சின்ன சின்ன ஆசை – தொலைக்காட்சி நிகழ்ச்சி
சாலையோரம் வாழும் சிறுவர் சிறுமியர், இவர்களை யாரும் கண்டு கொள்வது இல்லை. இவர்களை தேசிய மற்றும் உலகளாவிய அறிக்கைகளில் புள்ளி விவரங்களாக மட்டுமே காண முடியும்.
ஒரு மாறுதலுக்காக, தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை நெறிப்படுத்தி நடத்துபவர் இத்தகைய சிறுவர் சிறுமியரை அவர்களின் வாழிடங்களுக்கேச் சென்று சந்தித்து, அவர்களின் எண்ணங்களையும், ஆசைகளையும் கேட்டு அறிகிறார். அவர்களின் சின்ன சின்ன ஆசைகள், நமக்கு மிகவும் சாதாரணமாகத் தெரிந்தாலும், அவர்களுக்கு என்னவோ அது மிகப் பெரிய, கைக்கு எட்டாத ஆசைகள்.
ஆசைகளைக் கேட்டு அறிவது மட்டும் அல்லாமல், அவற்றை நிறைவேற்றுவதும் தான் இந்நிகழ்சியின் முக்கிய அம்சமாகும். புதுக் காலணிகள் வாங்குவது, சைக்கிள் ஓட்டுவது, புத்தாடை வாங்குவது, ஐஸ் க்ரீம் சாப்பிடுவது என இவர்களின் எளிய ஆசைகள் நிறைவேற்றி வைக்கப் படுகின்றன. ஒவ்வொரு ஞாயிறும் மாலை 6:30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.