முத்தான கவிஞர் நா முத்துகுமார்! பத்தாண்டுகளாய் முதலிடம்!!
வற்றாத கவியுள்ளம் வைத்திருக்கும் முத்து இவர்…
வழிந்தோடும் நேசத்தால் மனம் கவரும் முத்துக்குமார்!!
பத்தாண்டு காலங்கள் முதலிடத்தில் இருப்பதெல்லாம்
முத்தான கவிஞர் இவர் என்பதையே காட்டுகிறது!!
பரபரப்பு துடிதுடிப்பு இவைகளுக்கு மத்தியில்
உயிர்த் துடிப்பாய் பாடல் வர என்ன செய்வார்?
இசைக் குறிப்பு எனும் வரிக்குள் வார்த்தைச்சிலைகளை
அசைய வைத்துக் காட்டுகின்ற கவிஞர் இவரன்றோ?
வெற்றிக் கொடிகட்டி புகழைத் தொட்டாலும்
சற்றும் மமதையின்றி தன் பணியைத் தொடர்கின்றார்
கற்றும் கவித் துறையில் கால்பதித்த காஞ்சி மைந்தன்
எட்டும் புகழ் அனைத்தும் தமிழ்த்தாய்க்கே என்கின்றார்!!
……..
வாழ்க.. இவ்வையகம் உள்ளமட்டும்
தங்கத் தமிழ்போல்
என வாழ்த்தும்..
காவிரிமைந்தன்
நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்
பம்மல், சென்னை 600 075
தற்போது – துபாய்.
00971 50 2519693
kaviri2012@gmail.com
தங்களது ஒவ்வொரு கட்டுரையிலும் கவிதையிலும், கவிஞர்கள் மீது தாங்கள் வைத்துள்ள காதலை உணர முடிகிறது. பகிர்வுக்கு நன்றி ஐயா!
sir, i need yesu kaviyam book in pdf format. please send to iamarul@gmail.com