அசத்தும் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் – மக்கள் தொலைக்காட்சி
வரும் ஞாயிறு (03ஜூலை, 2001) அன்று மதியம் 3 மணிக்கு ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் தயாரித்து இயக்கிய ‘ரியர் விண்டோ’(Rear Window) என்னும் திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. 1942ம் ஆண்டு கார்னெல் வுல்ரிச் (Cornell Woolrich) எழுதிய ’அது ஒரு கொலை தான்’ (It had to be Murder) என்னும் சிறுகதையை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கால் உடைந்து, சக்கர நாற்காலியுடன் வீட்டின் உள்ளேயே வளைய வரும் ஒரு புகைப்பட நிபுணர். அவரது வீட்டின் பின் சாளரத்தின் வழியாக கண்ட சில காட்சிகளினால், ஒரு கொலை நடந்திருக்கலாம் என சந்தேகம் கொள்கிறார். அதன் பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை. பரபரப்பான இந்த மர்மத் திரைப்படத்தை, மக்கள் தொலைக்காட்சியில் கண்டு மகிழலாம்.