‘எந்திரன்’, அக்.1 அன்று வெளியாகிறது
‘எந்திரன்’ திரைப்படம், 2010 அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகிறது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘எந்திரன்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்துள்ளனர். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள், 2010 ஆகஸ்டு மாதம் மலேசியாவில் வெளியிடப்பட்டது. இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் 2010 செப்.11 அன்று நடந்தது.
இதைத் தொடர்ந்து, ‘எந்திரன்’ படம், உலகம் முழுவதும் 2010 அக்.1 அன்று வெளியாகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, இதர ஐரோப்பிய நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. தமிழில் மட்டுமி்ன்றி, தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ‘எந்திரன்’ வெளியாகிறது.
‘எந்திரன்’ வெளியீட்டுத் தேதி முடிவானதால், திரையரங்குகளில் முன்பதிவு சூடு பிடித்துள்ளது.