பொன் அந்தி மாலைப் பொழுது …
— கவிஞர் காவிரிமைந்தன்.
பொன் அந்தி மாலைப் பொழுது …
புலவர் புலமைப்பித்தனின் தமிழுக்கென்று தனியோர் சிறப்பு உண்டு. இளமை துள்ளி விளையாடும். இன்பம் வந்து அலை மோதும். கவிதை சொல்லும் அழகில் நாம் காணாமல் போவதுண்டு …
காதல் சொல்ல வந்தால் கன்னித்தமிழும் அங்கே மணக்கும்!!
இதய வீணை திரைப்படத்திற்காக சங்கர் கணேஷ் இசையமைப்பில், டி. எம். சௌந்தரராஜன் பி. சுசீலா குரல்களில் வரும் குற்றால அருவி இதோ …
காஷ்மீரின் எழில் கொஞ்சும் பகுதிகளில் இடம்பெறும் பாடல் என்பதால் அழகைப் பருகி அள்ளி மகிழ நம்மையும் அழைக்கிறார் புலவர் …
இதமான இசையால் இளங்காற்று வீசுவதுபோல் வரும் இசையும் நம்மை மயக்க, இன்பத் தேரில் உலா வரும் இருவர் எம்.ஜி.ஆர். மஞ்சுளா … திரையில் …
பாடல் கேட்கும்போது … அந்த நந்தவனத்திற்கு நாமும் கடத்தப்படுகிறோம். பொன் அந்தி மாலைப் பொழுது ….
பொன் அந்தி மாலைப்பொழுது
பொங்கட்டும் இன்ப நினவு
அன்னத்தின் தோகை என்ற மேனியோ
அள்ளிக்கொள் என்று சொல்லும் பார்வையோ
கொஞ்சிச் சிரித்தாய் என் நெஞ்சைப் பறித்தாய்
(பொன்)
மலைமகள் மலருடை அணிந்தாள்
வெள்ளிப்பனி விழ முழுவதும் நனைந்தாள்
வருகென அவள் நம்மை அழைத்தாள்
தன்மடிதனில் துயிலிடம் கொடுத்தாள்
இதயத்து வீணையில் எழுகின்ற பாடலில்
இசை நம்மை மயக்கட்டுமே
உதயத்துக் காலையில் விழித்திடும் வேளையில்
மலர்களும் விழிக்கட்டுமே
(பொன்)
கட்டுக்கூந்தல் தொட்டுத் தாவி
என்னைத் தேடி ஆடிவர
கன்னித்தேனை உண்ணும் பார்வை
வண்ணம் நூறு பாடி வர
மெல்ல மெல்ல மலரட்டும் கவிதை
சொல்லிச் சொல்லி மயங்கட்டும் இளமை
என்னேரமும் உன்னோடு நான்
ஒன்றாகி வாழும் உறவல்லவோ
(பொன்)
ஆடை மூடும் ஜாதிப்பூவில்ஆசை உண்டாக
ஆசை கொண்டு பார்க்கும் கண்ணில்போதை உண்டாக
கண்ணோடு கண் பண் பாடுமோ
பெண் மேனிதான் என்னாகுமோ
அணைத்திடும் கரங்களில் வளைந்து நின்றாடும்
ஆனந்த அருவியில் சுகம் பல தேடும்
(பொன்)
காணொளி: https://youtu.be/RDn6uKUsaro
எளிமையான வரிகள்
வளமையான பொருள்கள் – பாடலுக்கு
பலவிதமான தாளங்கள்
அதற்கேற்ற தமிழ்நாளங்ள் – ஆடலுக்கு
காதலா…பாடலா…புலமையா……
பித்தர்களுக்கு கேற்ற பாடல்தான் நண்பரே
இசையா..பாடலா…ஆடலா….அசத்தல் தான்