மூன்று மாவீரர்கள் – திரைப்படம் – செய்திகள்

நம் ஊரில் தான் எழுத்து வடிவில் வந்த படைப்புகளை திரையில் கொண்டு வரத் தயங்கும் நிலை உள்ளது.  ஆனால் ஹாலிவுட்டில் ஏற்கனவே காமிக்ஸ்களாக, நாவல்களாக வந்த படைப்புகளை துணிச்சலாக படமாக்க இறங்குகிறார்கள்.  அப்படைப்புக்கு பிரம்மாண்டத்தையும் கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தையும் பக்கப் பலமாக வைத்து கொண்டு சாதித்து விடுகிறார்கள்.  ரிஸ்க் கதையான மூன்று மாவீரர்கள் படத்தை ரஸ்க் சாப்பிடுவது போல இயக்குனர் பால் W.S.ஆண்டர்சன் இயக்கியிருக்கிறார்.

இவர் ஏற்கனவே Resident Evil பட வரிசை முலம் கலக்கியவர்.  மில்லா ஜோவாவிச்(நடிகை), இயக்குனர் பால் W.S. ஆண்டர்சன் இருவரும் சேர்ந்து பணியாற்றிய படங்கள் அனைத்துமே வசூலில் பாக்ஸ் ஆபீஸை தொட்டவை.  The three musketeers   படம் முலம் அதை மீண்டும் நிரூபிக்க வருகின்றனர்.  இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்பது குறுப்பிடதக்கது.  உலகமெங்கும் வரும் வெள்ளி முதல் வெளி வருகிறது The three musketeers.  இது ஒரு PVR pictures வெளீயீடு.

About செய்தியாளர்-1

வல்லமை செய்தியாளர்-1

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க