-செண்பக ஜெகதீசன்
சீறிப் பாயும் கடலலைதான் – மிகச் 
சிறந்த மாலுமி உருவாக்கும்,
மாறிடும் வானிலை காட்டிடுமே – திறமை
மிகுந்ததோர் ஓட்டியை வானூர்தியில்,
கீறிடும் கல்நிறை சாலையேதான்- சுட்டிக்
காட்டிடும் சிறந்த ஓட்டுநரை,
ஏறிடும் இடர்களை எதிர்கொள்வோர் – வாழ்வில்
ஏற்றம் என்றும் பெறுவாரே…!

Leave a Reply