செல்லக்கிளியே மெல்லப் பேசு…
– கவிஞர் காவிரிமைந்தன்.
வாலி வழங்கிய, கொடை வள்ளல் எம்.ஜி.ஆருக்கே சமர்ப்பணம் என்ற வரி வரையப்பட்டால் அது சத்திய வாசகமே! கொட்டிக்கவிழ்த்திருக்கிறார் தனது தமிழறிவை! அதுவும் வெற்றி பெற்றுள்ள அனைத்து மெட்டுக்களிலும் தன் தமிழைக் கொடிகட்டிப் பறக்கவிட்டிருக்கிறார் என்பதும் மிகையில்லை! எத்தகையப் பாடலென்றாலும் எழுதிவிடும் ஆற்றல் இறைவன் இவருக்குத் தந்தது! தத்தகாரம் போன்ற விவகாரங்களில் இவரது நாடகத்துறை அனுபவம் கைகொடுத்து வந்தது! தாலாட்டு, காதல், வீரம், சோகம், தத்துவம், கொள்கைப் பாடல்கள் என்று எந்த விதத்திலும் தனது பாடல் வரிகளில் பல்லவி முதலாக தீட்டித்தந்திட இவரென்றும் சளைத்ததில்லை!
கூர்ந்த மதிநுட்பம், கற்பக விருட்சம் போல் கற்பனா சக்தி, அற்புதமாய் பூத்துவரும் சிந்தனைகள், மக்கள் உள்ளப்பாங்கறிந்த பயிற்சி, தன்னிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதை நுண்ணியமாய் கண்டறியும் திறன், அதற்கேற்ப வரிகளை வரைந்து மனக்கண் முன்னே இருந்த ஓவியத்தை நிஜத்தினில் வரவைத்துவிடுகிற தனித்திறம் – இதுதான் வாலி என்று ஒரு விளக்கம் தரலாம்!
பெற்றால்தான் பிள்ளையா என்கிற திரைப்படத்தில் இடம்பெற்று காற்றில் மிதந்துவரும் தாலாட்டுப் பாடலிது! மக்கள் திலகத்தின் பண்பட்ட நடிப்பை இப்படத்தில் காணலாம் என்பது பத்திரிக்கைகளின் பதிவாகும்! டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் குரலில் வரும் தென்பொதிகைக் காற்று! கவிஞர் வாலி வரைந்தளித்த மென்மையான பாடலிது! மெல்லிசை மன்னரின் கரங்களில் தவழ்ந்து இன்னும் மெருகேறி நம்மையும் தூங்க வைக்கக் கேட்கலாமே!
செல்லக்கிளியே மெல்லப் பேசு!
தென்றல் காற்றே மெல்ல வீசு!
பிள்ளை உறங்க பாடிடும் பாடல்! பெற்றவர்கூட உறங்கிட ஒலிக்கட்டும் நமக்காக!
http://www.youtube.com/watch?v=fH1ToWpJ6lw
காணொளி: http://www.youtube.com/watch?v=fH1ToWpJ6lw
படம்: பெற்றால்தான் பிள்ளையா (1966)
கவிஞர்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
குரல்: டி. எம். எஸ்.லுலொல்லொலாயீ…….
செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசுதூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமேசெல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
லுலொல்லொலாயீ…….திங்கள் முகம் எடுத்து
செவ்வாய் இதழ் எடுத்து
வெள்ளை மலர் சிரிப்பில்
பிள்ளை வருவான்
திங்கள் முகம் எடுத்து
செவ்வாய் இதழ் எடுத்து
வெள்ளை மலர் சிரிப்பில்
பிள்ளை வருவான்
தத்தும் நடை நடக்க
தண்டை குரல் கொடுக்க
சித்தம் குளிர வைக்க
முத்தம் தருவான்செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசுஆரிரரோ….ஆரிராரோ……ஆரிராரோ….
ஆரிராரோ……ஆரிரரோ….ஆரிராரோ…..