’’கண்ணன் அனுபூதி’’….
———————————————–

9ff7805d-371f-4766-8a86-b521c44cf7e7
தேற்றி விஜயனைத் தேரேற்றி வில்லேந்தச்
சாற்றினாய் கீதையை சர்வேசா -சேற்றினுள்
பஞ்சப் புரவிகட்(கு) அஞ்சிப் புதைந்திடும்
நெஞ்ச ரதத்தை நிறுத்து….(25)

நிருத்தம் பயில நினக்கொரு வாய்ப்பு
கருத்த நவநீதக் கண்ணா -பருத்த
அகந்தையாம் ஆற்றில் புகுந்ததே ஆசை
முகுந்தாயிக் காளியனுன் மன்று….(26)

மன்றாடி ஈசன் மனம்குளிர மோகினியாய்
அன்றாடிப் பாடிய அச்சுதா -மன்றாடிக்
கேட்கிறேன் வைகுந்தா காட்சிதா கைலாசன்
வேட்கை அளவென் விருப்பு….(27)

விருப்புடன் மாலோலன் விரைகழல் பற்றிச்
சிறப்புடன் வாழ்வோம் செகத்தில் -மறுப்பிதில்
உண்டென்றால் கேளீர் உறங்கையில் உண்டாநீர்
உண்டில்லை சொல்வீர் உடன்….(28)

உடனிருக்கும், ஓட வடமிடும், வாடக்
கடன்பட்டார் நெஞ்சாய்க் கலங்கும் -புடமிட்ட
பொன்னாக்கும் மண்ணை, பொலிவாக்கும் வாழ்க்கையை
கண்ணனைக் கூடிக் கிட….(29)

கிடந்தால் உறக்கம், கிளர்ந்தெழ உண்பாய்
இடர்களையும் சாக்கில் இகத்தை -தொடர்ந்திடும்
இக்கூத்தைக் காண இறைவா எமெக்கெதற்கு
வக்கத்த வேடிக்கை வாய்ப்பு….(30)….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *