“இடி இறங்கியது”
— தேமொழி.
(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)
கொட்டும் மழையில் கட்டிடத்தை விட்டு வெளியேறியவன் மனம் வெறுத்திருந்தான். இப்போழுதே உயிர் போனால் எவ்வளவு பிரச்சனை தீரும் என மனம் ஏங்கினான்.
“காத்திரு, உடனே அங்கு வந்துவிடுகிறோம்” என்று தொலைபேசிய நண்பர்கள்…. இல்லை…. அவனறியாமல் கஞ்சாக் கடத்தலில் அவனை மாட்டிவிட்டிருக்கும் துரோகிகள் சொன்னதைப் பொருட்படுத்தாமல் நடந்தான். கைப்பையிலோ கோடிக்கணக்கான குற்றப்பணம் கனத்தது. தப்பிக்க என்ன வழி?
பெரும் சப்தம் கேட்டுத் திரும்பியபொழுது இடியிறங்கி அவன் வெளியேறிய கட்டிடம் தரை மட்டமாகியிருந்தது.
படம் உதவி: http://www.stuff.co.nz/the-press/news/christchurch-earthquake-2011/4867859/Death-Zone
ஒரு திரில்லர் கிளைமாக்ஸ்.
இதுதான் விதியின் விளையாட்டு தேமொழி.
Miracles & Anti-miracles do happen, indeed.
சி. ஜெயபாரதன்
கருத்துரைகளைப் பகிர்ந்து கொண்ட நண்பர் தனுசுக்கும், ஜெயபாரதன் ஐயாவிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.