கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

’’ஆரணர்(ஆரணம் -வேதம்….வேத வ்யாஸர்) சொன்னது, வாரணர் வாக்கிது,
நாரணர்பூ பார நிவிருத்தி -பாரதம்:
வேதர் உரைத்தது, வேழர் வடித்தது
கீதையாம் பாரதக் குட்டு”(மகாபாரதக் குட்டு-WRITERS BLOCK)….கிரேசி மோகன்….!
முனிவன் உரைத்த மகாபா ரதத்தை
பணிவும் குறும்பும் பெருகும் -வினய
முகத்துடன் மூஷிக வாகனன் தந்த
நகத்தால் வடித்தல் நயம்….!
வேறு
————
பொன்மகள் அமர்ந்து பாத பங்கயம் பிடித்திட
பொன்னிசூழ் அரங்கில் ஆதி சேடனார் படுக்கையில்
தென்னிலங்கை வென்ற சோர்வில் கண்துயின்றவன் புகழ்
பண் சிறக்க பாரதம் வடித்த வாரணம் சரண்….கிரேசி மோகன்….!