நான் அறிந்த சிலம்பு – 106
மலர் சபா
அவர்கள் பழவினை குறித்து
சாரணன் அறிந்தபோதும்
விருப்பு வெறுப்பு கடந்தவன்
தவம் செய்தவன் என்பதால்
தன்னை வணங்கி நின்ற அவர்களின்
துன்பம் அறிந்திட்ட போதும்
கலக்கம் கொள்ளவில்லை.
குறிப்பால் அவர்களுக்கு உணர்த்த எண்ணியே
கவுந்தியடிகளிடம் பேசலானான்;
“மிக்க பெருஞ்சிறப்பினையுடைய கவுந்தியே!
ஒழிக என்றாலும் யாராலும் ஒழிக்க முடியாத
தீவினையைக் காண்பாயாக!
விளைநிலத்தில் இட்ட வித்து
விளைந்து தகுந்த பயன் தருவதுபோலவே
இவர்களின் பழவினையும் வந்து
அதன் பயனை இவர்கள் அனுபவிக்க நேரும்போது
அதைத் தவிர்க்க முடியாது..
இதனை இவர்கள் மூலமாக அறிந்து கொள்வாய்.
கடுமையாகக் காற்று வீசுகின்ற
திறந்த வெளியிடத்தில் ஏற்றிவைக்கப்பட்ட
விளக்கின் சுடரானது
காற்றில் அழிந்து மறைவதைப்போல
பழவினைப் பயன் வந்து தக்கும்போது
உடலைவிட்டு உயிர் பிரிவது உறுதி” என்று கூறினான்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 168 – 175
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html
வல்லமையில் உங்களது 100 வது பதிவிற்கு வாழ்த்துகள் மலர்சபா.
சதமடித்த மலர்சபா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
மிகப்பெரிய சாதனை செய்துள்ளீர்கள், மலர்சபா! பாராட்டுக்கள்!
சிலப்பதிகாரத்தை சிறப்பாகத் தொடர்ந்து வழங்கி நூறு பதிவுகளைக் கடந்துள்ள திருமதி.மலர்சபா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் மலர்சபா!
வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி.