கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”அச்சுதன் அன்பினால் ஆமுகம் ஆனதைக்
கச்சிதமாய்க் கேசவ் கொடுத்தனை : -நிச்சயம்
காலிங்பெல் ஓசையிட்டு நோபெல் பரிசளிப்பான்
காளிங்க நர்த்தனன் காண்’’….கிரேசி மோகன்….!
”நினைத்திட நம்முள் நவநீதம் பொங்கும்
கனைத்திடக் காமம் கலங்கும் -மணத்துழாய்
திண்ணிய தோளில் துலங்கும் துவாபரக்
கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!