செல்லம்
“செல்லம்” சின்னராஜ்.
அன்புச் செல்லங்களே, வணக்கம். வாழ்த்துகள்.
உங்கள் உலகம் உன்னதமானவை. கனவும் கற்பனையும் நிறைந்த உங்கள் படைப்பாற்றலுக்காகவே உருவாக்கப்பட்டதுதான் செல்லம். பாடப் புத்தகம் பயிற்றுவிக்காத பலவற்றையும் பயில்வதற்கான களம். பிறருடன் உங்கள் படைப்பை பகிர்வதற்கான தளம். எல்லாவற்றிற்கும் மேலாக வகுப்பறை தாண்டியும் வாழ்கையை போதிக்க விரும்பும் விளை நிலம். படிப்பில் தடுமாறும் எங்கள் பாசமிகு குழந்தைகளுக்கோ குதூகலம். வசிப்பதில் தொடங்கி, வாசிப்பது முதல் யோசிப்பது வரை கற்றுத் தரப்போகிற செல்லம் நம் விடுதலைத் திருநாளில் பிறந்திருக்கிறான். அன்றாட வாழ்வில் அறிய வேண்டிய செய்திகள், மாற்றுச் சிந்தனை, படைப்பாற்றல், வாசிப்பு அனுபவம், சுழல் அறிதல், சுகாதாரம் பேணுதல் , சுதந்திரம், நாடகம் முதல் ஊடகம் வரை அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நீங்களும் புதிய உலகம் படைக்க எங்களோடு எழுதுங்கள். ஓடி விளையாடும் பாப்பாக்களையும், ஒளி படைத்த கண்களையும், உறுதி கொண்ட நெஞ்சினையும், களிபடைத்த மொழியினையும், கனிவு மிக்க இதயங்களையும், தெளிவு பெற்ற மதிகளையும் பாரதியின் வரிகளால் வரவேற்கிறோம். நல்ல எழுத்து விதைகளை இந்த நாட்டுக்காகத் தூவுங்கள். அதற்கு உற்சாக உரமிட்டு, நம்பிக்கை நீர் பாய்ச்ச நம் ஆசிரியர் குழு நேசக்கரம் நீட்டிக் கொண்டே இருக்கும்.
சிகரங்களை நோக்கிச் சிந்திப்போம்,
சிந்தனை ஒன்றிடச் சந்திப்போம்.
“செல்லம்” சின்னராஜ்.

நல்வரவு. ஒரு ஐடியா. சில மடல்களில் பேசும் தமிழ் உபயோகித்தால், வாசகர்கள் கூடலாம்.
நல்வரவு. ஒரு ஐடியா. சில மடல்களில் பேசும் தமிழ் உபயோகித்தால், வாசகர்கள் கூடலாம்.