பஜனாமிர்தம்

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை ஆறு மணிக்கு நேயர்களின் உள்ளங்களையும் இல்லங்களையும் பக்திவசப்படுத்த ஒளிபரப்பாகி வரும் புதிய நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி பஜனாமிர்தம்.

இறைவனை வழிபட எத்தனையோ வழிமுறைகளை நமது முன்னோர்கள் வகுத்துள்ளனர்.  அதில் இறைவனது புகழைப் பாடி வழிபடும் முறையே தலைசிறந்தது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.  அதன்படி இருபத்தி நான்கு மணி நேரமும் ஆன்மிக நிகழ்சிகளை மட்டுமே ஒளிபரப்பி வரும் ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியின் மற்றும் ஒரு புதிய நிகழ்ச்சியாக அரங்கேற உள்ள இந்த நிகழ்ச்சி முழு ஒரு மணி நேரமும் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.

இறைவனை வழிபட உகந்த நேரம் என கருதப்படும் மலை ஆறு முதல் ஏழு மணி வரை பரவசமூட்டும் பக்தி பஜனை இசைப் பாடல்களை மழலைச்செல்வங்கள் உறிய பக்கவாத்தியங்களுடன் வழங்கி உற்சாகமூட்டும் வகையில் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

 

About கேப்டன் கணேஷ்

எழுத்தாளர்

One comment

  1. பஜானமிர்தம் நல்வரவு தான். ஆனால், நீக்கமற நிறைந்தவனை வாழ்த்த, போற்ற 24 மணியும் தகும்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க