பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே …
— கவிஞர் காவிரிமைந்தன்.
தர்மம் எங்கே? திரைப்படத்திற்காக டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா பாடிய பாடல்! மெல்லிசை மன்னரின் இன்னிசையில் களவியல் கவிதையிது! இலக்கியம் காதல் கவிதை என்கிற வகையில் பொருத்தமாய் வந்துவிழும் வார்த்தைமலர்களைக் கொய்து இளமனங்களின் ஈடிலா சந்தோஷத்தை எழுத்தில்வடித்த பாடலிது!
இலைமறைகாயாய் இருக்கிற வரையில் இன்பத்தின் எல்லைகள் விரியும்! சொல்லில் அதை சொல்ல வருகின்ற வேளை கவிஞரின் கற்பனைத்திறன் இசைக்கு வழங்கிய சொற்சித்திரமிது! பட்டுமெத்தையில் பஞ்சணையும் பாவையிடம் தன் தேவைகளைக் கொட்டி அளக்கும் கோலமும் அங்கே பெண்மை எல்லை தாண்டாமல் இன்பத்துப்பாலை அருந்தச் சொல்கிற அழகும் கண்ணதாசன் கவிதைக்கே வரும்!!
சிவாஜிகணேசன் ஜெ.ஜெயலலிதா இணைந்து நடித்திருக்கும் இந்தக் காட்சியில் இயக்குனரின் கற்பனையும் ஒருசேர காட்சியமைப்பு கவர்ந்திழுக்கும்! பாவங்கள் காட்டும் குரல் டி.எம்.செளந்திரராஜனுக்கு கைவந்த கலையாகிடும்போது.. உடன் இணைந்து பாடுகிற பி.சுசீலா .. பல்லவியைத் தழுவிநிற்கும் சரணம்போல் தன் குரலால் ஈர்க்கிறார்!
ஆயிரமாயிரம் பாடல்கள் இந்த வகையில் திரையிசையில் மிதந்துகிடந்தாலும் நம் உள்ளம் தொடும் பாடல்களில் ஒன்றாய் இதோ.. ஆசையின் அலைகள் ஓடிவரும் அழகில் நாம் கொள்ளைபோவது நிச்சயம்!!
பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே..
http://youtu.be/ki0S3FbeKcQ
காணொளி: http://youtu.be/ki0S3FbeKcQ
படம்: தர்மம் எங்கே?
பாடல்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
குரல்: டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலாபள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே.. உன்
பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே!
அள்ளியிறைக்க வந்த கள்ள நகையே.. உன்
அணைப்பினில் சாய்ந்ததய்யா இந்த மலரே!முத்துக்களை சிந்திச் சிந்தி புன்னகை என்றாய்!
மூடிவைத்த தேன்குடத்தை அங்கங்கள் என்றாய்!
பத்துத்தரம் தொட்டுத் தொட்டு பாவணை செய்தாய்!
பங்குகொள்ளுமுன் என்னை சோதனை செய்தாய்!தென்றல் வந்து மெல்ல மெல்ல உன்னைத் தழுவும்
தென்றலுக்குப் பாதையின்றி என்னைத் தழுவு!
உள்ளமட்டும் இன்பமெல்லாம் அள்ளிவழங்கு!
உச்சிமுதல் பாதம்வரை உந்தன் விருந்து!!