கேசவ் வண்ணம் -கிரேசி எண்ணம்

f9f37a91-ea00-418a-b540-6cd98232eb3e

”ஆத்துமாவில் ஓர்கையும், ஆவின்மேல் ஓர்கையும்
மாத்திமாத்தி வைத்தாடும் மந்தியே, -நேத்தி(சரி….முந்தா நேத்தி)
அலைகடல் தாண்டும் அனுமானாய் வந்தாய்
கிளைதாண்டும் இன்று குரங்கு(மனம்)’’….கிரேசி மோகன்…

அடிக்கடி மனம் மாறும் நாம் கூட(சரி…. நான் கூட) குரங்குதான்…. ஆவின்பால் ஆன்மனின் பால் என்று மாறும் நம் மனம் ….மனமென்ன நாமே(சரி…நானே) சத்வ, ரஜஸ், தாமஸக் கிளை தாவும் குரங்குதான்….சத்வம் மேலோங்கினால் சாகரம்(கடல்) தாண்டும் அனுமார்….ரஜஸ், தாமஸம் மேலோங்க வேர் கடலை கொரிக்கும் குரங்கு….டார்வின் சொன்னது ஞாபகம் வந்தது….இது என்னுடைய அனுமானம் தான்….கண்ண ஆத்துமாவிலும்,தின்ன சோத்துமாவிலும் மாத்திமாத்தி கால்வைக்கிறோம்(சரி வைக்கிறேன்)….மனத்துக்கு மாத்திமாத்தி வைக்கக் கால் கிடையாது கை உண்டு….!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *