”தினம் ஒரு திருத்தலம்” – தொலைக்காட்சி நிகழ்ச்சி
ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் தினந்தோறும் காலை 07:30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி “தேவதா தர்ஷன்”.
ஆலயம் என்றால் ஆன்மா லயிக்கின்ற இடம் என்று பொருள். அப்படி நமது இதயங்களை இறைவனோடு ஐக்கியப்படுத்தும் அரிய முயற்சியால் உலா வரும் இந்நிகழ்ச்சி தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஆலயங்கள், அவற்றின் தல வரலாற்றுப் பெருமைகள், அந்த ஆலயத்தில் அமைந்துள்ள சந்நதிகள் மற்றும் திருவிழா விவரங்கள் யாவும் விளக்கமாக விவரிக்கப்படுகிறது.
காட்சிகளுடன் கருத்தையும் கவரும் வகையில் எந்தெந்த ஆலயங்களுக்கு என்னென்ன பரிகாரம், வழிபாட்டு முறைகள், சென்று வருவதற்கான வழிகாட்டு முறைகள் என பல்வேறு அம்சங்கள் படம் பிடிக்கப்பட்டு ஒளிபரப்பாகும். இந்நிகழ்ச்சியில் காண்போரின் நெஞ்சம் உருகும் வகையிலான அற்புதமான பாடல்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.