திருக்குறள் வெப்பவளிக்கூடு – ஓர் உலக சாதனை முயற்சி
மகேந்திரன் அர்சுனராஜா
நண்பர்கள் சிலர் கூடி ஒரு உலகசாதனை முயற்சியில் இறங்கியுள்ளோம். அதாவது உலகப்பொதுமறையான திருக்குறளை வெப்பவளிக்கூடில் ( Hot Air Balloon) தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சேற்றி உலகம் முழுவதும் பறக்கச்செய்ய உள்ளோம். வெப்பவளிக்கூடில் அச்சேறிய முதல் நூல் ஒரு தமிழ் நூல் என்ற பெருமை நமக்கு கிட்டும். அந்த பெருமைக்கு உகந்த நூல் திருக்குறளை தவிர வேறு இருக்க முடியாது என்பது எங்கள் கருத்து.
இந்த முயற்சியின் முக்கிய நோக்கங்கள் இதோ
1. தமிழர்கள் அல்லாதவர்களிடம் திருக்குறள் ஆர்வம் உண்டாக்குவது.
2. எக்காலத்திற்கும் ஏற்புடையது குறள் என்று மீண்டும் ஒருமுறை பிரமாண்டமாக பறைசாற்றுவது.
3. புதுமையான ஒரு வழியில் திருக்குறளை நமது இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது.
இந்த முயற்சிக்கான திட்டமிடல் பல வருடங்களாக நடந்துகொண்டிருகிறது. தற்பொழுது தான் இதை அதிகாரபூர்வமாக சித்திரை முதல் நாளில் அறிவித்துள்ளோம். வெப்பவளிக்கூடில் மிகவும் அனுபவம் வாய்ந்த Global Media Box என்னும் நிறுவனம் மூலம் இந்தக்கனவுத் திட்டம் நனவாக உள்ளது. அமெரிக்காவில் அச்சேறி , வரும் ஆண்டின் திருவள்ளுவர் நாளில் , பொள்ளாச்சியில் இந்த வெப்பவளிக்கூட்டை பறக்கவிட உள்ளோம். பின்னர் இதனை உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு கொண்டு செல்ல உள்ளோம். இதன் மூலம் திருக்குறளைப் பற்றியும் தமிழ் பற்றியும் ஒரு உலகளாவிய விழிப்புணர்வு உண்டாகும் என்பது எங்கள் நம்பிக்கை .
தற்பொழுது இந்த முயற்சிக்கு ஆதரவு திரட்டுகிறோம் . ஒத்த சிந்தனை உள்ள அனைவரையும் இந்த முயற்சியில் பங்கேற்க அழைக்கிறோம்.
1. முதலில் திருக்குறளை உயிர்மூச்சாக எண்ணி ஆய்வு செய்யும் அறிஞர்களுக்கு இந்த செய்தியை ஒருவரையும் விட்டுவிடாமல் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு உங்கள் உதவி வேண்டும். அறிஞர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் வேண்டும்.
2. உலகெங்கிலும் பரவியுள்ள தமிழ் சங்கங்களுக்கு இந்த செய்தி சென்றடைய வேண்டும். அங்கு யாரை தொடர்பு கொள்வது என்ற விபரம் வேண்டும்.
3. இந்த முயற்சியை மேலும் சிறப்படையச் செய்ய தங்களின் அறிவுரைகள் வேண்டும்.
4. இது ஊர் கூடி தேர் இழுக்கும் முயற்சி , இதற்கு தங்களால் இயன்ற பொருளாதார உதவியும் வேண்டும்.
இந்த முயற்சியை பற்றி மேலும் அறிய கீழ்க்கண்ட முகவரிகளில் காண்க.
அய்யா சாலமன் பாப்பையா அவர்களின் வாழ்த்து
https://www.youtube.com/watch?v=zK9XydZUhY4&feature=youtu.be
மே 1 முதல் பொருளாதார உதவி இணையம் மூலமாக செய்ய இயலும்.
உங்களால் இரண்டு வழிகளில் பொருளாதார உதவி செய்ய முடியும்:
1. இந்த நிகழ்வுக்கு உங்களின் பங்களிப்பு : ரூபாய் 3,000/- அளிப்பவர்களின் பெயர்கள், திருக்குறள் வெப்பவளிக்கூடு வெப்சைட் இல் இடம்பெறும் .மேலும் அவர்களுக்கு திருக்குறள் வெப்பவளிக்கூடு பிரத்யோக பேனா ,கீ செயின்,டிஜிட்டல் சான்றிதல் மற்றும் திருக்குறளை உள்ளடக்கிய ஒரு பென் டிரைவ் வழங்கப்படும் .
2. வெப்பவளிக்கூடு உங்கள் புகைப்படம் : ரூபாய் 10,000/- அளிப்பவர்களின் புகைப்படம் அவர்களின் பெயருடன் திருக்குறள் வெப்பவளிக்கூடில் அச்சிடப்படும் .மேலும் அவர்களுக்கு, திருக்குறள் வெப்பவளிக்கூடு பிரத்யோக ஆடை , பேனா ,கீ செயின்,டிஜிட்டல் சான்றிதல் மற்றும் திருக்குறளை உள்ளடக்கிய ஒரு பென் டிரைவ் வழங்கப்படும் . ( இந்த முறையில் 1330 நபர்கள் மட்டுமே பங்கு பெற முடியும் ).
இவ்வாறு பெரும் தொகை மற்றும் செலவு கணங்குகள் வெளிப்படையாக பராமரிக்கப்படும்.
வெப்பவளிக்கூடின் கட்டமைப்பு கீழ்க்கண்ட படத்தில் காண்க.
பொருளாதார உதவி எல்லோராலும் இயலாத ஒன்று. அதனால் வேறு சில பங்களிப்பு முறைகளுக்கும் வழி செய்து கொண்டிருக்கிறோம் ( நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு , மாணவர்களுக்கான போட்டிகள் , புகைப்பட கண்காட்சி ) ஆக இப்போதைக்கு இந்த செய்தியினை எல்லோர்க்கும் கொண்டு செல்வதே பெரிய உதவியாக இருக்கும்.
விபரங்கள் – www.kuralballoon.com
– மகேந்திரன் அர்சுனராஜா
” தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா ” இதற்கு அடிப்படை ” திருக்குறள் ”
என்றுதான் எண்ணுகின்றேன். உலகின் எந்தமொழியும் இப்படியான ஒரு பொக்கிஷத்தைக்
கொண்டிருக்கவில்லை எனக் கருதுகின்றேன். எனவே ” திருக்குறள் ” உலகமக்கள் அனைவரிடமும்
சென்றடைவது மிகவும் இன்றியமையாதது. ” திருக்குறள் ” புதிய உத்தியினூடாக உலகை வலம்வரப்
போகிறது என்னும் செய்தியை .. வல்லமை .. வாயிலாக அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சியும் பெருமிதமும்
பெற்றேன். இந்த அரிய முயற்சியினை மேற்கொள்ளும் அனைவருக்கும் ஆண்டவனின் அருளையும்
ஆசியையும் வேண்டி எனது மனமுவந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் வழங்கிமகிழ்கின்றேன்.
வாழ்கவளமுடன்
எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் … அவுஸ்த்திரேலியா.