காயத்ரி

காவல் துறை – இது
கருப்பாடுகள் அடைகின்ற பட்டி:
பல காமத்து வெறியர்
காரியம் முடிக்கிறார்
காக்கிச் சீருடை கட்டி!

ஆறடி உயரமும்
ஆணவத் தோற்றமும்
ஆடவர் யாவர்க்கும்
கிடைப்பதில்லை.
இவை கிடைத்ததில் பலர்
காவலை மீறிச் செய்கிறார்
பல தொல்லை!

கட்சிக்கும் ஆட்சிக்கும்
ஏச்சுக்கும் பேச்சுக்கும்
அரணாய் வந்திறங்குவோர்,
ஒரு வறியவன் மனுவினை
ஏற்றிட மட்டும் ஆயிரம்
நிதி வாங்குவார்.

ஆம்,
காவல் நிலையங்கள் – மாதரின்
கற்பைக் களவாடும்
காம நிலையங்கள்.
காவலர் சிலபேர்
பெண்களைக் குறிவைக்கும்
நெருப்பு வளையங்கள்!

இரவுநேர ரோந்தில் – இவர்
இரக்கமற்ற பருந்தாய்
உதைக்கிறார் சிலரை.
இப்படியும் உழைக்கிறார்
சில்லறை!

இவர் லஞ்சத்தை மட்டும்
கொஞ்சத் தெரிந்தவர்
நல்லவர் நெஞ்சத்தைத் துச்சமெனக்
கொல்லத் தெரிந்தவர்.

இச்செயல்களால் புகைப்படத்திற்குள்
புண்படுகிறார் காந்தி – இவர்
என்று தருவார்
மக்களுக்குச் சாந்தி?

(காயத்ரி, கீழக்கரை, டி.பி.ஏ.கே. கல்லூரியில் ஆங்கில இலக்கியத் துறையில் 3ஆம் ஆண்டு மாணவி)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “காவல் (அற்ற) துறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.