தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக …
— கவிஞர் காவிரிமைந்தன்.
தமிழ்மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற அரசியல் தலைவியாய் …
எதிர்பட்ட இன்னல்களை எல்லாம் துணிவுடன் எதிர்கொண்ட பெண்ணாய் …
உலக அளவில் புகழ் பெற்ற புரட்சித் தலைவியாய் …
ஐந்தாம் முறை அரியணை காணும் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்துகள்!!
தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக …
காவியக் கவிஞர் வாலி அவர்களுடன் ஒரு நாள் உரையாடிக் கொண்டிருந்தபோது … அவர் எழுதிய மன்னன் திரைப்பாடலில் அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற பாடலில் தாயின் பெருமைகள் பற்றி மிக அழகாக எடுத்துக்கூறியிருந்தது குறித்து என் மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தேன்.
அப்போது … இதைவிட ஒருமுறை குமுதம் வார இதழில் தாய் பற்றி 72 முறை தாய் என்னும் சொல்லைப் பயன்படுத்தி எழுதினேன். அப்போது கிடைத்த பாராட்டுக்கள் மிகக் குறைவு! ஆனால் திரைப் பாடலில் பிரபல நடிகர் நடித்து வெளியாகும்போது அதன் வீச்சு அதிகம் என்று குறிப்பிட்டார்.
இதோ … இந்தப் பாடலின் தொகையறா கவிஞர் வாலி அவர்களின் ‘தாய்’ கவிதையை நினைவூட்டுகிறது.
அரியதாய் … பெரியதாய் … வணக்கத்திற்குரியதாய் …
எளியதாய் வலியதாய் என்றுமே இனியதாய் …
மலர்ந்ததாய் கனிந்ததாய் மனதிலே நிறைந்ததாய் …
வளர்ந்ததாய் வாழ்ந்ததாய் வந்த தாய் எங்கள் தாய் …
முத்துச் சிப்பி திரைப்படத்திற்காக கவிஞர் வாலி வரைந்தளித்த பாடலிது! தமிழக அரசியல் வரலாற்றில் இரு பெரும் தலைவர்களாக உருவாகி … சாதனை சரித்திரம் எழுதிய வகையில் புரட்சித் தலைவருக்காக கவிஞர் வாலி எழுதிய இதுபோன்ற பாடல் உண்டு …
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
பெருமையுடன் வருக
உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில்
தேசம் நன்மை பெருக !
நான் ஆணையிட்டால் திரைப்படத்திற்காக கவிஞர் வாலி எழுதிய இப்பாடலும் … புரட்சித்தலைவிக்காக முத்துச்சிப்பி திரைப்படத்திற்காக எழுதிய தொட்ட இடம் துலங்க வரும் என்கிற பாடலும் இன்று நினைத்துப் பார்த்தால் … கவிஞர்கள் தீர்க்கதரிசனம் கொண்டவர்கள் என்பதற்கு தக்க சான்றாகத் தோன்றுகிறது!
அரியதாய் … பெரியதாய் … வணக்கத்திற்குரியதாய்
எளியதாய் வலியதாய் என்றுமே இனியதாய்
மலர்ந்ததாய் கனிந்ததாய் மனதிலே நிறைந்ததாய் …
வளர்ந்ததாய் வாழ்ந்ததாய் வந்த தாய் எங்கள் தாய் … எங்கள் தாய் …
தொட்ட இடம் துலங்க வரும் … தாய்க்குலமே வருக …
கண் பட்ட இடம் பூ மலரும் … பொன் மகளே வருக …
பொன் மகளே வருக … நீ வருக!
கருணை என்ற தீபம்
இரு கண்களில் ஏந்திய தாயே
காலங்கள்தோறும் நெஞ்சில் வந்து கோவில் கொண்டவள் நீயே
பூமுகத்தாமரை மேலே அருள் பொழிகின்ற தெய்வத்தாயே
வானம் பார்த்த பூமிக்கெல்லாம் மாரியென்பது நீயே …
முத்து மாரியென்பது நீயே … முத்து மாரியென்பது நீயே …
இதயம் உன்னைப்பாடும் …
நல்ல எண்ணங்கள் மாலைகள்போடும்
இன்னல் வந்த நேரம் உந்தன் புன்னகை ஆறுதல் கூறும்
வாவென வேண்டிடும்போது எதிர் வருகின்ற செல்வம் நீயே
நாலும் கொண்ட பெண்கள் தலைவியாகிய தாயே …
ஒரு தலைவியாகிய தாயே!!
காணொளி: https://www.youtube.com/watch?v=pd9v_zyBLUo
https://www.youtube.com/watch?v=pd9v_zyBLUo