அழகெனும் ஓவியம் இங்கே…..
ஊருக்கு உழைப்பவன் என்னும் திரைப்படம் வீனஸ் பிக்சர்ஸ் தயாரிக்க எம்.ஜி.ஆர். வாணிஸ்ரீ நடித்த படம். மெல்லிசை மன்னரின் இன்னிசையில் எல்லா பாடல்களும் வெற்றி! இனிமையோடு இணைந்துவரும் இசையமைப்பில் கே. ஜே. ஏசுதாஸ், பி. சுசீலா குரல்கள் நம்மைக் கடத்திக் கொண்டு போக – வரிகளை வார்த்தெடுத்துத் தந்திருக்கிறார் கவிஞர் முத்துலிங்கம்!
இன்பத்தமிழ் ஊற்றெடுக்கும் இதயமல்லவா.. கவிஞர் எழுதியுள்ள வரிகளெல்லாம் முத்துக்கள் எனச் சொல்லவா?
இதம்பதமாய்.. சொல்வதிலும் முதன்மை வகிக்கும் கவிஞரின் சொல்லாட்சி இளமை நதி ஓடிவரும் காட்சிக்கு சாட்சி!
அழகிய மங்கையை அழகுதமிழ்ச் சொல்லாலேஅலங்காரம் செய்து பல்லவியைத் தந்துவிட்டு அடுத்துவரும் சரணங்களிலும் ஆராதிக்கும்போது – கவிஞர்தம் புலமையை, தனித்திறமையை வாழ்த்தாத இதயங்கள் ஏது?
ஒவ்வொரு பாடலும் உயிர்பெற்றெழ வைக்கிற இசை வழங்கும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. எம்.ஜி.ஆருக்காக ஆர்மோனியத்தில் கை வைத்தால் பொன்மனச்செம்மலின் புகழ்வளர்க்க சங்கீதம் சபைக்கு வரும்! நல்லதோர் திரைப்பாடல் தமிழுக்கு வரும் என்பது அன்றைய காலக் கட்டத்தில் எல்லோரும் அறிந்த ஒன்று!! அந்த வகையில் அழகெனும் ஓவியம் இங்கே!
காணொளி: http://youtu.be/o_wZJnBPzRc
கவிஞர்: முத்துலிங்கம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: கே. ஜே. ஏசுதாஸ், பி. சுசீலா
நடிப்பு: எம்.ஜி.ஆர், நிர்மலா
படம்: ஊருக்கு உழைப்பவன்அழகெனும் ஓவியம் இங்கே ..
உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே ..
இலக்கிய காவியம் இங்கே
உன்னை இயற்றிய பாவலன் எங்கே ..காமன் கலைக்கோர் கல்லூரி கண்டேன் இரு விழியில் –
கவி கம்பன் எழுதாத பாட்டெல்லாம் கேட்டேன் கிளி மொழியில்
முத்து சரங்கள் சிந்தாமல் சிந்தும் சிறு நகையில் –
நான் மூன்றாம் தமிழை பார்கிறேன் கண்ணே உந்தன் இடையசைவில்
(அழகெனும் ஓவியம் )என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே –
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே
ஒன்றா இரண்டா என்னாசை சொல்லில் வருவதில்லை –
நான் உன்னால் அடையும் பேரின்பம் அந்த சொர்க்கம் தருவதில்லை
(இலக்கிய காவியம் )ஆடை விலக்கும் பூங்காற்றை நீ ஏன் அழைத்து வந்தாய்
நான் ஆட துடிக்கும் தேனாற்றை நீ ஏன் மறைத்து வந்தாய்
நீரில் குளிக்கும் நேரத்தில் நீ ஏன் கொதித்திருந்தாய்
நான் நீந்தும் சுகத்தை தாளாமல் இங்கு நீ ஏன் துடித்திருந்தாய்
(அழகெனும் ஓவியம் )
அவர் விஸ்வநாதன் இல்லை . விஸ்வநாதம் .தமிழ்நாட்டின் பொக்கிஷம் .
அன்பு காவேரி மைந்தன் சார்
உங்கள் எழுத்து நடைக்கு நல்லதொரு ரசிகன் நான்
இந்த பாடல் புலமை பித்தன் எழுதியது என்று கவிஞர் முத்துலிங்கம் சொன்னதாக ஒரு பேட்டியில் படித்தேன் .சற்று உறுதி படுத்தவும்
அன்பரே…
அழகெனும் ஓவியம் இங்கே
பாடல் தலைப்பு
அழகெனும் ஓவியம் இங்கே
திரைப்படம்
ஊருக்கு உழைப்பவன்
கதாநாயகன்
எம்.ஜி.ஆர்
கதாநாயகி
வாணிஸ்ரீ
பாடகர்
கே.ஜே.யேசுதாஸ்
பாடகி
பி.சுசீலா
இசையமைப்பாளர்
எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடலாசிரியர்
முத்துலிங்கம்
ராகம்
வெளியானஆண்டு
1976
அழகெனும் ஓவியம் இங்கே
காவேரி மைந்தன் அல்ல.. காவிரிமைந்தன்…
உங்கள் அன்பிற்கு நன்றி..
காவிரிமைந்தன்