விவசாயி.. விவசாயி.. ..
–கவிஞர் காவிரிமைந்தன்.
விவசாயி.. விவசாயி.. ..
கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி.. விவசாயி.. விவசாயி.. என்னும் பல்லவியோடு மண்ணின் மனம் கமழும் பாடல்களைத் தருவதில் கவிஞர் மருதகாசி என்றைக்கும் முதன்மை வகிக்கிறார். சொல்லேருழவராக அவர் பவனி வந்தபோதும்.. ஏருழவனை எப்போதும் நினைவில் கொண்டவராக.. கிராமங்களும், வயல்களும், அவர் வாய்மொழியும்போதெல்லாம் மண்வாசனை மணக்க வைக்கிறார். விவசாயி என்கிற திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக திரையில் தோன்றும் முதல் காட்சியில் இடம்பெற்ற பாடல்!
கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி.. விவசாயி.. விவசாயி.. .
“சுழன்றும் ஏர் பின்னது உலகம்” என்பார் திருவள்ளுவர். இவ்வுலகில் உயிர்களுக்கு அடிப்படைத் தேவை உணவு. அந்த உணவு உற்பத்திக்கு தன்னைக் கொடுப்பவன் விவசாயி. நாட்டின் மன்னனாக இருப்பினும் விவசாயியின் உழைப்பிற்குத் தலை வணங்கியே ஆக வேண்டும். அவனது நெடிய உழைப்பிற்கு மண் மாதாவின் கொடை அமோக விளைச்சலாகும். பிறர்நலம் பேண தன்னை வருத்திப் பாடுபடுகின்றவன் பரிசுத்தமானவன். அவனது மேன்மைகளை உணருகின்ற இவ்வுலகம் அவர்தம் வறுமை அகல வழி வகுக்குமா?
கவிஞர் மருதகாசி – இப்பாடல் வரிகளில் உள்ள சரணங்களில் சமுதாய முழமைக்கான வினாக்கணைத் தொடுக்கிறார் பாருங்கள்!
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்!!
ஒழுங்காய் பாடுபடு வயல்காட்டில்!
உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்!
இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, நவீனத் தொழில்நுட்பங்களின்மூலம் உற்பத்தி பெருகச் செய்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் விவசாயத்தில் முழுமையான நிறைவு அடைந்துவருவதுடன்.. சுயதேவைகளை பூர்த்திசெய்தபின் அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிற அளவு முன்னேற்றம் கண்டுள்ளனர். இது சாத்தியம் என்பதற்கு சான்று பகர்கின்றார்.. அடுத்து வரும் வரிகளில்..
இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேணும் எங்கும் ஒரு சின்னக் கொடி – அது
பஞ்சம் இல்லை எனும் அன்னக்கொடி!!
விளக்கமேதும் தேவையில்லாத வாசகங்கள் வரிகளாய்.. எவரும் விளங்கிக்கொள்ளும் வண்ணம் கவிஞர் தரிசனம் தருகிறார்.
http://youtu.be/no4_v5xta9s
காணொளி: -http://youtu.be/no4_v5xta9s
படம்: விவசாயி
பாடல்: மருதகாசி
பாடியவர்: டி. எம். சவுந்தரராஜன்
இசை: கே.வி.மகாதேவன்கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி …. விவசாயி ….
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி …. விவசாயி ….முன்னேற்ற பாதையிலே மனதை வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
முன்னேற்ற பாதையிலே மனதை வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வழங்கும் குணம் உடையோன் விவசாயி
விவசாயி … விவசாயி ….என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில்
ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
விவசாயி …. விவசாயி ….கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
உழைத்தால் பெறுகாதோ சாகுபடி
விவசாயி …. விவசாயி ….இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி
அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
விவசாயி …. விவசாயி ….
/**என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்!!**/
பாடல் கிராமங்களிலும் பிரசிதம். உண்மையில்
தன்நலமில்லா தேசபக்தி எனும் வளமையில்லை
அதனால் வல்லவரெல்லாம் வெளிநாட்டில்
ஊழலில் இருக்கும் ஒற்றுமை உழைப்பில் இல்லை
அதனால் வறியவரெல்லாம் உள்நாட்டில்