

எடிட்டர்: மகேஷ்

பொறி, பீமா, 1977, சக்கரக்கட்டி, முன்தினம் பார்த்தேனே முதலான படங்களில் உதவி படத் தொகுப்பாளராக ஆண்டனியிடம் பணி புரிந்தவர்

கலை இயக்குநர்: எஸ்.எஸ். மூர்த்தி & மாயப்பாண்டி

அவள் பெயர் தமிழரசி, அவர்களும் இவர்களும், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை உள்ளிட்ட படங்களின் கலை இயக்குநர் மூர்த்தி இப்பிரமாண்டமான திரைப்படத்தின் கலை இயக்கத்திற்கான பொறுப்பேற்கிறார்.

மேலும், எந்திரன், ஈரம், வெயில், டிஷ்யூம் போன்ற படங்களில் உதவி கலை இயக்குநராக பணியாற்றியவரும், Animatronics துறையில் மிகுந்த அனுபவம் கொண்டவருமான மாயப் பாண்டி இத்திரைப்படத்தில் மூர்த்தியுடன் இணைந்து கலை இயக்குநராக பணிபுரிகிறார்.

மேலும் பல முக்கிய கதாப்பாத்திரங்களில் பசுபதி, சண்முக ராஜா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரப் பட்டாளங்களுடன் இத்திரைப்படம் மிகப் பிரமாண்டமாக உருவாகிறது.

=====================================

தகவல் – மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *