திருமால் திருப்புகழ் (26)
தசாவதாரத் திருப்புகழ்….
———————————————
ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று’’ மெட்டில்
ஏழு மலையேறி எமையாளும் முகமொன்று….
——————————————————————————————————————-
“மீனமென வந்துமறை மீட்டமுகம் ஒன்று
மேருமலை தாங்கவரும் ஆமைமுகம் ஒன்று
ஏனமென பூமிதனை ஏந்துமுகம் ஒன்று
தூணதிர சீயமென தோன்றுமுகம் ஒன்று
தானமுற மாபலிமுன் ஓங்குமுகம் ஒன்று
மூணுவித ராமனென மூண்டமுகம் ஒன்று
கானமுர ளீதரமு ராரிமுகம் ஒன்று
ஞாலபரி பாலதச மானபெரு மாளே”….
——————————————————————————————————–