வாழ்ந்து படிக்கும் பாடங்கள் – புத்தக மதிப்புரை!
பா. சரவணக் குமார்
நூலின் பெயர் – வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
நூலின் ஆசிரியர் – என்.கணேசன்
நூல் வெளியான ஆண்டு – 2013
பக்க எண்ணிக்கை – 141
விலை – ரூ-110/-
பதிப்பக முகவரி – BLACKHOLE MEDIA PUBLICATION LIMITED,
No7/1 3rd Avenue, Ashok Nagar,
Chennai-600 083
Tel : 044 43054779
நூலின் ஆசிரியர் பற்றி:
நூலின் ஆசிரியர் என்.கணேசன் அவர்கள் கோவையில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிகிறார். வேலை மற்றும் குடும்ப கடமைகளின் மத்தியிலும் படிப்பவர்களை மேம்படுத்தும் விதமாக சிறு கதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களை தொடர்ந்து எழுதிவருகிறார். இவருடைய எழுத்துக்கள் தன்னம்பிக்கை, மன அமைதி, நற்பண்புகள், அறிவார்ந்த ஆன்மீகம் போன்ற நல்ல விஷயங்களை உணரச்செய்வதுடன் அவற்றை ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் பின்பற்ற தூண்டுகிறது.
இந்த நூல் யாருக்காக?
சிலர் தங்கள் வாழ்க்கை பயணத்தில் சந்திக்கும் சில மனிதர்களாலும், இக்கட்டான சூழ்நிலைககளாலும் எதிர்பாரா சம்பவங்களாலும் மிக முக்கியமான தன்னம்பிக்கை, மன அமைதி,காலம் ஆகியவற்றை இழந்து விரக்தி அடைகிறார்கள். அதன் பின் என்ன வாழ்க்கை இது? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ? இதற்கு சுற்றி இருப்பவர்கள் காரணமா இல்லை என்னுடைய வாழ்க்கை முறை தான் காரணமா ? நான் காரணமென்றால் வாழ்கையைச் சரியாக வாழ்வது எப்படி ? போன்ற கேள்விகள் எழுகிறது. இந்த கேள்விகளுக்கு விடை தேடுபவர்களுக்கு இந்நூல் ஒரு விலைமதிப்பில்லா பொக்கிஷமாகும்.
சிலர் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனைத்தையும் சமாளித்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் அந்த அனுபவங்கள் உணர்த்தும் உண்மைகளை தவற விட்டுவிடுகிறார்கள். அவர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
வாழ்கையை வாழத் தொடங்குபவர்களுக்கு இந்நூல் ஒரு வழிகாட்டியாகும்.
இயல்பாகவே கற்றுக்கொள்ளும் திறனாலும்,வளர்ப்பு முறையாலும், சூழ்நிலையாலும் வாழ்க்கையை உணர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்நூல் மற்றவர்களுக்கு அளிக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசாகும்.
“வாழ்ந்து படிக்கும் பாடங்கள்” நூலைப் பற்றி:
இந்நூலில் ஆசிரியர் வாழ்க்கையையும் பள்ளியையும் ஒப்பிட்டு விளக்குவது புரிந்து கொள்ள எளிதாக உள்ளது. எப்படி பள்ளியில் கற்றுக்கொள்ளும் பாடங்கள் நம்மை வெளிநிலையில்,உலகத்தில் மேம்படுத்துகிறதோ அதுபோலவே வாழ்க்கை கற்றுக்கொடுக்கும் அனுபவங்கள் நம்மை உள்நிலையில், வாழ்க்கையில் மேம்படுத்துகிறது என்று உணர்த்துகிறார். இந்த புரிதலால் வாழ்க்கையில் சந்தித்த, சந்திக்கப் போகின்ற அனைத்துமே நம்மை மேம்படுத்தும் பாடங்களே என்ற தெளிவு வாழ்க்கையை நம்பிக்கையுடனும், உற்சாகத்துடன் எதிர்கொள்ளும் மனநிலையைத் தருகிறது.
நூல் முழுவதும் சிறு கதைகளின் மூலமாக உயர்ந்த உண்மைகளை உணர்த்துகிறார். எடுத்துக்காட்டாக ஒரு அறிவாளி பல நூல்களை படித்த, விஞ்ஞானம் தெரிந்த, பல மொழிகளைக் கற்ற, கர்வம் கொண்ட ஒருவர் ஒரு இடத்திற்குச் செல்ல ஆற்றைக் கடந்து பயணிக்க வேண்டி இருந்தது. படகு ஒன்றை வாடகைக்கு எடுத்து பயணித்தார் அப்பொழுது படிக்காத படகோட்டியிடம் இது தெரியுமா அது தெரியுமா என்று பெரிய பெரிய விஷயங்களைப் பற்றி கேட்டு அவன் அவற்றைப் பற்றி தெரியாது என்று கூறிய பின் அவன் வாழ்க்கையே வீண் என்று பலவிதங்களில் உணர்த்திக்கொண்டு வந்தார். திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தால் படகில் ஓட்டை விழுந்தது படகோட்டி அவரைப் பார்த்துக் கேட்டான், ”ஐயா இத்தனை தெரிந்த உங்களுக்கு நீச்சல் தெரியுமா” என்று, அந்த மெத்த படித்தவருக்கு நீச்சல் தெரிந்திருக்கவில்லை முடிவில் படகோட்டி பிழைத்தார் அந்த அறிவு ஜீவி இறந்தார். இக்கதையின் மூலம் கல்வி,செல்வம் பட்டம் பதவி இவைகளைவிட வாழ்க்கைப் பாடம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் நாம் நம் வாழ்க்கையில் எந்த விதமான விஷயங்களுக்கு அதிமுக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை உணரச் செய்கிறார்.
நம் வாழ்க்கையில் அனைத்துப் பாடங்களையும் அனுபவங்கள் மூலமே கற்றுக்கொள்வது என்றால் நம் வாழ்நாள் போதாது. ஆகையால் மற்றவர்களின் அனுபவங்கள் மூலம் சரியான படிப்பினையை பெற வழிசொல்கிறார். நம் பலவீனத்தைப் பற்றி அறிந்து கொண்டு அது நம் வாழ்கையே மூழ்கும் அளவிற்கு வளரவிடாமல் எச்சரிக்கையாக இருக்குமாறு புராண கதைகளின் உதாரணங்கள் மூலம் அறிவுறுத்துகிறார். சோதனைகளைக் கடக்காமல் சாதனைகள் இல்லை என்பதையும் சோதனைகளின் அளவை வைத்தே வெற்றியின் அளவு தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் வால்ட் டிஸ்னி போன்ற சாதனையாளர்களின் வாழ்கையை உதாரணப்படுத்தி புரிய வைத்துள்ளார். சரியான உழைப்பும் சலிப்பில்லாத மனமுமே உயர்ந்த வெற்றியை பெற்றுத்தருகிறது என்பதை நோபல் பரிசு பெற்ற மேரி கியூரி அம்மையார் வாழ்க்கையின் மூலம் அறியச்செய்கிறார்.
கல்வியறிவுடன் சுயமாய் சிந்திக்கும் திறனும் இணையாவிட்டால் முழுமையான பயனில்லை என்பதை நினைவில் நிறுத்துகிறார். சில நேரங்களில் நம்மை அடுத்தவர்கள் குறைத்து மதிப்பிடுவதாக நாம் நினைக்கிறோம் ஆனால் உண்மை என்னவென்றால் நம்மை நாமே குறைவாக மதிப்பிடுவதுதான் என்பதை தெளிவுபடுத்துகிறார். அத்துடன் உடலில் குறைபாடுகளுடன் பிறந்த ஹெலன் கெல்லர் மற்றும் நிக் வூயிசிச் (Nick Vujicic) போன்றோரின் வாழ்க்கையில் புரிந்த சாதனைகளை பட்டியலிட்டு நமக்கு எந்த குறையும் இல்லை என்பதை உணரவைக்கிறார். (குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என்ற மனதின் ஹம்மிங்!!! கேட்கிறது).
மேலும் ஒவ்வொருவரும் தனித்தன்மையை உணர்தல், வாழ்க்கையை ரசித்து வாழ்தல் , தன்னம்பிக்கைக்கும் கர்வத்துக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்தல், நிகழ்காலத்ததை அனுபவித்து வாழ்தல், காது கொடுத்து கேட்டல், மனம் விட்டுப் பேசுதல், மற்றவர்களுக்கு மதிப்பளித்தல், நிறைவான வாழ்க்கைக்கு வழிகாட்டுதல், அதிர்ஷ்டத்தின் ரகசியம், திட்டமிட்டு வாழ்தல், மகிழ்ச்சிக்கும், கிளர்ச்சிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறியச்செய்தல், திறமை உழைப்பு காலம் மூன்றையும் சரியாக பயன்படுத்துதல், கோபத்தை பயன்படுத்துதல் மற்றும் அனைவருக்கும் உதவி செய்தல் போன்ற நற்பண்புகளை எளிதான உதாரணங்கள் மூலம் கற்றுக்கொடுக்கிறார்.
அதிருப்தி குறித்து அதிருப்தி அடையாமல் அந்த அதிருப்தியை திருப்திப் படுத்திய காரணத்தினாலே சித்தார்த்தன் கௌதமபுத்தராக ஆனதும், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மகாத்மா ஆனதுதையும் கூறி அதிருப்தியில் “அர்த்தமுள்ள அதிருப்தி” எது என்பதை தெளிவுபடுத்துகிறார். ஆதலால் நம்மிடமுள்ள அர்த்தமுள்ள அதிருப்தியை அறிந்து பூர்த்தி செய்ய முயற்சி எடுக்க தூண்டுகோலாக உள்ளது.
இந்த நூலில் உள்ள 32 பாடங்களில் ஒவ்வொன்றாக உணர்ந்து படிக்க படிக்க மனம் அமைதியும், தெளிவும் அடைவதையும், தன்னம்பிக்கை அதிகரிப்பதையும் உணர முடிகிறது. இறுதியாக வரும் “எல்லாம் ஒருநாள் முடியும்” என்ற தலைப்பில் உள்ள பாடத்தில் “புனித நூல்கள், புராணங்கள், வேதங்கள், ஞானிகளின் நூல்கள் ஆகியவற்றை படிப்பதன் மூலம் அறிந்துகொள்ளும் கருத்துக்களின் சாரத்தை” எளிதாக புரிந்துகொள்ளும் படியும், மனதின் ஆழத்திலும் பதியவைத்து விடுகிறார்.
நம் வாழ்க்கையில் மாற்ற முடிந்ததை மாற்றும் சக்தியையும், மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும், இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டையும் இந்நூல் உணரச் செய்கிறது.
நூலைப் படிக்கும் முன்னர்வரை
வாழ்வைப் பார்த்தோம் பயமுடனே
படித்தோம் இறையின் அருளுடனே
வாழக் கற்றோம் மனநிறைவுடனே
என்றும் தளரா மனமுடனே
நித்தமும் நன்றி உணர்வுடனே
வாழ்க்கையை வாழ்வோம் விழிப்புடனே.
வாழக் கிடைத்த வாய்ப்பினிலே
வாழ்ந்து படித்த பாடத்தினை
வாழப் படைத்த ஆசிரியர்க்கும்
தொடராய் வெளியிட்ட வல்லமைக்கும்
நூலாய்க் கொடுத்த பிளாக் ஹோல்க்கும்
வாழ்நாள் நன்றியை தெரிவிக்கிறோம்.
வாழ்ந்து படிக்கும் பாடங்களை
ஆழ்ந்து படித்து அறிந்திட்டு
வாழப்போகும் வாழ்க்கைதனை
மகிழ்ந்து வாழ வாழ்த்துகிறேன்.
இறையிடம் அதையே பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்,
பா.சரவணக்குமார்
ஒரு சந்தோஷமான வெற்றிகரமான வாழ்க்கைக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதம். தமிழில் வெற்றிக்கான புத்தகங்கள் நிறைய உணடு. தத்துவத்திற்கான புத்தகங்களும், வாழ்வியல் புத்தகங்களும் கூட உண்டும். அனைத்தையும் பெற்று ஒரு முழுமையான வாழ்க்கை வாழ இந்த புத்தகம் ‘வாழ்ந்து படிக்கும் பாடங்கள்’ நல்ல வழியைக் காட்டுகிறது. நல்ல புத்தகத்திற்கு நல்ல மதிப்புரை
நூல் மற்றும் மதிப்புரை பற்றிய உங்களது கருத்துக்கு மிகவும் நன்றி திரு.விஷ்ணு அவர்களே. இதுவே என் முதல் முயற்சி ஆகும். “பரமன் ரகசியம் ” நாவல் பற்றியும் மதிப்புரை எழுத விரும்பினேன். நூல் கிடைக்க தாமதம் ஆகியதால் எழுத முடியவில்லை.
வல்லமையில் வந்த இந்தக் கட்டுரைகள் நூல் வடிவில் வந்திருப்பது மகிழ்ச்சி. வாழ்க்கையை வாழத் தொடங்குபவர்களுக்கு இந்த நூல் ஒரு வழிகாட்டி என்று சொல்லி இருப்பது உண்மை.
தங்களின் கருத்துக்கு நன்றி திரு.கனகசபாபதி அவர்களே
mathipuraiyai paditha udane entha nullai padika vendam enra ennam thondrukirathu…
iraivan arulal padithu valgaiyul pinpara muyalkiren
மதிப்புரையை படித்த உடனே இந்த நூலை படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் நிச்சியம் நாம் அனைவரும் விரும்பி படிக்கவேண்டிய நூலாகும். நாம் நம் வாழ்கை முறையில் பின்பற்ற வேண்டிய அனைத்து விஷயங்களையும் இந் நூல் அழகாக எடுத்துரைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நம்மை முதலில் நமக்கு பிடித்தவர்களாக மாற்றிக்கொள்வோம். அதற்கு யாரையும் ஏளனம் செய்யாமல், அவர்கள் செய்த சிறு செயலையும் ஊக்கபடுத்தி, கருணையோடு பேசி இன்முகத்தோடு சிரித்து,விட்டுக் கொடுத்து பழகி, அகங்காரமின்றி அனைவரின் நல்ல கருத்துக்கும் மதிப்பளித்து ஏற்றுக் கொண்டு நேசமுடன் வாழ்வோம். இதை நாம் அனைவரும் பின்பற்றினால் நாமே இந்த உலகில் எல்லாருக்கும் பிடித்தமான நபர்.
அதிருப்தி குறித்து அதிருப்தி அடையாமல் அந்த அதிருப்தியை திருப்திப் படுத்திய காரணத்தினாலே சித்தார்த்தன் கௌதமபுத்தராக ஆனதும், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மகாத்மா ஆனதுதையும் கூறி அதிருப்தியில் “அர்த்தமுள்ள அதிருப்தி” எது என்பதை தெளிவுபடுத்துகிறார். ஆதலால் நம்மிடமுள்ள அர்த்தமுள்ள அதிருப்தியை அறிந்து பூர்த்தி செய்ய முயற்சி எடுக்க தூண்டுகோலாக உள்ளது என்று இந்நூலுக்கு திரு B.சரவண குமார் அவர்கள் வழங்கிய மதிப்புரை மிகவும் பொருத்தமாக நூலின் தன்மையையும் , வாங்குவோரும் நன்றாக புரிந்து கொள்ளும் வகையில் எழுத்தாளரின் சிறப்பையும் ,திறனையும் மிகவும் அழகாக எடுத்துரைத்துள்ளார்…
அமானுஷ்யன், பரம(ன்) ரகசியம் போன்ற அற்புதமான நாவல்களின் எழுத்தாளர் திரு.N.கணேசன் அவர்களின் எழுத்துக்கள் அனைத்து சமுதாய மக்களுக்கும் என்றும் நிலைத்து நின்று வழிகாட்ட கூடியவை… அவரின் சிறுகதைகள், தன்னம்பிக்கையூட்டும் கட்டுரைகள் மற்றும் ஆன்மீக விளக்கங்கள் அனைத்தும் அறிவியல் பூர்வமாகவும், யாவரும் புரிந்துக்கொள்ளும் வகையில் மிகவும் எளிய நடையில் எழுதுவதில் வல்லவர்… இந்நூல் வாழ்ந்து படிக்கும் பாடங்கள் அனைவரது வாழ்க்கையை மேம்பட்ட புரிதலுடன் நன்றாக வாழ வழி வகுக்கும் என்று நம்புகிறேன்.
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கலை
மிகவும் நன்றி செல்லப்பன். நீங்களும் சிறிய, சிறந்த மதிப்புரையே எழுதி விட்டீர்கள். நீங்கள் கூறியது போல் எழுத்தாளர் கணேசன் அவர்களுடைய நீ நான் தாமிரபரணி, மனிதரில் எத்தனை நிறங்கள், அமானுஷ்யன், பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள்,ஜாதகம் பயன்படுத்துவது எப்படி மற்றும் பரம(ன்) ரகசியம் போன்ற அனைத்துமே மிகவும் பயனுள்ளவை ஆகும்.
அன்புடன் ,
சரவணகுமார்.பா
https://www.facebook.com/groups/nganeshanfans/
Great comments dear friend Saravanan, I truly appreciate the work of Ganesan Sir and the kind of awareness he is creating to this community is exceptional. The words used in this book is very
simple even a layman could understand. I have started reading this book and touched my heart. I wish every reader of this book should start trying to implement the methodology and bring prosperous to his own life and others who are around him. I bet one could feel blessed by really doing this.
Saravanan, I know how much you are inspired by Ganesan Sir and how much difference you made to others life. Keep up the good work and God bless !!!!
Hi Gokul, thank you very much for your nice comment. Very happy to hear from you such a clear statement about Ganeshan ji writings. Thank you for your wishes and blessings.