ஓடையின்னா நல்லோடை …
— கவிஞர் காவிரிமைந்தன்.
ஓடையின்னா நல்லோடை……
கொஞ்சும் தமிழ் கொலுவிருக்க…
ஓடை நீரினில் அலைகள் தாளமிட…
சொந்தம் இரண்டு நெருங்கியிங்கே..
உறவுத் தேரினில் ஏறிவருவதுபோல்..
ஓடையின்னா நல்லோடை
ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்கக் கொழுந்தனுக்கு
சாந்துப்பொட்டு வைக்க வேணும்
தந்தன்னா.. தானே தந்தன்னா..
கிராமத்துக் காதலை அழகாக ஒரு கவிதையாய் சொல்லியிருக்கும் கவிஞர் முத்துலிங்கம்! மனதை ஈர்க்கும் இசை அமைத்திருக்கிறார் சந்திரபோஸ்! மகரந்தப் பந்தலிட்டு பாடியிருக்கிறார்கள்.. ஜெயச்சந்திரன் மற்றும் ஜானகி
கன்னி மனசையும் காதல் வயசையும்
சேத்து வச்சு யாரு தச்சது
சின்னக் கழுத்தையும் முத்துச் சரத்தையும்
நீதானே சேத்து வச்சது
வழக்குச் சொற்கள் வாய்மலர.. அவையே சிறப்புச் சொற்களாய் அணிவகுக்க..வசந்தகீதம் இதுவென்று வருகின்ற தலைமுறைக்கும் சொல்லலாமே!
ஏலம் மணக்குற கூந்தல்வனத்திலே
வாசமல்லி வச்சுவிடவா..
பஞ்சும்வலிக்கிற பாதம் நடக்கவே
பூவாலே பாலம் கட்டவா..
ஆண்மையின் ஆலிங்கனத்தில்
பெண்மை பேசத் தயங்கும்!
உண்மையைச் சொல்வதென்றால்
கண்களங்கே மயங்கும்!
இதமான இசையிலே இன்பத்தமிழ் பவனி
இதயத்திற்கு நெருக்கமான இரு குரல்களில்!!
http://youtu.be/ta7U9vgPAr8
காணொளி: http://youtu.be/ta7U9vgPAr8
திரைப் படம்: ராஜாத்தி ரோஜாக்கிளி (1985)
இசை: சந்தரபோஸ்
குரல்கள்: ஜானகி, ஜெயச்சந்திரன்
ஓடையினா நல்லோட
ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்க கொழுந்தனுக்கு
சாந்து பொட்டு வைக்க வேணும்
தன ந தானே தன நஓடையினா நல்லோட
ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்கப் பசுங்கிளிக்கு
சாந்து பொட்டு வைக்க வேணும்
தன ந தானே தன ந
தன ந தானே தன நஏலம் மணக்குற கூந்தல் வனத்திலே
வாச மல்லி வச்சி விடவா…
ஏலம் மணக்குற கூந்தல் வனத்திலே
வாச மல்லி வச்சி விடவா…
பஞ்சும் வலிக்கிற பாதம் நடக்கவே
பூவாலே பாலம் கட்டவா…
பஞ்சும் வலிக்கிற பாதம் நடக்கவே
பூவாலே பாலம் கட்டவா…தன ந தானே தன ந
தன ந தானே தன நகன்னி மனசையும் காதல் வயசையும்
சேத்து வச்சி யாரு தைச்சது…
கன்னி மனசையும் காதல் வயசையும்
சேத்து வச்சி யாரு தைச்சது…
சின்ன கழுத்தையும் முத்து சரத்தையும்
நீதானே சேத்து வச்சது..
சின்ன கழுத்தையும் முத்து சரத்தையும்
நீதானே சேத்து வச்சது..தன ந தானே தன ந
தன ந தானே தன நஓடையினா நல்லோட
ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை
தங்க கொழுந்தனுக்கு
சாந்து பொட்டு வைக்க வேணும்
தன ந தானே தன ந
தன ந தானே தன ந