ரஜினி மகள் செளந்தர்யா – அஸ்வின் திருமணம்

0

நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யாவுக்கும் தொழிலதிபர் அஸ்வினுக்கும் 2010 செப். 3ஆம் நாள் காலை விமரிசையாகத் திருமணம் நடந்தது.

ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யாவுக்கும் பிரபல கட்டுமானத் தொழிலதிபர் ராம்குமார்-ஹேமா ராம்குமார் தம்பதியின் மகன் அஸ்வினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண நிச்சயதார்த்தம், செப். 2ஆம் நாள் நடைபெற்றது. அடுத்த நாள் காலை, எழும்பூர் ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

முகூர்த்த நேரத்தில் தனது மடியில் செளந்தர்யாவை ரஜினி உட்கார வைத்தார். காலை 8 மணி அளவில் மணமகள் கழுத்தில் அஸ்வின் தாலி கட்டினார். அப்போது மங்கள வாத்தியங்கள் முழங்கின. திருமணத்துக்கு வந்தவர்கள் அட்சதை தூவினார்கள். அக்னியைச் சுற்றியும் வலம் வந்தனர்.
அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், மெட்டி அணிவித்தல் நிகழ்ச்சிகளும் நடந்தன.

மணமக்கள், ரஜினி, லதா காலில் விழுந்து ஆசி பெற்றனர். பின்னர் அவர்களை ரஜினி மேடையில் இருந்து, பார்வையாளர் வரிசைக்கு அழைத்து வந்தார். அங்கு உட்கார்ந்திருந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இயக்குநர் பாலசந்தர், தெலுங்கு இயக்குநர் ராகவேந்திரராவ் ஆகியோர் காலில் விழுந்து ஆசி பெறச் செய்தார்.

இந்தத் திருமணத்திற்கும் அதைத் தொடர்ந்து நடந்த வரவேற்புக்கும் பெரும்பாலான அரசியல், திரையுலக முக்கிய பிரமுகர்கள் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *