சங்கர லிங்காஷ்டகம்
இன்று சங்கர ஜெயந்தி….அடியேன் ‘’பிரும்ம முரார்ச்சித ஸேவித லிங்கம்’’ மெட்டில் எழுதிய ‘’சங்கர லிங்காஷ்டகம்’’(பாடியது –கிரி டிரேடிங் திரு.ரங்கனாதன் அவர்கள்) இணைத்துள்ளேன்….
சங்கர லிங்காஷ்டகம்
—————————-
”பிரும்ம முராரி சுரார்ச்சித லிங்கம்”…. மெட்டில்….
—————————————————————-
சத்சிவ சித் தானந்தன லிங்கம்
சகுண உபாசக நிர்குண லிங்கம்
புத்தி அனுக்கிரக பாரதி லிங்கம்
சத் குரு சங்கர தத்துவ லிங்கம்….(1)
தொன்மையில் சிவமாய்த் தோன்றிய லிங்கம்
தென்முகம் நோக்கிய தெய்வத லிங்கம்
சின்மயமான சிதம்பர லிங்கம்
சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(2)
ஆழ்நிலை த்யானத் தசலன லிங்கம்
அண்ட சராசர மாயா லிங்கம்
ஊழ்நாள் ஊர்த்தவ தாண்டவ லிங்கம்
சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(3)
முப்புரம் கனலெரி மூட்டிய லிங்கம்
மன்மத தகன மகாதவ லிங்கம்
அப்புவிண் வாயுமண் அக்கினி லிங்கம்
சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(4)
அயனரி அடிமுடி தேடிய லிங்கம்
அலைகலை தலைமுடி சூடிய லிங்கம்
நயன நுதலிடை நீறணி லிங்கம்
சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(5)
”கனக மகாமழை” காட்டிய லிங்கம்
குருநெறி ”மனீஷா பஞ்சக” லிங்கம்
அனுதினம் ”பஜ கோவிந்தன” லிங்கம்
சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(6)
ஷண்மத ஸ்தாபக சங்கர லிங்கம்
சத்திய சிவமய சுந்தர லிங்கம்
உன்னத அத்வை தாம்ருத லிங்கம்
சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(7)
இகபர சுகமருள் ஈஸ்வர லிங்கம்
இம்மையில் மறுமையை ஈன்றிடும் லிங்கம்
பகலென ஒளிர் பரமாத்மக லிங்கம்
சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(8)
பலஸ்ருதி
————-
ஜயஜய ஹரஹர சங்கர லிங்கம்
ஜனன மரண நிலைநீக்கிடும் லிங்கம்
தயவொடு தாயெனத் தேற்றிடும் லிங்கம்
தந்தை சதாசிவ சங்கர லிங்கம்….
————————————————————————

அருமையான பாடல்; அற்புதமாக இசைத்துள்ளீர். அழகான ஒலிப்பதிவு. கேட்க மிகவும் இனிமையாகவும், தெய்வீகத்தன்மை நனி சொட்டச் சொட்டவும் அமைந்துள்ளது. மிக்க நன்றி.