இந்தியாவின் மூன்று கலைகளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்

0

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2010-11ஆம் ஆண்டில் பண்பாடு குறித்த மக்களுக்கான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரவீந்திரநாத் தாகூர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்காகப் பிரதமர் தலைமையில் தேசிய குழுக்கள் அமைக்கப்பட்டன. ரவீந்திரநாத் தாகூரின் 150ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் வங்க தேசத்துடன் இணைந்து கூட்டாகக் கொண்டாடப்பட்டது சிறப்பு அம்சமாகும். பண்டித மதன்மோகன் மாளவியாவின் 150ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கும் தேசிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்திராகாந்தி தேசிய கலைகள் மையமானது 12 முக்கிய கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தியது. இதில் சுமார் ஐந்து லட்சம் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். இதுவரை இல்லாத ஒரு சாதனை அளவாகும். சங்கீத நாடக அகாடமியானது விருதுகளின் எண்ணிக்கையை 30இலிருந்து 40ஆக உயர்த்தியிருப்பதுடன் விருதுத் தொகையையும் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து மூன்று லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.

உலகின் சீரிய கலாச்சார பாரம்பரியத்தின் சிறந்த உதாரணங்களாக, யுனெஸ்கோ அமைப்பு, இந்தியாவின் மூன்று சிறந்த பழமையான கலைகளைத் தேர்வு செய்து அறிவித்துள்ளது. கேரளாவின் ‘முடியேட்டு’ பழமையான நாடகம், ராஜஸ்தானின் ‘கால்பெலியா’ கிராமப்புறப் பாடல் மற்றும் நடனம் கிழக்கு இந்தியாவின் ‘சாவ்’  கிராமப்புற நடனம் ஆகியவை மூன்று சிறந்த பண்பாட்டு பாரம்பரியங்களாகும். அருணாச்சலப் பிரதேசத்தின் டாஹங் என்ற இடத்தில் ஒரு புதிய மைய இமாலய கலை கல்வி நிறுவனத்தை அமைப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

===============================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *