நால்வர் சரித்திரம் & நாதோபாசனா
ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இரண்டு நிகழ்ச்சிகள் பற்றிய செய்திக் குறிப்பு வருமாறு:
நால்வர் சரித்திரம்
ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் உபன்யாச நிகழ்ச்சி, நால்வர் சரித்திரம்.
பிரம்மஸ்ரீ தாமோதர தீட்சிதர், தம் குழுவினருடன் வழங்கும் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
திருநாவுக்கரசர், சுந்தரர் உள்ளிட்ட நால்வரது வாழ்க்கை வரலாற்றை உரிய பாடல்களுடன் ஸ்ரீ தாமோதர தீட்சிதர் விரிவாக விளக்கி உபன்யாசம் செய்வது சிறப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பக்க வாத்தியங்களின் பங்களிப்பும் இன்றியமையாததாக உள்ளது.
எளிய நடையில், எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் வாரந்தோறும் அரங்கேறும் இந்த நிகழ்ச்சி தரமான முறையில் படம்பிடிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.
==================================
நாதோபாசனா
(திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு)
ஸ்ரீ சங்கரா டிவியில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, நாதோபாசனா.
கைதேர்ந்த கர்நாடக இசைப் பாடகர்கள் தக்க பக்க வாத்தியங்களோடு படைக்கும் இந்நிகழ்ச்சி, கர்நாடக இசைப் பிரியர்களுக்கு நல்விருந்தாக அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் புரந்தரதாசரின் கீர்த்தனைகள் மற்றும் இசை மும்மூர்த்திகளின் கீர்த்தனைகளும் பாடப்படுகிறது. மேலும், கர்நாடக பக்தி இசைப் பாடல்களும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.
பிரம்மாண்டமான அரங்கத்தில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இந்நிகழ்ச்சி படம் பிடிக்கப்பட்டு ஒளிபரப்பப்படுவதால் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
கைதேர்ந்த கர்நாடக இசைப் பாடகர்கள் அவரவர்களுக்கு உரிய தனிப் பாணியில் தரமான முறையில் இந்நிகழ்ச்சியை வழங்குகின்றனர். பக்க வாத்தியக்காரர்களும் பாடுபவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு உற்சாகமாக வாசிப்பதால் இந்நிகழ்ச்சிக்கு மேலும் மெருகேறுகிறது.