அந்தரங்கம்
— ரா. பார்த்தசாரதி.
(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)
திருமணம் முடிந்து ஒரு வருடம் நெருங்கிற்று. சுரேஷுக்கு அவசரம்.
அன்று இரவு சுமதியிடம், “இன்னிக்காவது காட்டுவாயா, இல்லையா?”
“என்னஅவசரம்? பொறு சுரேஷ் ”
“ஏமாற்றாதே சுமதி என்றான்” அருகில் சென்று ஒரு முத்தம்.
“இன்னிக்கு இது போதும், நாளை காட்றேன்”
மறுநாள் …..
இரவு சுமதி கதவை மூடினாள். மிக நெருக்கமாக அமர்ந்தாள், திறந்து காட்டினாள் அவர்களின் திருமண புகைப்படங்களை.
அன்று அவர்களின் திருமணநாள்..
படம் உதவி: http://imgarcade.com/1/south-indian-wedding-photo-album-design/