திருமால் திருப்புகழ் (76)

கிரேசி மோகன்


ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————————
‘’கண்ணன் காப்பு’’
——————————

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

தீரன், யமுனா தரங்கக் கரையோரன்,
சேரும் இளமாதர் ஜீவான்ம -சோரன்,
அழகில் சுகுமாறன், அன்பில் உபகாரன்,
கழுகில் வரும்நேரம் காப்பு….

குவலயா பீடத்தின் கொம்பொசித்துக் கம்சன்,
கவலையால் பீடிக்கக் கொன்றோன் – ’அவலையா
தந்தாய் எடுத்துக்கொள் தோழாயென் செல்வமுன்
கந்தையைக் கட்டுமென்றோன்’ காப்பு….

கூவும் கஜேந்திரனை, காத்த புஜேந்திரா,
ஏவிய சக்கரத்தை ஏந்தியவா, -காவிய
பாகவதக் கண்ணா, பரந்தாமா நாரணா,
காகவத காகுத்தா காப்பு….

ஆலில் மிதந்தவா, ஆழ்வார்கள் பாசுர,
நூலில் நிறைந்தவா, நந்தலாலா, -தோளில்,
திருத்துழாய் பூண்ட, திருவோணத் தானே,
கருத்தில் கலந்துவளைக் காப்பு….

கால்கள் பலநூறு, கண்டேனென் வாசலில்,
வால்கள் புடைசூழ வந்தமுகுந்தன்,-நூல்போல்,
அணிவகுப்பாய் சென்று ,அடுக்களை உள்ளில்
விநியோகம் செய்தான் விருந்து!!

—————————————————————————————–

 

படங்களுக்கு நன்றி:

http://kamadenu.blogspot.in/2014_05_01_archive.html

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க